1 கிறிஸ்த்தவ பாடல்கள்


1.அசைவாடும் ஆவியே
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே (2)
இடம் அசைய உள்ம் நிரம்ப
இறங்கி வாருமே(2)

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே (2)
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே (2)
அசைவாடும்...

தேற்றிடுமே உள்ங்களை
இயேசுவின் நாமத்தினால் (2)
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் (2)
அசைவாடும்...

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் (2)
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே (2)
அசைவாடும்...
************************************************
2.அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே - நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
************************************************
3.அதிகாலையில் பாலனைத் தேடி
அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்
அதிகாலையில் பாலனைத் தேடி
வாரீர் வாரீர் வாரீர்
நாம் செல்வோம்

1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க
- அதிகாலையில்

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே
- அதிகாலையில்
************************************************

4.அனாதி தேவன் உன் அடைக்கலமே
அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார்

1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ் வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய்க் கர்த்தர் காத்துக்கொள்வார்

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினில்
கிடைக்கும் இளைப்பாருதல்

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம           
***********************************************

  5.அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
            1. அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை - 4

2. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே (2)
இதுவரையில் உதவினீரே - உம்மை

3. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை

4. யெகோவா ராப்பா யெகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை   
***********************************************

6.அன்பே பிரதானம்
அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்.

1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம், - இவைகளிலெல்லாம்

2. பலபல பாஷைபடித்தறிந்தாலும்,
கலகல வென்னும்கைம்மணியாமே

3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
அன்பில்லையானால் - அதிற்பயனில்லை

4. துணிவுட னுடலைச்சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால்பயனதிலில்லை

5. சாந்தமும் தயவும்சகல நற்குணமும்
போந்த சத்தியமும்பொறுமையுமுள்ள

6. புகழிறு மாப்பு, - பொழிவு பொறாமை,
பகைய நியாயப்பாவமுஞ் செய்யா

7. சினமடையாது, - தீங்கு முன்னாது,
தினமழியாது, - தீமை செய்யாது

8. சகலமுந் தாங்கும், - சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும்மேன்மை பெற்றோங்கும்
***********************************************

7.அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே
அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயர்ப்பிக்குமே

அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே

அருள் ஏராமாய் பெய்யும் மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் அருள்...

அருள் ஏராளமாய் பெய்யும் இயேசுவின் நாமத்திலே
இங்குள் கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமே அருள்...

அருள் ஏராளமாய் பெய்யும் பொழியும் இணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே அருள்...
***********************************************

8.அலங்கார வாசலாலே
            1. அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன்@
தெய்வவீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்@
இங்கே தெய்வ சமுகம்,
மெய் வெளிச்சம், பாக்கியம்

2. கர்த்தரே, உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்.
நீர் இறங்கும்போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்.
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.

3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே;
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே,
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.
***********************************************
9.அல்லேலூயா கர்த்தரையே
            1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் +மியில்ஆட்சிசெய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்

2. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4. பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

5. ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலைஅலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள
***********************************************
10ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
            1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம்மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்.

2. இம் மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கிதரிக்க
ஊக்கமருளுமே.

3. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏக ராஜனாய்
ஏற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே.

4. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும் பிரஸ்தாபிக்க
தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்.
***********************************************       
    
11.ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
            ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்

1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமைவெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ்

2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ்      
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
           
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த கோடினரா

1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார்

2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,
ஜீவனே விடிந்து, - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது

3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
***********************************************
12.ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
            ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே

5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

13.ஆவியை அருளுமே, சுவாமீ
            ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!

1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லைஆவியை

3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்ஆவியை
***********************************************



14இயேசு இராஜனின் திருவடிக்கு
            இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம், சரணம், சரணம்!
ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம், சரணம், சரணம்!

1. பார்போற்றும் தூய தூய தேவனே
மெய்ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவும் ஆனீரே
சரணம்! சரணம்! சரணம்!

2. இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றி தேற்றிக் காப்பீரே
சரணம்! சரணம்! சரணம்!

3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கின்றேன்
சரணம்! சரணம்! சரணம்!
***********************************************
15.இரட்சா பெருமானே பாரும்
            1. இரட்சா பெருமானே பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்,
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.

2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்,
ஜீவத் தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா,
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.

3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்,
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா
ஒரு போதும் கைவிடீர்.

4. ஜீவ காலபரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்,
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்,
இயேசு நாதா இயேசு நாதா
ஊழி காலம் வாழ்விப்பீர்.
***********************************************

16.உம் அருள் பெற, இயேசுவே
            1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்,
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.

2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே,
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.

3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா,
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா.

4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்,
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.

5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்,
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.

6. என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்,
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

7. என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்,
இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்
***********************************************

17.ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
            ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே
கனிதந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட

3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட
***********************************************

18.எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
            எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே
………. எக்காள

2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்
………. எக்காள
***********************************************
 
19.எண்ணி எண்ணி துதிசெய்வாய்
            எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!

2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவா
***********************************************

20.எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்
            எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

1. +மியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான் தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!

2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும்,
ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!

3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே!

4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே!
***********************************************


1 comments:

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.