ஜேக்குலின் |
மன்னிப்பு....
எல்லாராலும் அருள முடியாது.... மனப்பூர்வமாக
ஒருவர் தனக்கு செய்த தீங்கை
மன்னிக்கிறார் ஒரு இளம்பெண்... அவருக்கு
நேர்ந்த துன்பம் நமக்கு நேர்ந்து
இருந்தால் நம்மால் இவ்வாறு மன்னிக்க
முடியுமா?
இந்த உண்மை சம்பவம்
உங்களுக்கு மன்னிப்பின் அழகை என்ன என்று
காண்பிக்கும்....
இந்த பெண்ணின் பெயர் ஜேக்குலின்... அவர்
எந்த நாட்டை, எந்த ஊரை
சேர்ந்தவர் என்பது தெரியவில்லை....
இவரது முகத்தை பாருங்கள்.... இது
தான் இவரது உண்மையான உருவம்...
நம் எல்லாரையும் போல சந்தோசமாக வாழ்ந்தவர்...
இவர் கல்லூரியில் இவருடன் படித்த அனைவரும்
ஜேக்குலின் போன்ற அமைதியான பாசமான
தோழி இல்லை என்று கூறுகின்றனர்...
ஜேக்குளினிற்கு தாய் இல்லை... தன்
தந்தையையும் ஒரே அண்ணனையும் விட்டால்
அவருக்கு வேறு யாரும் இல்லை...
ஜேக்குலினின்
அழகான வாழ்வில் ஒரு துயர சம்பவம்
நேர்கிறது...தன் இரு தோழிகளுடன்
அவர் ஒரு சாலையின் ஓரத்தில்
நின்று கொண்டிருந்தார்... அப்பொழுது மது அருந்திவிட்டு காரில்
வேகமாக வந்த ஒரு வாலிபர்
அவர்கள் மீது மோதிவிட்டார்...
ஜேக்குளினின்
கண் முன்பே அவரது இரண்டு
தோழிகளும் இறந்தனர்... ஜேக்குலின் உடல் முழுவதும் சிதைந்த
நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்... அவரை
அப்படியே விட்டுவிட்டு அந்த வாலிபர் ஓடி
விட்டார்...
அங்கு இருந்த சில நல்மனம்
படைத்த மனிதர்களால் அவர் மருத்துவமனைக்கு எடுத்து
செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார்... மருத்துவர்கள் மிகவும் போராடி ஜேக்குளினின்
உயிரை காப்பாற்றினர்...
ஆனால்.....
ஜேக்குலினின்
தந்தை அவருக்கு ஒரு பெரிய ஆறுதல்...
இதுதான்
அவருக்கு விபத்திற்கு பின் கிடைத்த உருவம்...
ஜேக்குலின் மனம் உடைந்தார்... அவரது
தந்தையும் அண்ணனும் அவருக்கு ஆறுதலாக இருந்தனர்... தன்
வயது மக்களை கண்டால் ஜேக்குளினிற்கு
கண்களில் கண்ணீர் வருகிறது.... தன்
தோழிகள் நண்பர்கள் யாரும் இப்பொழுது அவரை
காண வருவதில்லை... அவருக்கு எல்லாமே அவரது தந்தையும்
அண்ணனும் தான்...
ஜேக்குலின்
அவரது அண்ணனுடனும் தந்தையுடனும்
ஜேக்குலின் அவரது அண்ணனுடனும் தந்தையுடனும் |
அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்...
அந்த வாலிபரின் தாய் தன் மகனால்
ஜேக்குளினிற்கு நிகழ்ந்த கொடுமை அறிந்து ஜேக்குலினை
சந்தித்து கண்ணீர் மல்க அழுதார்...
ஜேக்குலின் என்ன கூறினார் தெரியுமா?
"அவர்
வேண்டுமென்றே அப்படி செய்யவில்லையே, தெரியாமல்
நடந்த விபத்து தானே, எனக்கு
அவர் மேல் வருத்தம் இல்லை"
என்றார்.... அவரது இளகிய மனதை
கண்டு அங்கிருந்த அனைவரும் துடித்து போயினர்...
இந்த சம்பவம் இணையத்தில்
வெளியாய் இருக்கிறது... ஒரு நபர் இவ்வாறு
கமெண்ட் செய்திருந்தார், "எனக்கு ஜேக்குலின் போன்ற
அழகான பெண் யாரும் தெரியாது...
அவரது உருவத்தில் இயேசு நாதரை காண்கிறேன்..."
ஒரு முறை
கீழுள்ள வசனத்தை படியுங்கள்...
"கபாலஸ்தலம்
என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது,
அவரையும், அவருடைய வலது பக்கத்தில்
ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில்
ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு
மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே என்றார்" - லூக்கா 23:33,34
நன்றி:இவர்யார்
நன்றி:இவர்யார்
0 comments:
Post a Comment