ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டம் குறித்த சுவாரசியமான அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்
ஆதாம் ஏவாள் என்ற ஆண் பெண் வாழ்ந்தனரா? அவர்கள் தான் அனைவருக்கும் தாய் தந்தையரா? வாருங்கள் கண்டறிவோம்.
இந்த கூற்றை மெய்ப்பிக்க ஒரே வழிதான் - அதாவது உலகில் உள்ள அனைவரும் ஒரே தாய் தந்தையில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் பலுகி பெருகி வந்துள்ளனர் என்பதே. இது எளிதல்ல. ஆனால் மனப் பூர்வமாக நம்பலாம். அறிவியல் கூறும் உண்மை இது!
"மரபணு சோதனை" என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மரபணு சோதனை மூலம் ஒரு குழந்தையின் உண்மையான தாய் தந்தை யார் என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இந்த மரபணு சோதனை எப்படி செய்வார்கள் என்று பார்போம்.
அதாவது ஒவ்வொரு மனிதரின் உடலும் பல உயிரணுக்களால் (செல்கள்) உண்டானது. ஒவ்வொரு உயிரனுக்குள்ளும் உயிரணுக்கரு (நியூக்ளியஸ்) இருக்கும். இந்த உயிரணுக்கருவில் தான் பரம்பரையை கண்டுபிடிக்க கூடிய மரபணுக்கள் (ஜீன்ஸ்) இருக்கும். இந்த ஜீன்கள் (மரபணு), டி.என்.ஏ என்ற அமிலத்தால் உண்டானவை. இந்த அமிலத்தை ஒப்பிட்டு ஒரு குழந்தையின் உண்மையான தாய் தந்தை யார் என்பதை கண்டு பிடித்துவிடலாம். இதே டெஸ்ட் மூலம் ஒரு குழந்தையின் பாட்டி தாத்தாவையும் கண்டு பிடிக்கலாம். இப்படி அந்த குழந்தையின் முன்னோர்களை கூட கண்டு பிடிக்கலாம். ஆனால், சில முந்திய தலைமுறைகள் முன்பு வரை கண்டுபிடித்துவிட்டபிறகு இந்த ஜீன்கள் அதற்கு முன்னிருந்த அந்த குழந்தையின் முன்னோரை அடையாளம் காட்ட தவறுகிறது. எனவே, இந்த டெஸ்டை வைத்து அனைவரும் ஒரே தாயில் இருந்து வந்தவர்கள் என்பதை நிரூபிக்கமுடியாது.
ஆனால், இந்த உயிரணுக்கருவில் உள்ள டி.ஏன்.ஏ மட்டும் அன்றி, உயிரணுகருவிற்கு வெளியில் சில டி.ஏன்.ஏ அமிலம் மைட்டோகாண்டிரியா (இழைமணி) என்ற உயிரணு பகுதியிலும் உள்ளது. இந்த மைட்டோகாண்டிரியா பகுதியில் உள்ள டி.ஏன்.ஏ எத்தனை தலைமுறைகள் ஆனாலும் மாறாமல் அப்படியே சந்ததி சந்ததியாக வந்து கொண்டே இருக்கும். ஏன் என்றால், உயிரணுகருவில் உள்ள டி.ஏன்.ஏ தந்தையால் ஒவ்வொரு சந்ததியிலும் மாறுபட்டுகொண்டே இருக்கும். ஆனால் மைட்டோகாண்ட்ரியாவில் உள்ள டி.ஏன் ஏ ஒரு தாயில் இருந்து அப்படியே காலங்காலமாக வந்துகொண்டேயிருக்கும். இன்னும் பத்தாயிரம் சந்ததிகள் போனாலும் மாறவே மாறாது. எனவே இந்த மைட்டோகாண்டிரியாவில் உள்ள டி.ஏன்.ஏ - வை கொண்டு பல மக்களிடம் சோதனை செய்து பார்த்தால் இவர்கள் எல்லாம் ஒரே தாயில் இருந்து வந்தவர்களா என்று தெரிந்துவிடும்!
இதற்காக சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளில் இருந்து கிட்டத்தட்ட 150 மக்கள் வரவழைக்கப்பட்டனர். அதவாது, ஒரு கருப்பு இனத்தை சார்ந்த ஆப்ரிக்கர், ஒரு வெள்ளை காரர், ஒரு சீனர், ஒரு இந்தியர், ஒரு விஞ்ஞானி, ஒரு விவசாயி, ஒரு ஆதிவாசி, ஒரு பட்டணத்தார், ஒரு பழங்குடி இனர் என்று பல்வேறு தரப்பில் மக்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் நடத்தப்பட்ட இந்த மரபணு சோதனை மிகவும் முக்கியமானது! ஏன் என்றால், அத்தனை பேருக்கும் வியக்க வைக்கும் வண்ணம் ஒரே மைட்டோகாண்டிரியா டி.என்.ஏ தான் இருந்தன. இதன் மூலம் இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் ஒரே தாயில் இருந்து தான் வந்திருக்கமுடியும் என்று நூறு சதவீதம் கூறுகின்றனர்!
மனிதர்கள் ஒரே தாயில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற கண்டுபிடிப்பையும், மூன்று கண்டங்களான ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகியவை கூடும் இடத்தில் தான் (துருக்கியும் அங்கு தான் உள்ளது) அந்த ஒரே தாயில் இருந்து வந்த ஆதி மக்கள் வாழ்ந்து, பெருகி உலகம் முழுவதும் பரவியிருக்கவேண்டும் என்ற கண்டுபிடிப்பையும் ஆய்வியல் தான் கூறுகிறது
- இதனை விக்கிபீடியா சென்று, Mitochondrial Eve என்ற தலைப்பின் கீழ் காணலாம்!
ஒரே தாய் என்றால், ஓர் தந்தை இருக்க வேண்டும். அது மட்டும் இல்லை. அந்த மூதாதையர் ஆசிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்கள் ஒன்று சேரும் இடத்தில் தான் இருந்திருக்க வேண்டும் என்று நிச்சயித்து கூறுகின்றனர். அந்த மூன்றும் கண்டங்களும் கூடும் இடத்தில் தான் இன்றைய துருக்கி நாடு உள்ளது. இந்த துருக்கி நாடு பைபிளில் ஒரு முக்கிய இடத்தை தன்னுள் கொண்டிருக்கிறது! அது - ஏதேன் தோட்டம் (விவரங்கள் கீழே)
துருக்கி நாட்டில் 1994 ஆடு மேய்க்கும் ஒரு இடையர் வித்யாசமாக 'T' வடிவத்தில் சில கற்கள் அந்த பகுதியில் இருப்பதை கண்டு துருக்கி அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க, அவர்கள் ஜெர்மன் நாட்டில் இருந்து சில அகழ்வாராய்ச்சி நிபுனர்களை வரவழைத்து அவர்கள் உதவியுடன் அந்த இடங்களை அகழ்ந்து ஆராய்ந்தனர். அப்பொழுது உலகின் மிக பழமையான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அந்த இடத்திற்கு பெயர் 'கொபெக்லி திபே'. இதுவே ஆதாம் ஏவாள் வாழ்ந்த ஏதேன் தோட்டம் இருந்த இடமாக இருக்கும் என்று சந்தேகிக்கபடுகிறது! பல குறிப்புகள் பைபிளுடன் ஒத்து போகின்றன.
1) 'கொபெக்லி திபே' கற்களை விட பழமையான மனிதனால் செதுக்கப்பட்ட கட்டிடகலை உலகில் எங்குமே இல்லை. கொபெக்லி திபே கற்களை ஆராய்ந்ததில் அவை 13,000 வருடங்களுக்கு முன்பு (கி.மு11000) செதுக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொபெல்கி திபே கற்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 6,500 வருடங்கள் வரை மனிதனால் ஆக்கப்பட்ட, செதுக்கப்பட்ட எந்த கல் கட்டிடக்கலையும் இல்லை. எனவே ஆதி மனிதர்கள் துருக்கி பகுதியில் தான் வாழ்ந்தனர் என்றும் அங்குதான் முதலில் நாகரீகம் பிறந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - (பைபிளில் உள்ள முதல் இடம் - ஏதேன் தோட்டம்)
2) 'கொபெக்லி திபே' கொண்டுள்ள கட்டிடகலை ஒரு வழிபாட்டு தளம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது! 'மனிதன் வசித்த வீடு போன்ற இடம்' என்பதற்கு எந்த தடயமும் அங்கு இல்லை. ஆனால், T வடிவ செதுக்கப்பட்ட தூண்கள் வட்ட வட்டமாக அமைந்துள்ளன. மேலும் சித்திரங்களும் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. இதனால் சரித்திரம் மிக பெரிய மாற்றத்தை பெற்றுள்ளது. 'கொபெக்லி திபே' கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை, முதலில் விவசாயம் பிறந்திருக்கும் அதன் பின்பு தான் இறை வழிபாடு பிறந்திருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இந்த கண்டுபிடிப்புக்கு பின் வழிபாடே முதலில் வந்தது என்பது உறுதியாகி விட்டது. ஏன் எனில் இதற்கு பல ஆண்டுகளுக்கு பின்பு தான் விவசாயத்திற்கான அறிகுறிகள் தெரிகின்றன - (பைபிளில் முதலில் வழிபாடு பின்பே விவசாயம்)
3) 'கொபெக்லி திபே' கற்கள் அமைந்துள்ள இடம் பழங்காலத்தில் செடிக்கொடி மரங்கள் நிறைந்த இடம் என்பது அந்த இடத்தில் அகழந்த போது கிடைத்த படிமங்கள் மூலம் தெரியவந்தது - (ஏதேன் தோட்டம் மரஞ்செடிகள் நிறைந்த இடம்)
4) 'கொபெக்லி திபே' கற்கள் பெரும்பாலும் சிங்கம், வாத்து, நெருப்புகோழி, ஊர்வன மிருகங்கள் போன்ற சிற்பங்கள் தான் கொண்டுள்ளன - (ஏதேன் தோட்டத்தில் விலங்குகள் பறவைகள் நிறைந்திருந்தன)
5) 'கொபெக்லி திபே' தளத்தில் முழுதாக செதுக்கப்பட்ட ஒரு ஆண் சிலையும், ஆடைகளின்றி அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் சிலையும் உள்ளது - (ஆதாம் என்ற ஆணும், ஏவாள் என்ற பெண்ணும் ஆடைகளின்றி ஏதேனில் வாழ்ந்தனர்)
6) அதே இடத்தில், பாம்பின் உருவம் ஒரு கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது - (ஏதேனில் ஏவாள் பாம்பால் வஞ்சிக்கபட்டாள்)
7) 'கொபெக்லி திபே' பகுதியில் இருந்து சிறிது விலகி தனியாக ஒரு மரம் மட்டும் உள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு முன்பிருந்தே அந்த பகுதி வாசிகள் அந்த மரத்தை காரணமே தெரியாமல் காலங்கலமாக புனிதமாக எண்ணி வருகின்றனர். அநேகமாக ஒரு மரம் பட்டுவிட்டவுடன் அந்த இடத்தில் பட்டுப்போன மரத்தின் விதையில் இருந்து மீண்டும் மரக்கன்று வளர்த்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது - (ஏதேன் தோட்ட சிறப்பு 2 வாய்ந்த மரங்களை பைபிள் குறிப்பிடுகிறது)
8) 'கொபெக்லி திபே' தளத்தில் இறகுகளுடன் கூடிய சில மனிதர்கள் நிற்பது போன்ற உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன - (ஏதேன் தோட்டத்தை சுற்றி இறைவன் கேருபீன்கள் என்ற தேவதூதர்களை காவல் வைத்தார்)
9) 'கொபெக்லி திபே' தளம் இதெக்கேல் ( TIGIRIS ), ஐபிராத்து (EUPHRATES) என்ற நதிகள் ஒன்று கூடும் இடத்தின் அருகில் உள்ளது - (ஏதேன் தோட்டம் இதெக்கேல், ஐபிராத்து நதிகள் கூடும் இரண்டு நதிகள் கூடும் இடத்தின் அருகில் இருந்ததாக பைபிள் கூறுகிறது - இன்னும் 2 நதிகள் பரலோக நதிகள் என்பது கவனிக்கத்தக்கது)
10) விவசாயத்திற்கான முதல் அறிகுறி, கொபெக்லி திபே காலத்திற்கு பின்பு, துருக்கியில் தான் தென்படுகிறது - (ஆதாம் ஏவாளின் முதல் மகன் காயீன் விவசாயம் செய்பவனாக மாறியதாக பைபிள் கூறுகிறது)
11) விவசாய அறிகுறிக்கு சில ஆண்டுகளுக்கு பின்பு கால்நடை வளர்ப்புக்கான முதல் அறிகுறியும் துருக்கி நாட்டில் தான் தெரிகிறது - (ஆதாம் ஏவாளின் இரண்டாம் மகன் ஆபேல் ஆடு மேய்ப்பவனாக மாறியதாக பைபிள் கூறுகிறது)
12) கொபெக்லி திபே பகுதியின் அருகில் மற்றும் சுற்று புறங்களில் இறைவனுக்கு உயிர்களை பலி கொடுக்கும் சம்பவங்கள் பல்லாயிர கணக்கான வருடங்களுக்கு முன்பு விளங்கியது உறுதி செய்யபட்டுள்ளது. அந்த பகுதிகளில் தோண்டிய போது மண்டை ஓடு இல்லாத மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. அருகிலேயே தனியாக மண்டை ஓடுகள் மட்டும் புதைக்கப்பட்டுள்ளன - (காயீனும் ஆபேலும் முதற்பலனை கடவுளுக்கு கொடுத்ததாக பைபிள் கூறுகிறது. மேலும் காயீன் ஆபேலை கொன்றதாகவும் பைபிள் கூறுகிறது)
ஆக மொத்தம், பைபிள் எழும்பவதற்கு முன்பிருந்தே ஆதாம் ஏவாள் பற்றி மக்களுள் செய்திகள் விளங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொபெக்லி திபே ஏதேன் தோட்டம் அமைந்த இடமாக என்று பல காரணங்கள் ஒத்து போவாதால் சந்திக்கப்படுகிறது. மக்கள் அவ்விடத்தில் கற்களை செதுக்கி, மனித உருவங்களை செதுக்கி வழிபட்டு வந்ததும் உறுதி செயப்பட்டுள்ளது.
"மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப் பட்டவைகளோ, இந்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும் படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்." - உபாகமம் 29:29 (பைபிள்)
பைபிளில் உள்ள ஆதாம் ஏவாள் சம்பவங்களுக்கு சில தடயங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் பட்டியல்.
1) எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு
2) உயிர்கள் மண்ணில் இருந்து தோன்றிய தடயங்கள்
3) பாம்புகள் கால்களுடன் இருந்தன என்ற கண்டுபிடிப்பு
4) ஆதி மனிதர்கள் துருக்கியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்ற ஆய்வு
5) துருக்கியில் தான் நாகரீகம் முதலில் தோன்றியுள்ளது என்ற கண்டுபிடிப்பு
6) விவசாயத்திற்கு முன்பு வழிபாடு தோன்றிய கண்டுபிடிப்பு
7) கொபெல்கி திபே பகுதியின் தனி அம்சங்கள்
- உலகிலேயே பழங்கால முதல் கல் கட்டிடகலை
- ஏதேன் தோட்டம் அமைந்திருந்ததாக கூறப்படும் அதே இடம்
- செடிகொடிகள் நிறைந்த இடமாக விளங்கியது என்ற ஆய்வு முடிவு
- பறவை விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன
- முழுவதாக செதுக்கப்பட்ட ஒரு ஆண் சிலை
- ஆடையின்றி அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிலை
- அங்கேயே காணப்படும் பாம்பின் சிலை
- தேவதூதர்கள் போன்ற அமைப்புடைய சிற்பங்கள்
- புனிதமாக எண்ணப்படும் ஒரு தனி மரம்
- வழிபாட்டு ஸ்தலம் என்ற முடிவு
- அருகிலேயே விவசாயத்திற்கான முதல் அறிகுறிகள்
- அதன் பின்பு தோன்றும் கால்நடை வளர்ப்பிற்கான முதல் அறிகுறிகள்
- பலி நரபலி செலுத்தியதற்கான அறிகுறிகள்
8) குறிப்புகள் என்று புதிர் போடும் பைபிள்!
நன்றி:இவர்யார்
0 comments:
Post a Comment