Monday, 16 December 2013

0 மரியாளை வணங்குவது சரியா? தவறா?


 மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை.

கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபடத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக்கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இது தவறான புரிந்துகொள்ளுதல்.

10 காரணங்களை படியுங்கள்:

[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாக பரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.

[2] கானாவூர் கலியாணத்தில் (யோவான் 2:4) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தையாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார். அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.

[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும் சகோதரரும் என்றார். தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில்(God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.


[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே. அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.

[6] லூக்கா 2:35 ல் மரியாள் ஒரு பட்டயத்தால் கொல்லப்படுவாள் என்று பார்க்கிறோம். அவளும் சீஷர்களைப்போல இரத்த சாட்சியாக மரித்தாள்.

[7] அப் 2-ம் அதிகாரத்தில் மரியாள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில் ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில் பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை அல்ல.

[8] யோவான் 14:13,14 "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார். மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.

[9] இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.

[10] யாத் 20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்". இதற்குப்பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும், இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8ல் சொல்லப்பட்டுள்ளது.

மரியாளை வணங்குவது பாவம், அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம்.
இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.

மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை.

மரியாளை வணங்குவது தவறு.


நன்றி: பிரிஸ்ட்லி,devanforumta.

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.