"வானில் இருந்து ஒரு தூதன் இறங்கி வேறொரு சுவிசேசத்தை பிரசங்கித்தால் கூட நம்ப வேண்டாம், அத்தகைய தூதன் கூறுவதை கேட்டு போதிக்கிறேன் என்று கூறும் நபர்களையும் நம்ப வேண்டாம், அவர்கள் சாத்தனின் தூதர்கள்" - பவுல்
பிணியாளர்களை சுகமாக்கும் பர்னபா |
சில முஸ்லிம்கள் சமீப காலமாக பர்னபாவின் சுவிசேஷம் என்ற ஒரு பழங்கால கையேடை காட்டி இயேசுவை குறித்த இஸ்லாமிய கொள்கைகளே சரி என்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் தவறு என்றும் கூறி வருகிறார்கள். இந்த பதிவில் ஏன் பர்னபாவின் சுவிசேஷத்தை ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பது குறித்து பார்க்கப்போகிறோம்.
முதலில், "பர்னபாவின் சுவிசேசம்" என்ற நூலும், "பர்னபா எழுதிய நிருபம்" என்ற நூலும் வெவ்வேறு நூல்கள் என்பதை நினைவில் கொள்க.
அப்படி பர்னபாவின் சுவிசேசம் என்னதான் கூறிவிட்டது?
பர்னபாவின் சுவிசேசம் என்ற நூல் ஏசுநாதரின் வரலாறை எடுத்துக்கூறும் ஒரு பழங்கால கையேடு. முஸ்லிம் கொள்கைகளைத் தூக்கி பிடித்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. "இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அவருக்கு பதிலாக இயேசுவை காட்டி கொடுத்த இயேசுவின் சீடர் யூதாஸ் காரியோத்தை இயேசு என்று நினைத்து யூதர்கள் சிலுவையில் அறைந்துவிட்டனர். கல்லறையில் வைக்கப்பட்ட யூதாசின் உடலை இயேசுவின் பிற சீடர்கள் எடுத்து ஒளித்து வைத்து விட்டு இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று செய்திகளைப் பரப்பினர், ஏசுவோ உலகில் தன் வேலை முடிந்தவுடன் மீண்டும் தன் உடலோடு பரலோகத்திற்கு எழுந்தருளி சென்றுவிட்டார்" என்று இந்நூல் கூறுகிறது. மேலும் இந்நூலில், இயேசு தன்னை இறைமகன் என்று கூறிய சீடர் பேதுருவை "சாத்தானே" என்கிறார். தன்னை நோக்கி "நீர்தான் மேசியாவா?" என்று கேட்கும் யூதர்களிடம் இயேசு, "நான் மேசியா அல்ல, முகமது என்பதே அவரின் ஆசீர்வதிக்கப்பட்ட பெயர்" என்கிறார். (பைபிள், குர்ஆன் ஆகிய இரண்டு நூல்கள் படியும் மேசியா இயேசுவே, முகமதல்ல - மேசியா என்பதற்கு 'இறைவனால் அபிஷேகம் பெற்றவர்' என்று பொருள்)
பர்னபாவின் சுவிசேஷம் யாரால் எப்பொழுது எழுதப்பட்டதாக இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்?
பர்னபாவின் சுவிசேசம் இயேசுவின் சீடரான பர்னபாவால் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். பர்னபாவின் சுவிசேசத்தில் "இச்செய்திகள் இயேசுவின் சீடர் பர்னபாவால் எழுதப்பட்டவை" என்று எழுதப்பட்டுள்ளதே இதன் காரணம்.
முதலில் அறியவேண்டியது:
பர்னபாவின் சுவிசேசத்திற்கு 16ஆம் நூற்றாண்டிற்கு முன்பு விளங்கிய பிரதிகள் ஒன்று கூட இல்லை. இன்று நம்மிடம் இருக்கும் பர்னபாவின் சுவிசேசம் 16ஆம் நூற்றாண்டை சார்ந்தது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் . முதல் நூற்றாண்டிலேயே பர்னபாவின் சுவிசேசம் எழுதப்பட்டுவிட்டதாகவும் அதன் ஒரு பிரதியே தற்போது நம்மிடம் உள்ள 16ஆம் நூற்றாண்டின் நூல் என்பது இஸ்லாமியர்களின் வாதம். சிலர், "பர்னபாவின் சுவிசேசம் கிரேக்க மொழியில் உள்ளது, ஏசுநாதர் பேசிய அரமாயிக் மொழியில் எழுதப்பட்டுள்ளது" என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.உண்மையில் நம்மிடம் தற்போதுள்ள நூல் லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. பர்னபா சுவிசேசத்திற்கு தற்போதுள்ள லத்தீன் பிரதியைத் தவிர்த்து ஒரே ஒரு பிரதியே உள்ளது - அது ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்டது. அதுவும் 16ஆம் நூற்றாண்டை சார்ந்ததே. ஆனால் ஸ்பானிஷ் பிரதி தொலைந்துவிட்டது. அதன் ஒரு சில வசனங்கள் 18ஆம் நூற்றாண்டை சார்ந்த வேறொரு நூலில் மேற்கோள்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"16ஆம் நூற்றாண்டை சார்ந்த ஒரே லத்தீன் பிரதியும், 18ஆம் நூற்றாண்டை சார்ந்த ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஸ்பானிஷ் வசனங்களும் மட்டுமே பர்னபாவின் சுவிசேசத்திற்கு என்று நம்மிடம் தற்போதுள்ள கையேடுகள். இதையன்றி வேறெதுவும் இல்லை" என்பதை நினைவில் கொள்க.
இனி, "முதல் நூற்றாண்டிலேயே பர்னபாவின் சுவிசேசம் எழுதப்பட்டது, அதன் ஒரு பிரதியே தற்போது நம்மிடம் உள்ள 16ஆம் நூற்றாண்டின் நூல்" என்ற இஸ்லாமியர்களின் கூற்று உண்மையா என்று காணலாம்.
இதற்கு தரும் பதில் - "இல்லை, முதல் நூற்றாண்டில் அத்தகைய நூல் எழுதப்படவில்லை, தற்போதுள்ள 16 நூற்றாண்டை சார்ந்த பர்னபாவின் சுவிசேசம் 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஸ்பெயின் நாட்டில் பர்னபாவின் பெயரைக் கொண்டு இஸ்லாமியர் ஒருவரால் எழுதப்பட்ட போலி சுவிசேசம் என்பதே நிதர்சனமான உண்மை. இந்த நூலை ஆராய்ந்த சில இஸ்லாமியர் உட்பட அத்தனை வரலாற்று ஆசிரியர்களும் இவ்வாறே முடிவு செய்துள்ளனர்.
1. பர்னபாவின் சுவிசேஷம் என்ற நூல் முதல் நூற்றாண்டில் விளங்கியதா?
பர்னபாவின் சுவிசேசம் என்ற நூல் முதல் நூற்றாண்டில் விளங்கியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 4ஆம் நூற்றாண்டை சார்ந்த ஒரு கையேடு திருச்சபையால் புறக்கணிக்கப்பட்ட நூல்களின் பட்டியலை கொண்டுள்ளது. அதில் "பர்னபாவின் சுவிசேசம்" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ளது. 4ஆம் நூற்றாண்டை சார்ந்த இந்த கையேடு தான் 'பர்னபாவின் சுவிசேசம்" என்ற நூல் விளங்கியது என்பதற்குரிய முதல் ஆதாரம்.
இயேசுவை குறித்து 6ஆம் நூற்றாண்டில் முகமது அவர்களால் எழுந்த இஸ்லாமிய போதனைகளே உண்மை என்றும் அதனையே "பர்னபாவின் சுவிசேசம்" கூறியுள்ளது என்றும் அதன் காரணமாகவே திருச்சபையால் அந்நூல் புறக்கணிக்கப்பட்டது என்பதும் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு.
முதலாவதாக, 4ஆம் நூற்றாண்டு கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் "பர்னபாவின் சுவிசேசம்" என்ற நூலும் தற்போது நம்மிடம் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பர்னபாவின் சுவிசேசம் என்ற நூலும் ஒரே நூல் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? தற்போது நம்மிடம் உள்ள 16ஆம் நூற்றாண்டின் பர்னபா சுவிசேசம் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மோசடி என்பதற்கு மிகையான ஆதாரங்கள் உள்ளன.
இரண்டாவதாக, 4ஆம் நூற்றாண்டு கையேட்டில் காணப்படும் திருச்சபையால் புறக்கணிக்கப்பட்ட நூல்களின் பட்டியலில் "பர்னபாவின் சுவிசேசம்" என்ற நூலிற்கு மேலே "பர்னபா எழுதிய நிருபம்" என்றும் நூலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4ஆம் நூற்றாண்டை சார்ந்த பர்னபாவின் நிருபத்தின் பிரதி ஒன்று இன்றும் நம்மிடம் உள்ளது. அதில் இறைமகன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார், வான் எழுந்தார் என்று கிறிஸ்தவ போதனைகள் வலியுறுத்தப்பட்டே எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நூல் புறக்கணிக்கப்பட காரணம் அது முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதா என்ற ஐயப்பாடே.
எனவே, நான்காம் நூற்றாண்டு கையேட்டில் குறிப்பிடப்படும் "பர்னபாவின் சுவிசேசம்" என்ற நூலும் தற்போது நம்மிடம் உள்ள பர்னபாவின் சுவிசேசம் எனப்படும் 16ஆம் நூற்றாண்டின் பிரதி நூலும் முதலில் ஒரே நூல் தானா என்று நோக்கவேண்டும்.
ஏன் தற்போதுள்ள பர்னபாவின் சுவிசேசம் ஒரு மோசடி நூல்?
1) முதல் நூற்றாண்டு ஞானம் ஆசிரியருக்கு இல்லை
அ) 'கிறிஸ்து' என்ற வார்த்தைக்கு கூட பொருள் தெரியாத ஆசிரியர்:
தற்போதுள்ள பர்னபாவின் சுவிசேசத்தை எழுதியவருக்கு 'கிறிஸ்து' என்ற வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியவில்லை. 'இறைவனால் அபிஷேகம் பெற்றவர்' என்பதற்கு எபிரேய மொழியில் 'மேசியா' என்ற சொல்லை பயன்படுத்துவர், கிரேக்க மொழியில் 'கிறிஸ்து' என்று குறிப்பிடுவர். கிறிஸ்தவ வட்டாரத்தில் 'கிறிஸ்து' என்றாலும் 'மேசியா' என்றாலும் ஒன்றுதான். இந்த அடிப்படை ஞானம் கூட தற்போதுள்ள பர்னபாவின் சுவிசேஷம் என்ற மோசடி நூலை எழுதியவருக்கு தெரியவில்லை.
"இறைவன் எங்களை இறைதூதரான இயேசு கிறிஸ்துவின் மூலம் சந்தித்தார்" என்று இந்நூல் துவங்குகிறது (பத்தி 2)
ஆனால் நூல் முழுவதும் இயேசு தன்னை மேசியா இல்லை என்று மறுதலிக்கிறார். கேட்கபவர்களிடம் எல்லாம் 'எனக்குப்பின் வரப்போகும் முகமது என்பவரே மேசியா' என்று இயேசு கூறுகிறார் (பாகம் 42)
'கிறிஸ்து', 'மேசியா' என்ற இரு வார்த்தைகளின் பொருள் ஒன்றே என்பதை கூட அறியாமல் பிதற்றும் ஆசிரியர் இயேசுவின் சீடர் பர்னபாவா?
ஆ) சரித்திர ஞானம் இல்லாத ஆசிரியர்:
இயேசு பிறந்த காலத்தைக் குறிக்க முனையும்போது ஆசிரியர் தவறுகிறார்.
பாகம் 3 - "அச்சமயம் யூதேயாவை அகஸ்டஸ் சீசருக்காக ஏரோது மன்னன் ஆண்டு வந்தான், பிலாத்து ஆளுநராக இருந்தான்"
இயேசு பிறக்கும் பொழுது யூதேயாவில் பிலாத்து ஆளுநராக இல்லை. பிலாத்து கி.பி 26-36 தான் யூதேயாவின் ஆளுநராக பதவி வகித்தார்.
பர்னபா முதல் நூற்றாண்டை சேர்ந்த யூதர். அப்பகுதியில் வாழ்ந்தவர். தன் காலத்தில் தன் நாட்டை ஆண்ட ஆளுநரைப் பற்றி பர்னபாவிற்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
இ) இயேசு வாழ்ந்த பகுதிகளைக் குறித்த ஞானம் ஆசிரியருக்கு இல்லை:
பாகம் 20-21: "இயேசு கலிலேயாவின் கடலோரத்திற்கு சென்று கப்பலேறி தன் ஊரான நாசரேத்திற்கு சென்றார். அவர்கள் நாசரேத்தை அடைந்தவுடன் அங்கிருந்த கடலோர மக்கள் இயேசுவை வரவேற்று அவரை பற்றி அப்பகுதியில் பரப்பலாயினர். அதன் பின் இயேசு கப்பர்நாகூம் வரை சென்றார்"
மேலே பர்னபாவை போல பாவிக்கும் ஆசிரியர் நாசரேத்தை கடலோர கிராமம் என்கிறார். இது பெரும் தவறு. நாசரேத்து கடல் பகுதியில் இருந்து 14 கி.மீ தூரத்தில் ஒரு மலை மீது அமைந்துள்ள ஊர். இயேசுவின் சீடர்கள் அவரோடு பல இடங்களுக்கு சென்றவர்கள். அவர்கள் அடிக்கடி சென்ற இடங்கள் நாசரேத்தும் கப்பர்நாகூமும் தான். பர்னபாவிற்கு இந்த இடங்கள் பழக்கமானவை.
மொழி, இடம், காலம் என்று எல்லா அடிப்படை தகுதிகளிலும் இந்நூலின் ஆசிரியர் தவறுகிறார்.
2. 14 ஆம் நூற்றாண்டின் சம்பவங்கள் பர்னபா சுவிசேசத்தில்!
இயேசுவின் சீடரால் எழுதப்பட்டது என்று கூறப்படும் பர்னபா சுவிசேசத்தில் 14ஆம் நூற்றண்டின் சம்பவங்கள் காணப்படுகிறது. பர்னபாவின் பெயரை பயன்படுத்தும் ஆசிரியர் சில வசனங்களில் 14ஆம் நூற்றாண்டு சம்பவங்களை பிதற்றியிருக்கிறார். தனக்கு 1400 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவங்கள் பற்றி பர்னபாவிற்கு எப்படி தெரியும்?
அ) 100 ஆண்டு பெருவிழா கொண்டாட்டம்:
"ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக் கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக் கடவன். அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாய் இருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக" - லேவியராகமம் 25:10,11
ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை விடுதலை பண்டிகை ஒன்று கொண்டாடுமாறு யூதர்களின் வேதமான லேவியராகமத்தில் ஒரு கட்டளை எழுதப்பட்டிருக்கிறது. 14ஆம் நூற்றாண்டில் பைபிள் பொது மக்களிடம் இல்லை, திருச்சபையே வேதத்தை கொண்டிருந்தது. 1300-இல் போப் 8ஆம் போனிபேஸ் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை விடுதலை பண்டிகை ஏறெடுக்க வேண்டும் என்று தவறுதலாய் அறிக்கையிட்டுவிட்டார். இருப்பினும் அடுத்த போப்பான ஆறாம் கிளெமென்ட் மீண்டும் இத்தவறை திருத்தி 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுதலை பண்டிகை ஏறெடுக்க வேண்டும் என்று அறிக்கையிட்டார். கிறிஸ்தவ வரலாற்றில் 1300-1350 வரை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுதலை பண்டிகை ஏறெடுக்க வேண்டும் என்ற தவறான செய்தி நிலவி வந்தது. இதை அறியமால் இந்த செய்தியை தன் மோசடி நூலில் குறிப்பிட்டு பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் பிதற்றியுள்ளார்.
"நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் யூபிலி வருடம் மேசியாவிற்காக ஒவ்வொரு ஆண்டாக ஒவ்வொரு இடத்தில் குறைக்கப்படும்" - பாகம் 82, பர்னபா சுவிசேசம்.
ஆ) புகழ்பெற்ற கவிஞர் டான்டேவின் கவிதைகள்:
டான்டே என்ற கவிஞர் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானவர். 1308-இல் இவர் எழுதிய "தி டிவைன் காமடி" என்ற நூல் மிகவும் பிரபலமானது. இவர் எழுதிய இந்நூலில் பரலோகம் பத்து படிகளை உடையது என்றும் ஒவ்வொன்றாக ஏறி ஒன்பது படிகளைத் தாண்டி முடித்து விட்டால் பத்தாவதாக பரலோகத்தை அடைந்து விடலாம் என்றும் சுவாரசியமான கதைகள் எழுதப்பட்டிருக்கிறது . இந்த நூல் அக்கலாத்திலேயே மிகவும் பிரபலமானது. இதே கருத்தை அறியாமல் பர்னபா சுவிசேஷ ஆசிரியர் தன் நூலில் தெரிவித்திருக்கிறார்.
"பரலோகத்தை மனிதனால் கணிக்க முடியாது. நிச்சயமாக அதனை எட்டும் முன் ஒன்பது படிகளை கடக்க வேண்டும். அந்த படிகள் தூரமானவை, ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு கோள் உள்ளது. ஒரு படியை கடக்க மனிதனுக்கு 500 ஆண்டுகள் தேவைப்படும். அவ்வாறு அத்தனை படிகளையும் கோள்களையும் தாண்டினால் தான் பரலோகத்தை எட்ட முடியும்" - பாகம் 178, பர்னபா சுவிசேசம்
மேலும், 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பிரதிகள் பர்னபா சுவிசேசத்திற்கென ஒன்றுமே இல்லை. இன்று நம்மிடம் 16ஆம் நூற்றாண்டை சார்ந்த ஒரே லத்தீன் மொழி பிரதியே பர்னபா சுவிசேசத்திற்கு உள்ளது. இதன் காரணமாக இதனை 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மோசடி நூல் என்று இஸ்லாமிய அறிஞர்கள் உட்பட சரித்திர ஆசிரியர்கள் அனைவரும் முடிவு செய்து இந்நூலை புறக்கணித்து உள்ளனர்.
பர்னபாவின் பெயரை ஆசிரியர் பயன்படுத்த காரணம் என்ன?
ஏசுநாதருக்கு பல சீடர்கள் இருப்பினும் பர்னபாவின் பெயரை ஆசிரியர் தேர்ந்தெடுக்க காரணம் பவுலடியாரே.
இன்றுள்ள இஸ்லாமிய போதனைகளுக்கு பெரும் தடையாக விளங்குபவர் ஆதிகால கிறிஸ்தவர் பவுலடியார். பைபிளில் புதிய ஏற்பாட்டில் உள்ள பல நூல்கள் பவுலடியாரால் எழுதப்பட்டது. "வானில் இருந்து ஒரு தூதன் இறங்கி வேறொரு சுவிசேசத்தை பிரசங்கித்தால் கூட நம்ப வேண்டாம், அத்தகைய தூதன் கூறுவதை கேட்டு போதிக்கிறேன் என்று கூறும் நபர்களையும் நம்ப வேண்டாம், அவர்கள் சாத்தனின் தூதர்கள்" என்று பவுல் முகமது நபிகள் பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார். ஒரு கொடுமை என்னவெனில், முகமது அவர்கள் தனக்கு வானில் இருந்து இறங்கிய கபிரியேல் என்னும் தூதன் குரானை போதித்ததாகக் கூறுகிறார். பவுல் விடுக்கும் எச்சரிக்கை அப்படியே முகமது அவர்களிடம் காணப்படுவதால் கிறிஸ்தவர்கள் முகமது அவர்களை இறைதூதரென ஏற்பதில்லை.
இதன் காரணமாகவே, பவுலடியாரை இஸ்லாமியர்கள் தங்கள் அல்லாவிடம் மக்களைத் திரும்ப விடாமல் தடுக்க சாத்தானால் ஏவப்பட்ட அந்திகிறிஸ்து என்று குற்றம் சாட்டுகின்றனர். புதிய ஏற்பாட்டில் பவுலிற்கும் பர்னபா என்ற சீடருக்கும் கருத்து பிரிவினை இருப்பதுபோல் சில இடங்களில் காணப்படும். பவுல் அடியாரின் போதனைகளை மக்கள் பின்பற்றுவதை தடுக்கவே பர்னபாவின் பெயரைக் கொண்டு போலியான சுவிசேசத்தை இஸ்லாத்திற்கு ஒத்து வருவது போல் படைத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
மோசடி நூல் என்று தெளிவாக நிரூபிக்கப்பட்ட பர்னபாவின் சுவிசேசத்தை கணக்கில் கருத கூட தேவை இல்லை.
நன்றி - http://answering-islam.org
0 comments:
Post a Comment