அன்பான சகோதர சகோதரிகளே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் நன் தேவாதி தேவனை நீங்களும் துதித்து ஆசீர்வாதங்களை பெற்றுகொள்ளுங்களேன்.
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம்
3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம்
4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம்
5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
6. சோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம்
8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம்
9. என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம்
10. என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம்
11. என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம்
12. என் (எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம்
13. எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம்
14. இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம்
15. நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
16. அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம்
17. நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம்
18. இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம்
19. ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்
20. உன்னதமான தேவனே ஸ்தோத்திரம்
21. மகா தேவனே ஸ்தோத்திரம்
22. தேவாதி தேவனே ஸ்தோத்திரம்
23. ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
24. அன்பின் தேவனே ஸ்தோத்திரம்
25. அநாதி தேவனே ஸ்தோத்திரம்
26. ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
27. மகிமையின் தேவனே ஸ்தோத்திரம்
28. கிருபையின் தேவனே ஸ்தோத்திரம்
29. ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம்
30. ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
31. யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
32. யெஷீரனின் தேவனே ஸ்தோத்திரம்
33. இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம்
34. எலியாவின் தேவனே ஸ்தோத்திரம்
35. தாவீதின் தேவனே ஸ்தோத்திரம்
36. தானியேலின் தேவனே ஸ்தோத்திரம்
37. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம்
38. பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம்
39. முற்பிதாக்களின் தேவனே ஸ்தோத்திரம்
40. என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம்
41. சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம்
42. பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனே ஸ்தோத்திரம்
43. பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனே ஸ்தோத்திரம்
44. பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம்
45. அற்பதங்களின் தேவனே ஸ்தோத்திரம்
46. வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
47. சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
48. சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம்
49. மெய்யான தேவனே ஸ்தோத்திரம்
50. ஒன்றான மெய் தேவனே ஸ்தோத்திரம்
51. பிதாவாகிய ஒரே தேவனே ஸ்தோத்திரம்
52. ஒருவராய் ஞானமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
53. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே ஸ்தோத்திரம்
54. பாலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம்
55. பரிசுத்தமான தேவனே ஸ்தோத்திரம்
56. சத்திய தேவனே ஸ்தோத்திரம்
57. இரட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம்
58. வாக்குத்தத்தங்களின் தேவனே ஸ்தோத்திரம்
59. உடன்படிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
60. நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
61. இரக்கமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
62. இரக்கத்தின் ஐசுவரியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
63. நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
64. நீதியை சரிக்கட்டும் தேவனே ஸ்தோத்திரம்
65. நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
66. சேனைகளின் தேவனே ஸ்தோத்திரம்
67. என் தேவனே! என் தேவனே! ஸ்தோத்திரம்
68. என்னைப் பெற்ற தேவனே ஸ்தோத்திரம்
69. என்னைக் காண்கிற தேவனே ஸ்தோத்திரம்
70. தரிசனமாகிற தேவனே ஸ்தோத்திரம்
71. மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே ஸ்தோத்திரம்
72. என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே ஸ்தோத்திரம்
73. மறைபொருளை வெளிப்படுத்தும் தேவனே ஸ்தோத்திரம்
74. தேவர்களுக்கு தேவனே ஸ்தோத்திரம்
75. ராஜாவாகிய என் தேவனே ஸ்தோத்திரம்
76. பெரிய தேவனே ஸ்தோத்திரம்
77. ஐசுவரியத்தின தேவனே ஸ்தோத்திரம்
78. குறைவுகளை நிறைவாக்கும் தேவனே ஸ்தோத்திரம்
79. விளையச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
80. ஜெயங்கொடுக்கிற தேவனே ஸ்தோத்திரம்
81. சமாதானத்தின் தேவனே ஸ்தோத்திரம்
82. பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவனே ஸ்தோத்திரம்
83. எரிச்சலின் தேவனே ஸ்தோத்திரம்
84. மன்னிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
85. அதிசயங்களைச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
86. இரட்சகராகிய தேவனே ஸ்தோத்திரம்
87. என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே ஸ்தோத்திரம்
88. எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
89. பெயர் சொல்லி அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
90. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
91. பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம்
92. தம்மை மறைத்துக் கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
93. எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
94. பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
95. தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம்
96. தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பம் தேவனே ஸ்தோத்திரம்
97. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே ஸ்தோத்திரம்
98. சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம்
99. கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம்
100. கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 101 - 200
101. சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம்
102. சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம்
103. ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம்
104. ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம்
105. பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
106. உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம்
107. பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
108. எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
109. எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
110. எங்கள் நித்தியவெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம்
111. மாம்சமானயாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
112. எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
113. ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
114. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம்
115. கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம்
116. கர்த்தர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் ஸ்தோத்திரம்
117. கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம்
118. கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம்
119. சத்தியபரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்
120. கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம்
121. ராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம்
122. மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம்
123. மகத்துவமான ராஜாவே ஸ்தோத்திரம்
124. பரிசுத்தவான்களின் ராஜாவே ஸ்தோத்திரம்
125. சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம்
126. நீதியின் ராஜாவே ஸ்தோத்திரம்
127. நிர்மல ராஜனே ஸ்தோத்திரம்
128. நித்திய ராஜாவே ஸ்தோத்திரம்
129. அழிவில்லாத ராஜாவே ஸ்தோத்திரம்
130. அதரிசனமுள்ள ராஜாவே ஸ்தோத்திரம்
131. யூதருடைய ராஜாவே ஸ்தோத்திரம்
132. இஸ்ரவேலின் ராஜாவே ஸ்தோத்திரம்
133. யெஷNO IDEAரனின் ராஜாவே ஸ்தோத்திரம்
134. ராஜாக்களுக்கு ஆண்டவரே ஸ்தோத்திரம்
135. ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே ஸ்தோத்திரம்
136. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே ஸ்தோத்திரம்
137. பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
138. சமாதானத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்
139. சமாதான பிரபவே ஸ்தோத்திரம்
140. சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
141. என் ராஜாவே ஸ்தோத்திரம்
142. பரலோகத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்
143. வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்
144. சர்வலோகத்துக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்
பரிசுத்தரை, உமக்கு ஸ்தோத்திரம்
145. பரிசுத்தர் பரிசுத்தரே ஸ்தோத்திரம்
146. இஸ்ரவேலின் பரிசுத்தரே ஸ்தோத்திரம்
147. தேவனுடைய பரிசுத்தரே ஸ்தோத்திரம்
148. நித்தியவாசியான பரிசுத்தரே ஸ்தோத்திரம்
149. நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம்
150. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்
151. தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்
உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
152. யேகோவா தேவனே ஸ்தோத்திரம்
153. யேகோவாயீரே (கர்த்தர் பார்த்துக் கோள்வார்) ஸ்தோத்திரம்
154. யேகோவா ஷாலோம் (கர்த்தர் சமாதானமளிக்கிறவர்) ஸ்தோத்திரம்
155. யேகோவா ஷம்மா (தம் சமுகமளிக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
156. யேகோவா நிசி (கர்த்தர் என் ஜெயக் கொடியானவர்) ஸ்தோத்திரம்
157. யேகோவா ஈலியோன் (உன்னதமான கர்த்தர்) ஸ்தோத்திரம்
158. யேகோவா ரோஹி (கர்த்தர் மேய்ப்பரானவர்) ஸ்தோத்திரம்
159. யேகோவா ஸிட்கேனு (நீதியாயிருக்கிற கர்த்தர்) ஸ்தோத்திரம்
160. யேகோவா சபயோத் (சேனைகளின் கர்த்தர்) ஸ்தோத்திரம்
161. யேகோவா மேக்காதீஸ் (பரிசுத்தமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
162. யேகோவா ரொபேகா (குணமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
163. யேகோவா ஓசேனு (உருவாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
164. யேகோவா ஏலோஹீனு (யேகோவா நம்முடைய தேவன்) ஸ்தோத்திரம்
165. யேகோவா ஏலோகா(யேகோவா உன்னுடைய தேவன்) ஸ்தோத்திரம்
166. யேகோவா ஏலோஹே (யேகோவா என் தேவன்) ஸ்தோத்திரம்
167. ஏலோஹிம் (எங்கும் நிறைந்தவர்) ஸ்தோத்திரம்
168. எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ளவர்) ஸ்தோத்திரம்
169. இயேசு என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
170. இம்மானுவேல் என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
171. தேவனுடைய வார்த்தை என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
172. உயர்ந்த உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
173. உம் இன்பமான நாமத்துக்கு ஸ்தோத்திரம்
174. ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
175. பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
176. வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
177. மகத்துவமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
178. எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
179. உம் நாமம் சமீபமாயிருப்பதற்கு ஸ்தோத்திரம்
180. உமது நாமம் பலத்த துருகம் ஸ்தோத்திரம்
ஆவியானவரே ஸ்தோத்திக்கிறோம்
181. பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
182. சத்திய ஆவியே ஸ்தோத்திரம்
183. கிருபையின் ஆவியே ஸ்தோத்திரம்
184. மகிமையின் ஆவியே ஸ்தோத்திரம்
185. ஜிவனின் ஆவியே ஸ்தோத்திரம்
186. பிதாவின் ஆவியே ஸ்தோத்திரம்
187. கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
188. உணர்வுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
189. பெலனுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
190. உயிர்ப்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம்
191. உற்சாகப்படுத்தும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
192. ஞானத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
193. கர்த்தரின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
194. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவரே ஸ்தோத்திரம்
195. நித்திய ஆவியானவரே ஸ்தோத்திரம்
196. உன்னதரின் ஆவியே ஸ்தோத்திரம்
197. பரிசுத்தமுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
198. குமாரனின் ஆவியே ஸ்தோத்திரம்
199. பத்திரசுவிகாரத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
200. நல்ல ஆவியே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 201 - 300201. தேற்றரவாளனே ஸ்தோத்திரம்
202. விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
203. வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம்
204. வாக்குக்கடங்கா பெரு மூச்சோடே வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
205. அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
206. ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
207. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
208. நிலைவரமரன பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
209. நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
210. சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
சத்திய வேதத்தில் உம்மைக் குறித்து நாங்கள் அறிந்து கொண்டவைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம்
211. அல்பா ஒமெகாவே ஸ்தோத்திரம்
212. ஆதி ஆந்தமானவரே ஸ்தோத்திரம்
213. முந்தினவரும் பிந்தினவரும் ஸ்தோத்திரம்
214. சிருஷ்டிக்கு ஆதியாயிருப்பவரே ஸ்தோத்திரம்
215. இருந்தவரே ஸ்தோத்திரம்
216. இருக்கிறவராகா இருக்கிறவரே ஸ்தோத்திரம்
217. வரப்போகிறவரே ஸ்தோத்திரம்
218. அன்பாக இருக்கிறவரே ஸ்தோத்திரம்
219. உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
220. வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
221. உன்னதமானவரே ஸ்தோத்திரம்
222. மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம்
223. மகா பெலனுள்ளவரே ஸ்தோத்திரம்
224. மகா நீதிபரரே ஸ்தோத்திரம்
225. நீதியின் சூரியனே ஸ்தோத்திரம்
226. நீதியுள்ள நியாயாதிபதியே ஸ்தோத்திரம்
227. நீதியும் செம்மையுமானவரே ஸ்தோத்திரம்
228. நீதியின் விளைச்சல்கலை வர்த்திக்கச் செய்பவரே ஸ்தோத்திரம்
229. நியாயப்பிரமாணிகரே ஸ்தோத்திரம்
230. உண்மையுள்ளவரே ஸ்தோத்திரம்
231. ஒப்பற்றவரே ஸ்தோத்திரம்
232. மாசற்றவரே ஸ்தோத்திரம்
233. குற்றமற்றவரே ஸ்தோத்திரம்
234. இரட்சகரே ஸ்தோத்திரம்
235. துருகமே ஸ்தோத்திரம்
236. கேடகமே ஸ்தோத்திரம்
237. உயர்ந்த அடைக்கலமே ஸ்தோத்திரம்
238. கோட்டையும் அரணுமே ஸ்தோத்திரம்
239. அநுகூலமான துணையே ஸ்தோத்திரம்
240. இரட்சண்யக் கொம்பே ஸ்தோத்திரம்
241. இரட்சிப்பின் அதிபதியே ஸ்தோத்திரம்
242. ஆத்தும நங்கூரமே ஸ்தோத்திரம்
243. ஆத்தும நேசரே ஸ்தோத்திரம்
244. ஆத்தும மணவாளனே ஸ்தோத்திரம்
245. பிளவுண்ட மலையே ஸ்தோத்திரம்
246. பள்ளத்தாக்கின் லீலியே ஸ்தோத்திரம்
247. சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்
248. மருதோன்றிப் பூங்கொத்தே ஸ்தோத்திரம்
249. வெள்ளைப்போளச் செண்டே ஸ்தோத்திரம்
250. முற்றிலும் அழகானவரே ஸ்தோத்திரம்
251. பதினாயிரங்களில் சிறந்தவரே ஸ்தோத்திரம்
252. தேனிலும் உம் வாய் மதுரமானதே ஸ்தோத்திரம்
253. வெண்மையும் சிவப்பமானவரே ஸ்தோத்திரம்
254. விடிவெள்ளி நட்சத்திரமே ஸ்தோத்திரம்
255. கிச்சிலி மரமே ஸ்தோத்திரம்
256. வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
257. கன்னியர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்
258. உத்தமர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்
259. நேசகுமாரனே ஸ்தோத்திரம்
260. அன்பின் குமாரனே ஸ்தோத்திரம்
261. உன்னதமான தேவ குமாரனே ஸ்தோத்திரம்
262. மனுஷகுமாரனே ஸ்தோத்திரம்
263. பூரணரான குமாரனே ஸ்தோத்திரம்
264. தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
265. வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம்
266. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம்
267. அன்பில் பூரணரே ஸ்தோத்திரம்
268. பூரண சற்குணரே ஸ்தோத்திரம்
269. உலகின் ஒளியே ஸ்தோத்திரம்
270. மெய்யான ஒளியே ஸ்தோத்திரம்
271. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே ஸ்தோத்திரம்
272. உண்மையுள்ள சாட்சியே ஸ்தோத்திரம்
273. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்
274. தேவ ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்
275. ஒரே மேய்ப்பனே ஸ்தோத்திரம்
276. நல்ல மேய்ப்பனே ஸ்தோத்திரம்
277. மேய்ப்பரும் கண்காணியுமானவரே ஸ்தோத்திரம்
278. ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுத்தவரே ஸ்தோத்திரம்
279. எங்களுடைய மீறுதல்களினிமித்தம் வாதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
280. எங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் நோறுக்கப்படடீரே ஸ்தோத்திரம்
281. எங்களுடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தவரே ஸ்தோத்திரம்
282. எம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நோய்களை சுமந்தீரே ஸ்தோத்திரம்
283. எம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களைக் சுமந்தீரே ஸ்தோத்திரம்
284. எங்களுக்காய் இரத்தம் சிந்தினீரே ஸ்தோத்திரம்
285. எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை நீர் ஏற்றீரே ஸ்தோத்திரம்
286. எம் ஒவ்வொருவருக்காய் மரணத்தை ருசி பார்த்தீரே ஸ்தோத்திரம்
287. எங்களுக்காக பரிகசிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
288. மனுஷரால் நிந்திக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
289. ஜனங்களால் அவமதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
290. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்
291. அக்கிரமக்காரராகிய எங்களுக்காக வேண்டிக்கொண்டீரே ஸ்தோத்திரம்
292. உம்முடைய குணமாக்கும் தழும்பகளுக்காக ஸ்தோத்திரம்
293. உயிர்த்தெழுந்தவரே ஸ்தோத்திரம்
294. உயிர்திதெழுதலும் ஜீவனுமானவரே ஸ்தோத்திரம்
295. முதற்பேறானவரே ஸ்தோத்திரம்
296. முதற்பலனானவரே ஸ்தோத்திரம்
297. நானே வாசல் என்றவரே ஸ்தோத்திரம்
298. மரணத்தை வென்றவரே ஸ்தோத்திரம்
299. பாதாளத்தை வென்றவரே ஸ்தோத்திரம்
300. மரணத்திற்க்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 301 - 400
301. தாவீதின் திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம்
302. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவரே ஸ்தோத்திரம்
303. ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரே ஸ்தோத்திரம்
304. வானத்திலிருந்து இறங்கின அப்பமே ஸ்தோத்திரம்
305. ஜீவ அப்பமே ஸ்தோத்திரம்
306. ஜீவ நதியே ஸ்தோத்திரம்
307. ஜீவத் தண்ணீரின் ஊற்றே ஸ்தோத்திரம்
308. ஜீவாதிபதியே ஸ்தோத்திரம்
309. ஜீவனும் தீர்க்காயுசுமானவரே ஸ்தோத்திரம்
310. இரட்சிப்பின் கன்மலையே ஸ்தோத்திரம்
311. நித்திய கன்மலையே ஸ்தோத்திரம்
312. ஞானக் கன்மலையே ஸ்தோத்திரம்
313. என்னை ஜெநிப்பித்த கன்மலையே ஸ்தோத்திரம்
314. என் இருதயத்தின கன்மலையே ஸ்தோத்திரம்
315. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே ஸ்தோத்திரம்
316. என் மீட்பரே ஸ்தோத்திரம்
317. என் சகாயரே ஸ்தோத்திரம்
318. என் நம்பிக்கையே ஸ்தோத்திரம்
319. என் நாயகனே ஸ்தோத்திரம்
320. என் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம்
321. என் சிநேகிதரே ஸ்தோத்திரம்
322. என் இன்பமானவரே ஸ்தோத்திரம்
323. என் பகழ்ச்சி நீரே ஸ்தோத்திரம்
324. என் இரட்சிப்பமானவரே ஸ்தோத்திரம்
325. என் இரட்சிப்பின் பெலனே ஸ்தோத்திரம்
326. என் பெலனும் கீதமுமானவரே ஸ்தோத்திரம்
327. என் ஜீவனின் பெலனானவரே ஸ்தோத்திரம்
328. என் வெளிச்சமானவரே ஸ்தோத்திரம்
329. என் பரிசுத்தமானவரே ஸ்தோத்திரம்
330. என் பகலிடமே ஸ்தோத்திரம்
331. என் மகிமையே ஸ்தோத்திரம்
332. என் தயாபரரே ஸ்தோத்திரம்
333. என் மறைவிடமே ஸ்தோத்திரம்
334. என் சுதந்தரமே ஸ்தோத்திரம்
335. என் பாத்திரத்தின் பங்குமானவரே ஸ்தோத்திரம்
336. என் இளவயதின் அதிபதியே ஸ்தோத்திரம்
337. என் நேசர் என்னுடையவரே ஸ்தோத்திரம்
338. என்னை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
339. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
340. நீதிபரர் இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
341. நசரேயனாகிய இயேசுவே ஸ்தோத்திரம்
342. பரிந்து பேசும் கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
343. அதிசயமானவரே ஸ்தோத்திரம்
344. ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்பவரே ஸ்தோத்திரம்
345. பிராண சிநேகிதரே ஸ்தோத்திரம்
346. பாவிகளின் சிநேகிதரே ஸ்தோத்திரம்
347. திறக்கப்பட்ட ஊற்றே ஸ்தோத்திரம்
348. உம் குற்றமற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
349. உம் மாசற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
350. உம் விலையேறப்பெற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
351. உம் தெளிக்கப்படும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
352. உம் நன்னையானவைகளைப் பேசும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
353. தேவனுடைய ஈவே ஸ்தோத்திரம்
354. எம்முடைய பஸ்காவே ஸ்தோத்திரம்
355. கிருபாதார பலியே ஸ்தோத்திரம்
356. பிணையாளியானவரே ஸ்தோத்திரம்
357. மேசியாவே ஸ்தோத்திரம்
358. முன்னோடியே ஸ்தோத்திரம்
359. நடத்துபவரே ஸ்தோத்திரம்
360. ரபீ, ரபூனி ஸ்தோத்திரம்
361. ஈசாயின் அடிமரமே ஸ்தோத்திரம்
362. தாவீதின் வேரானவரே ஸ்தோத்திரம்
363. கிளை என்னப்பட்டவரே ஸ்தோத்திரம்
364. ராஜாவாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
365. தாசனாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
366. துதிக்குப் பாத்திரரே ஸ்தோத்திரம்
367. துதியில் மகிழ்வோனே ஸ்தோத்திரம்
368. துதிகளில் பயப்படத்தப்பவரே ஸ்தோத்திரம்
369. துதியின் மத்தியி்ல் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம்
370. உன்னதத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
371. கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம்
372. சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
373. எருசலேமில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
374. மனுஷருக்குள் வாசம் செய்ய வரம் பெற்றவரே ஸ்தோத்திரம்
375. நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
376. கர்த்தருக்குப் பிரியமானவனின் எல்லைக்குள் வாசமாயிருப்பவரே ஸ்தோத்திரம்
377. உன்னதரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
378. பூமி உருண்டையின் மேல் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
379. ஜலப்பிரவாகத்தின் மேல் உட்கார்ந்திருப்பவரே ஸ்தோத்திரம்
380. பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறவரே ஸ்தோத்திரம்
381. திரளான தண்ணீர்களின் மேலிருக்கிறவரே ஸ்தோத்திரம்
382. பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
383. தயவுள்ளவனுக்கு தயவுள்ளவரே ஸ்தோத்திரம்
384. உத்தமனுக்கு உத்தமரே ஸ்தோத்திரம்
385. பனிதனுக்கு பனிதரே ஸ்தோத்திரம்
386. மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராக தோன்றுகிறவரே ஸ்தோத்திரம்
387. பிரதான அப்போஸ்தலரே ஸ்தோத்திரம்
388. ஆண்டவரும் போதகருமானவரே ஸ்தோத்திரம்
389. தேவனிடத்திலிருந்து வந்த போதகரே ஸ்தோத்திரம்
390. பிரதான தீர்க்கதரிசியே ஸ்தோத்திரம்
391. பிரதான (பரம) வைத்தியரே ஸ்தோத்திரம்
392. பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
393. மகா பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
394. நித்திய பிராதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
395. உண்மையுள்ள பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
396. பாவமில்லாத பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
397. பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
398. வரப்போகிற நன்மைக்குரிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
399. மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்
400. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியரானவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 401 - 500
401. இஸ்ரவேலின் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம்
402. இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம்
403. இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம்
404. இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம்
405. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம்
406. இஸ்ரவேலின் கன்மலையே ஸ்தோத்திரம்
407. இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம்
408. இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம்
409. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம்
410. யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம்
411. யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம்
412. யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம்
413. ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம்
414. செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம்
415. யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம்
416. செயலில் வல்லவரே ஸ்தோத்திரம்
417. ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம்
418. கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம்
419. பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம்
420. பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம்
421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம்
422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம்
423. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம்
424. கர்த்தரின் சேனை அதிபதியே ஸ்தோத்திரம்
425. எங்கள் சேனாதிபதியே ஸ்தோத்திரம்
426. எங்கள் பாதுகாவலரே ஸ்தோத்திரம்
427. எங்கள் மத்தியஸ்தரே ஸ்தோத்திரம்
428. எங்கள் சகோதரரே ஸ்தோத்திரம்
429. எங்கள் அருணோதயமே ஸ்தோத்திரம்
430. எங்களுக்கு பரிசுத்த ஸ்தலமாயிருப்பவரே ஸ்தோத்திரம்
431. மகிமையின் பாத்திரரே ஸ்தோத்திரம்
432. மகிமையின் கீரீடமானவரே ஸ்தோத்திரம்
433. அலங்கார முடியுமானவரே ஸ்தோத்திரம்
434. பாலகனும் குமாரனுமானவரே ஸ்தோத்திரம்
435. இரக்கமும் மனவுருக்கமுமானவரே ஸ்தோத்திரம்
436. சகல ஜாதிகளால் விரும்பப்பட்டவரே ஸ்தோத்திரம்
437. சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவரே ஸ்தோத்திரம்
438. கழுகைப் போல எம்மை சுமக்கிறவரே ஸ்தோத்திரம்
439. கண்மணிபோல் எம்மை காப்பவரே ஸ்தோத்திரம்
440. வலக்கரத்தால் தாங்குபவரே ஸ்தோத்திரம்
441. வலப்பக்கத்தில் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம்
442. ஒருவராய் இருக்கிறவரே ஸ்தோத்திரம்
443. ஏக சக்கராதிபதியே ஸ்தோத்திரம்
444. சாவாமையுள்ளவரே ஸ்தோத்திரம்
445. நித்தியானந்தரே ஸ்தோத்திரம்
446. காணக்கூடாத வராயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
447. மகிமையின் பிரகாசமே ஸ்தோத்திரம்
448. பிந்தின ஆதாமே ஸ்தோத்திரம்
449. திராட்சத் தோட்டக்காரரே ஸ்தோத்திரம்
450. மெய்யான திராட்சச் செடியே ஸ்தோத்திரம்
451. நல்ல விதை விதைக்கிறவரே ஸ்தோத்திரம்
452. கனி கொடுக்கும்படி கொடியை சுத்தம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
453. சர்வத்துக்கும் சுதந்தரவாளியே ஸ்தோத்திரம்
454. விசுவாசத்தை துவக்குகிறவரே ஸ்தோத்திரம்
455. விசுவாசத்தை முடிக்கிறவரே ஸ்தோத்திரம்
456. தடைகளை நீக்குபவரே ஸ்தோத்திரம்
457. எனக்காய் யுத்தம் செய்பவரே ஸ்தோத்திரம்
458. பட்சிக்கும் அக்கினியே ஸ்தோத்திரம்
459. பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
460. சகாயஞ் செய்யும் கேடகமே ஸ்தோத்திரம்
461. மகிமையான பட்டயமே ஸ்தோத்திரம்
462. பரலோக மன்னாவே ஸ்தோத்திரம்
463. பரம குயவனே ஸ்தோத்திரம்
464. பட்சபாதமில்லாதவரே ஸ்தோத்திரம்
465. திட அஸ்திபார மூலைக்கல்லே ஸ்தோத்திரம்
466. அபிஷேகம் பண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்
467. நீண்ட ஆயுசுள்ளவரே ஸ்தோத்திரம்
468. நீடிய சாந்தமுள்ளவரே ஸ்தோத்திரம்
469. தேவ தன்மையின் சொரூபமே ஸ்தோத்திரம்
470. சுத்தக் கண்ணனே ஸ்தோத்திரம்
471. சபைக்கு தலையானவரே ஸ்தோத்திரம்
472. யூதா கோத்திரத்துச் சிங்கமே ஸ்தோத்திரம்
473. யுத்தத்தில் வல்லவரே ஸ்தோத்திரம்
474. யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தரே ஸ்தோத்திரம்
475. பிசாசின் தலையை நசுக்கினவரே ஸ்தோத்திரம்
476. ஜெய கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
477. மகிமையாய் வெற்றி சிறந்தவரே ஸ்தோத்திரம்
478. கிறிஸ்துவுக்குள் எங்களை வெற்றிச் சிறக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
"நீங்கள் தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபம் பாடின வார்த்தைகளினாலே கர்த்தரைத் துதியுங்கள்"
என்ற வார்த்தையின்படி தாவிதோடும், ஆசாபோடும் வேதத்தின் பரிசுத்தவான்களோடும் சேர்ந்து நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்.
479. எல்லா தேவர்களுக்கும் மகாராஜனே ஸ்தோத்திரம்
480. எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரே ஸ்தோத்திரம்
481. எல்லா தேவர்களிலும் மிகவும் பெரியவரே ஸ்தோத்திரம்
482. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
483. எல்லா தேவர்களுக்கும் மேலானவரே ஸ்தோத்திரம்
484. மிகவும் பகழப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
485. ஐசுவரிய சம்பன்னரே ஸ்தோத்திரம்
486. ஐசுவரியத்தை சம்பாதிக்க பெலனை கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
487. கட்டுண்ட தம்முடையவர்களை பறக்கணியீரே ஸ்தோத்திரம்
488. கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கிறவரே ஸ்தோத்திரம்
489. கட்டுண்டவர்களை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
490. கொலைக்கு நியமிக்கப் பட்டவர்களை விடுதலையாக்குபவரே ஸ்தோத்திரம்
491. விழுகிற யாவரையும் தாங்குபவரே ஸ்தோத்திரம்
492. மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறவரே ஸ்தோத்திரம்
493. இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி காயங்களைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
494. சிறியவனைப் பழுதியிலிருந்து தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
495. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமே ஸ்தோத்திரம்
496. சிறுமைப்பட்டவனுடைய வேண்டுதலை கேட்பவரே ஸ்தோத்திரம்
497. சிறுமையானவர்களின் வழக்கை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
498. சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
499. சிறுமையும் எளிமையுமானவனை பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
500. சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவனை தீங்கு நாளில் விடுவித்து பாதுகாத்து, சத்துருவின் இஷ்டத்துக்கு அவனை ஒப்பக் கொடாமல், வியாதியில் அவன் படுக்கை முழுவதையும்மாற்றி போடுகிறவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 501 - 600
501. சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
502. மேட்டிமையான கண்களை தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம்
503. ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவரே ஸ்தோத்திரம்
504. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் லேசாக உதவி செய்கிறவரே ஸ்தோத்திரம்
505. ஏழைகளைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
506. எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே ஸ்தோத்திரம்
507. எளியவனை சிறுமையினின்று எடுத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறவரே ஸ்தோத்திரம்
508. எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
509. எளியவனின் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறவரே ஸ்தோத்திரம்
510. எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே ஸ்தோத்திரம்
511. எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
512. எளியவனை பிரபக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
513. எளியவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
514. திக்கற்றோரின் தகப்பனே ஸ்தோத்திரம்
515. அனாதைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
516. விதவைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
517. திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே ஸ்தோத்திரம்
518. திக்கற்ற பிள்ளைகளின் ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பவரே ஸ்தோத்திரம்
519. திக்கற்ற பிள்ளைகளையும் விதவையையும் ஆதரிக்கிறவரே ஸ்தோத்திரம்
520. பரதேசிகளை காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
521. தேவன் தனிமையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்
522. உம்முடைய தயவினால் ஏழைகளை பராமரிக்கிறதற்காக ஸ்தோத்திரம்
523. ஊழியக்காரர் மேல் பரிதாபப்படுகிறவரே ஸ்தோத்திரம்
524. ஊழியக்காரன் சுகத்தை விரும்பகிறவரே ஸ்தோத்திரம்
525. ஊழியக்காரன் வார்த்தைகளை நிலைப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்
526. ஊழியக்காரரை அக்கினி ஜீவாலையாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
527. தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை கொள்வதற்காக ஸ்தோத்திரம்
528. உமது சமுகத்தை ஊழியக்காரர் மீது பிரகாசிக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
529. நல்ல மனுஷனுடைய நடைகளை உறுதிப்படுத்தும் கர்த்தரே ஸ்தோத்திரம்
530. நல்ல மனுஷன விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லையே, கர்த்தர் உமது கையினால் அவனைத் தாங்குகிறீர் ஸ்தோத்திரம்
531. செம்மையான இருதய முள்ளவர்களை இரட்சிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
532. இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவரே ஸ்தோத்திரம்
533. நீதிமானை சோதித்தறிகிறவரே ஸ்தோத்திரம்
534. நீதிமானுடைய சந்ததியோடிருக்கிறவரே ஸ்தோத்திரம்
535. நீதிமான்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
536. நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் எல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பவரே ஸ்தோத்திரம்
537. நீதிமான்களுடைய எலும்பகளெல்லாம் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
538. நீதிமான்கள் கைவிடப்பட்டதில்லையே, அவன் சந்ததி அப்பத்திற்கு இரந்து திரிகிறதில்லையே ஸ்தோத்திரம்
539. நீதிமான்களை தாங்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
540. நீதிமான்களுக்கு உதவி செய்து விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
541. நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டீரே ஸ்தோத்திரம்
542. நீதிமானை பனையைப் போல செழிப்பாக்கி லீபனோனிலுள்ள கேதுருவைப் போல வளரச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
543. நீதிமான்களை சிநேகிக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
544. நீதிமான்கள் முதிர் வயதிலும் கனி தந்து பஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் என்றீரே ஸ்தோத்திரம்
545. உத்தமனுக்கு துணையாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
546. உத்தமர்களின் நாட்களை அறிந்திருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
547. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்குபவரே ஸ்தோத்திரம்
548. சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்தும் கர்த்தரே ஸ்தோத்திரம்
549. சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பவரே ஸ்தோத்திரம்
550. சாந்த குணமுள்ளவர்களுக்கு வழியை போதிக்கிறவரே ஸ்தோத்திரம்
551. பாவிகளுக்கு வழியை தெரிவிக்கிறவரே ஸ்தோத்திரம்
552. உமக்கு பயந்தவர்களுக்கு உடன்படிக்கையை தெரிவிப்பதற்காக ஸ்தோத்திரம்
553. தமது பரிசுத்தவான்களை கைவிடாத கர்த்தரே ஸ்தோத்திரம்
554. தமது பரிசுத்தவான்களுக்கு சமாதானம் கூறுபவரே ஸ்தோத்திரம்
555. பரிசுத்தவான்களுடைய ஆலோசனை சபையில் மிகவும் பகழப்படத்தக்க தேவனே ஸ்தோத்திரம்
556. தம்மை சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
557. கேருபீன்களாலும் சேராபீன்களாலும் நித்தமும் போற்றப்படுகிறவரே ஸ்தோத்திரம்
558. என் தலையை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
559. என் கொம்பை காண்டா மிருகத்தின் கொம்பைப் போல் உயர்த்துவீர் ஸ்தோத்திரம்
560. என்னை உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்
561. என்னைத் தாங்குகிறவரே ஸ்தோத்திரம்
562. எனனை சுகமாய் தங்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
563. எனக்கு ஆதரவாய் இருந்தவரே, இருக்கிறவரே ஸ்தோத்திரம்
564. என் விளக்கை ஏற்றுகிறவரே ஸ்தோத்திரம்
565. என் இருளை வெளிச்சமாக்குகிறவரே ஸ்தோத்திரம்
566. என் செவியைத் திறந்தீரே ஸ்தோத்திரம்
567. என் விண்ணப்பத்தைக் கேட்டீரே ஸ்தோத்திரம்
568. என் அழுகையின் சத்தத்தைக் கேட்பவரே ஸ்தோத்திரம்
569. என் கண்ணீர் உம்முடைய துருத்தியில் அல்லவோ இருக்கிறது ஸ்தோத்திரம்
570. என் கண்களை கண்ணீருக்கு தப்பவித்தீரே ஸ்தோத்திரம்
571. என் காலை இடறலுக்கு தப்பவித்தீரே ஸ்தோத்திரம்
572. அடிகளை உறுதிப்படுத்தினீர் ஸ்தோத்திரம்
573. என் கால்களை வலைக்கு நீங்கலாக்குபவரே ஸ்தோத்திரம்
574. என் கால்களை மான் கால்கள் போலாக்குபவரே ஸ்தோத்திரம்
575. என் கால்கள் வழுவாத படி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர் ஸ்தோத்திரம்
576. என் வழியை செவ்வைப் படுத்துகிற தேவனே ஸ்தோத்திரம்
577. என்னை விசாலமான இடத்தில் கொண்டு வந்தவரே ஸ்தோத்திரம்
578. சத்துருக்களின் கையில் என்னை ஒப்பக் கொடாமல் என பாதங்களை விசாலத்திலே நிறுத்தினவரே ஸ்தோத்திரம்
579. நெருக்கத்திலிருந்த என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தீர் ஸ்தோத்திரம்
580. எல்லா நெருக்கத்தையும் நீக்கி விடுவித்தீர் ஸ்தோத்திரம்
581. என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே ஸ்தோத்திரம்
582. அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவரே ஸ்தோத்திரம்
583. என் கைகளை யுத்தத்திற்கு பழக்குவிக்கிறவரே ஸ்தோத்திரம்
584. என் கைகளை போருக்கும் என் வரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்
585. (என்) கை பிடித்து நடக்க பழக்குபவரே ஸ்தோத்திரம்
586. உமது அடியானை பட்டயத்துக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
587. யுத்தநாளில் என் தலையை மூடினதற்காய் ஸ்தோத்திரம்
588. எனக்கு நேரிட்ட போரை நீக்கி என் ஆத்துமாவை சமாதானத்துடன் மீட்டீர் ஸ்தோத்திரம்
589. என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப் பண்ணீர் ஸ்தோத்திரம்
590. என்னை பெலத்தால் இடைக்கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
591. தேவன் எனக்கு பலத்தை கட்டளையிட்டதற்காக ஸ்தோத்திரம்
592. அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன் ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம்
593. என்னை உமது காருணியத்தால் பெரியவனாக்குகிறிர் ஸ்தோத்திரம்
594. ஜாதிகளுக்கு என்னை தலைவனாக்குகிறீர் ஸ்தோத்திரம்
595. ஜனங்களை எனக்கு கீழ்ப்படுத்துகிற தேவனே ஸ்தோத்திரம்
596. ஜனங்களின் சண்டைகளுக்கு என்னை தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
597. நாவுகளின் சண்டைகளுக்கு எம்மை விலக்கி காப்பாற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்
598. எனக்காக பழிக்குப் பழி வாங்குபவரே ஸ்தோத்திரம்
599. என் சத்துருக்களுக்கு தீமைக்குத் தீமையை சரிக்கட்டுகிறீர் ஸ்தோத்திரம்
600. என் சத்துருக்களுக்கு வரும் நீதி சரிக்கட்டுதலை காணும்படி செய்வீர் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 601 - 700601. எனக்கு பொல்லப்ப தேடுகிறவர்கள் வெட்கி இலச்சை அடைந்தபடியால் ஸ்தோத்திரம்
602. எனனை என் சத்துருக்களிலும் ஞானமுள்ளவனாக்குகிறதற்காய் ஸ்தோத்திரம்
603. என்னை உம் பேரில் நம்பிக்கையாயிருக்கப் பண்ணினீரே ஸ்தோத்திரம்
604. என்னைப் பல்லுள்ள இடங்களில் மேய்க்கிறீர் ஸ்தோத்திரம்
605. அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறவரே ஸ்தோத்திரம்
606. என் ஆத்துமாவைத் தேற்றுகிறவரே ஸ்தோத்திரம்
607. என்னை நீதியின் பாதையில் நடத்துகிறவரே ஸ்தோத்திரம்
608. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தேவரீர் எனனோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம்
609. என்னைத் தேற்றும் உம் கோலுக்காக தடிக்காக ஸ்தோத்திரம்
610. என் சத்துருக்கள் முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் ஸ்தோத்திரம்
611. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
612. என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கிறீர் ஸ்தோத்திரம்
613. என் ஜீவனுள்ள நாளெல்லாம் என்னைத் தொடரும் உம் நன்மைக்காக, கிருபைக்காக ஸ்தோத்திரம்
614. என் கண்களுக்கு முன்பாக இருக்கும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்
615. நான் பெற்ற சகாயத்திற்காக ஸ்தோத்திரம்
616. என் காலங்கள் உமது கரத்திலிருப்பதற்காக ஸ்தோத்திரம்
617. தீங்கு நாளில் என்னைத் தமது கூடார மறைவில் மறைத்து ஒளித்து வைப்பதற்காக ஸ்தோத்திரம்
618. மனுஷனுடைய அகங்காரத்துக்கு உமது சமுகத்தின் மறைவில் என்னை மறைக்கிறதற்காய் ஸ்தோத்திரம்
619. என்னை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
620. நீர் என்னை குணமாக்கினீர் ஸ்தோத்திரம்
621. என்னை உயிரோடு காத்தீர் ஸ்தோத்திரம்
622. என் தகப்பனும் என் தாயும் கைவிட்டாலும் என்னை சேர்த்துக்கொள்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்
623. என் இருதயத்தை ஸ்திரப் படுத்துகிற கர்த்தரே ஸ்தோத்திரம்
624. நீர் என்னைத் தூக்கி எடுத்த படியால் உமக்கு ஸ்தோத்திரம்
625. உளையான சேற்றினின்று தூக்கினீரே ஸ்தோத்திரம்
626. பயங்கரமான குழியினின்று என்னைத் தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
627. மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
628. என் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணினீர் ஸ்தோத்திரம்
629. என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்கு தப்பவித்தீர் ஸ்தோத்திரம்
630. என் ஆத்துமாவை மரணத்திற்கு தப்பவித்தீர் ஸ்தோத்திரம்
631. என் ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர் ஸ்தோத்திரம்
632. என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்கிறவரே ஸ்தோத்திரம்
633. என் பாவங்கள் மூடப்பட்டதற்காக ஸ்தோத்திரம்
634. என் மீறுதலை மன்னித்தீரே ஸ்தோத்திரம்
635. என் அக்கிரமங்களை எண்ணாதிருக்கிறீரே ஸ்தோத்திரம்
636. என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே ஸ்தோத்திரம்
637. என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்தவிட்டதற்காக ஸ்தோத்திரம்
638. என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே ஸ்தோத்திரம்
639. என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீரே ஸ்தோத்திரம்
640. என்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டினதற்காய் ஸ்தோத்திரம்
641. பது எண்ணெயால் என்னை அபிஷேகம் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
642. நள்மையால் என் வாயை திருப்தியாக்குகிறீர் ஸ்தோத்திரம்
643. என் வாயில் தேவனைத் துதிக்கும் பதுப்பாட்டைத் தந்தீர் ஸ்தோத்திரம்
644. இரட்சண்யப் பாடல்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளும் படிச் செய்கிறீர் ஸ்தோத்திரம்
645. என் பலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர் ஸ்தோத்திரம்
646. என் இரட்டைக் களைந்து போட்டு மகிழ்ச்சியெனும் கட்டினால் இடைக்கட்டினீர் ஸ்தோத்திரம்
647. அன்பின் கயிறுகளால் (என்னை) கட்டி இழுப்பவரே ஸ்தோத்திரம்
648. என் மேல் நினைவாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
649. என்னை ஏற்றுக் கொள்பவரே ஸ்தோத்திரம்
650. என்னை ஆதரிப்பவரே ஸ்தோத்திரம்
651. தேவரீர் என் பட்சத்திலிருக்கிறீர் ஸ்தோத்திரம்
652. பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
653. என்னுடைய எல்லாப் பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டவரே ஸ்தோத்திரம்
654. என் இருதயத்தின் வேண்டுதல்களை எனக்கு அருள் செய்பவரே ஸ்தோத்திரம்
655. உமது இடதுகை என் தலைகீழிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
656. உமது வலதுகரம் என்னை அணைத்துக் கொள்வதற்காய் ஸ்தோத்திரம்
657. உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருப்பதற்காய் ஸ்தோத்திரம்
658. நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவரே ஸ்தோத்திரம்
659. நீதியைப் பேசி யதார்த்த மானவைகளை அறிவிக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
660. என் நீதியை வெளிச்சத்தைப் போலவும் என் நியாயத்தை பட்டப் பகலைப் போலவும் விளங்கப் பண்ணுவீர் ஸ்தோத்திரம்
661. என் பொருத்தனைகளைக் கேட்டதற்காய் ஸ்தோத்திரம்
662. என் ஜெபத்தைத் தள்ளாமலிருந்த தேவனே ஸ்தோத்திரம்
663. தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலிருந்த தேவனே ஸ்தோத்திரம்
664. கிருபையினால் என்னைச் சந்திக்கும் தேவனே ஸ்தோத்திரம்
665. என் தாயின் வயிற்றில் என்னைச் சந்திக்கும் தேவனே ஸ்தோத்திரம்
666. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் ஸ்தோத்திரம்
667. நான் உருவாக்கப்பட்ட் போது என் எலும்பகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை ஸ்தோத்திரம்
668. என் கருவை உம் கண்கள் கண்டதே ஸ்தோத்திரம்
669. கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன் ஸ்தோத்திரம்
670. என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே ஸ்தோத்திரம்
671. என் சிறு வயது முதல் எனக்கு போதித்து வந்தீர் ஸ்தோத்திரம்
672. என் நோக்கம் நீரே கர்த்தாவே ஸ்தோத்திரம்
673. என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ஸ்தோத்திரம்
674. என் மேன்மையை பெருகப் பண்ணி என்னை மறுபடியும் தேற்றுவீர் ஸ்தோத்திரம்
675. உம்முடைய ஆலோசனையின் படி என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக் கொள்வீர் ஸ்தோத்திரம்
676. என் காலைத் தள்ளாடவொட்டீர் ஸ்தோத்திரம்
677. என்னைக் காக்கிறவர் உறங்கமாட்டீர் ஸ்தோத்திரம்
678. பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் என்னை சேதப்படுத்துவதில்லை ஸ்தோத்திரம்
679. கர்த்தர் என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பீர் ஸ்தோத்திரம்
680. கர்த்தர் என் ஆத்துமாவை காப்பீர் ஸ்தோத்திரம்
681. என் போக்கையும் என் வரத்தையும் என்றென்றைக்கும் காப்பீர் ஸ்தோத்திரம்
682. என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும் ஸ்தோத்திரம்
683. எனக்கு முன்பாக கடந்து போகிறவரே ஸ்தோத்திரம்
684. கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
685. என் உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
686. என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீர் ஸ்தோத்திரம்
687. என் நாவில் சொல் பிறவா முன்னே அதை நீர் அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
688. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
689. நான் துன்பத்தின் நடுவே நடந்தாலும் என்னை உயிர்ப்பிப்பீர் ஸ்தோத்திரம்
690. என் ஆவி என்னில் தியங்கும் போது என் பாதையை அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
691. முற்பறத்திலும் பிற்பறத்திலும் என்னை நெருக்கி உமது கரத்தை என் மேல் வைக்கிறீர் ஸ்தோத்திரம்
692. என்னை வெகுவாய்த் தண்டித்தும் சாவுக்கு என்னை ஒப்பக் கொடாததற்காய் ஸ்தோத்திரம்
693. விரோதிகளுடைய பற்களுக்கு எம்மை ஒப்பக்கொடாததற்காய் ஸ்தோத்திரம்
694. நான் கூப்பிட்ட நாளில் எனக்கு மறுஉத்தரவு அருளினீர் ஸ்தோத்திரம்
695. உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள் அவைகளுக்காய் ஸ்தோத்திரம்
696. என் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி, என்னிடத்தில் உள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறதற்காய் ஸ்தோத்திரம்
697. என் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்குவதற்காய் ஸ்தோத்திரம்
698. உச்சிதமான கோதுமையினால் என்னைத் திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம்
699. எங்கள் மன விருப்பத்தின்படி எங்களுக்கு தந்தருள்பவரே ஸ்தோத்திரம்
700. எங்களுடைய தாழ்வில் எங்களை நினைத்தவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 701 - 800701. எம்மை நினைக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்
702. எங்களை எழுந்து நிமிர்ந்து நிற்க செய்கிறவரே ஸ்தோத்திரம்
703. எங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின கர்த்தாவே ஸ்தோத்திரம்
704. எங்களை உமது சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்
705. உமது பேரின்ப நதியினால் எமது தாகத்தை தீர்க்கிறீர் ஸ்தோத்திரம்
706. பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் ஸ்தோத்திரம்
707. எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறீர் ஸ்தோத்திரம்
708. எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களை பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்
709. வெள்ளியைப் படமிடுவது போல எங்களை படமிட்டீரே (படமிடுகிறவரே) ஸ்தோத்திரம்
710. எங்கள் நுகத்தடியை முறித்த கர்த்தரே ஸ்தோத்திரம்
711. உமக்கு பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதிக்கிறவரே ஸ்தோத்திரம்
712. எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
713. உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
714. உமது அடியார்ன் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் ஆகவே ஸ்தோத்திரம்
715. உம்முடைய கிருபை உமக்கு பயந்தவர்கள் மேலும் உம்முடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றைக்குமுள்ளது, ஆகவே ஸ்தோத்திரம்
716. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, உமக்கு பயப்படுகிறவர்கள் மேல் உம்முடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
717. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல் கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறீர், ஆகவே ஸ்தோத்திரம்
718. எங்களுடைய பாவங்களுக்குத் தக்கதாய் செய்யாமலிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
719. எங்களுடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாய் சரிக் கட்டாமலுமிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
720. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நீர் எம்முடைய பாவங்களை எம்மை விட்டு விலக்கினதற்காய் ஸ்தோத்திரம்
721. எங்களுக்காக எங்கள் கிரியைகளையெல்லாம் நடத்தி வருகிறவரே ஸ்தோத்திரம்
722. தம்முடைய ஜனத்திற்கு பெலனையும் சத்துவத்தையும் அளிப்பவரே ஸ்தோத்திரம்
723. தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, ஆசீர்வதிப்பவரே ஸ்தோத்திரம்
724. தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைத்திருக்கிறீர், ஆகவே ஸ்தோத்திரம்
725. தம்முடைய ஜனத்திற்காய் ஒரு கொம்பை ஆயத்தப்படுத்தி இருப்பதற்காய் ஸ்தோத்திரம்
726. தமது மந்தையை விசாரி்க்கிறவரே ஸ்தோத்திரம்
727. தமது மந்தையை யுத்தத்திலே சிறந்த குதிரையாய் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்
728. வல்லமையுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
729. மகத்துவமுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
730. கேதுரு மரங்களை முறிக்கும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
731. அக்கினி ஜீவாலையை பிளக்கும் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
732. வனாந்தரத்தை அதிரப் பண்ணும் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
733. பெண்மான்களை ஈனும்படி செய்யும் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
734. இரட்சிக்கும் உமது வலதுகரத்திற்காக, உமது பயத்திற்காக ஸ்தோத்திரம்
735. தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும் படி பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கும் உம் கண்களுக்காக ஸ்தோத்திரம்
736. உம்முடைய முகப் பிரகாசத்துக்காக ஸ்தோத்திரம்
737. கொள்ளையுள்ள பர்வதங்களைப் பார்க்கிலும் பிரகாசமுள்ளவரே ஸ்தோத்திரம்
738. வானத்தையும் பூமியையும் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்
739. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்
740. தாம் அபிஷேகம் பண்ணினவனுக்கு அடைக்கலமானவரே ஸ்தோத்திரம்
741. உண்மையானவனை தற்காப்பவரே ஸ்தோத்திரம்
742. இடும்ப செய்கிறவனுக்கு பூரணமாய் பதிலளிக்கிறவரே ஸ்தோத்திரம்
743. இருதயங்களை உருவாக்கி செயல்களை எல்லாம் கவனிக்கிறவரே ஸ்தோத்திரம்
744. அவனவன் செய்கைக்குத் தக்கதாய் பலனளிக்கிறவரே ஸ்தோத்திரம்
745. தமக்கு பயந்தவர்களைச் சூழ பாளயமிறங்கி விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
746. உமது நாமத்துக்கு பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்ததற்காய் ஸ்தோத்திரம்
747. நொறுங்குண்ட இருதய முள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
748. நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறிர் ஸ்தோத்திரம்
749. நீரே காரியத்தை வாய்க்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
750. வல்லமை தேவனுடையது என விளம்பினீர் ஸ்தோத்திரம்
751. ஜெபத்தைக் கேட்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம்
752. மாம்சமான யாவரும் உம்மி்டத்தில் வருவார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
753. முழங்கால யாவும் முடங்கும் நாவு யாவும் தேவன் என்று அறிக்கைபண்ணும் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
754. கர்த்தாவே உமது கிரியைகளினால் பூமி திருப்தியாயிருக்கிறது ஸ்தோத்திரம்
755. பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது ஸ்தோத்திரம்
756. கர்த்தாவே, நீர் பூமியின் ரூபத்தை பதிதாக்குகிறீர் ஸ்தோத்திரம்
757. தேவரீர், நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர் பாய்ச்சுகிறீர் ஸ்தோத்திரம்
758. தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் பூமியைச் செழிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்
759. பூமியின் பயிரை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்
760. பூமி உம்முடைய காருணியத்தால் நிறைந்திருக்கிறதற்காக ஸ்தோத்திரம்
761. உன்னதமானவருடைய வலக்கரத்தில் உள்ள வருஷங்களுக்காக ஸ்தோத்திரம்
762. வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் ஸ்தோத்திரம்
763. உம்முடைய பாதைகள் நெய்யாய்ப் பொழிவதற்காக ஸ்தோத்திரம்
764. உம்மிடத்தில் உள்ள ஜீவ ஊற்றுக்காக ஸ்தோத்திரம்
765. மகா ஆழமாக இருக்கும் உம் நியாயங்களுக்காக ஸ்தோத்திரம்
766. மகா ஆழமான உம் யோசனைகளுக்காக ஸ்தோத்திரம்
767. ஆராய்ந்து முடியாத உம் மகத்துவத்திற்காக ஸ்தோத்திரம்
768. மகத்துவமுள்ள உம் கிரியைகளுக்காக ஸ்தோத்திரம்
769. பர்வதங்கள் போலிருக்கும் உம் நீதிக்காக ஸ்தோத்திரம்
770. வானத்துக்கும் பூமிக்கும் மேலான உம் மகிமைக்காக ஸ்தோத்திரம்
771. வானங்களில் விளங்கும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்
772. மேகங்கள் பரியந்தம் எட்டுகிற சத்தியத்திற்காக ஸ்தோத்திரம்
773. மனுபத்திரர் வந்தடையும் உம் செட்டைகளின் நிழலுக்காக ஸ்தோத்திரம்
774. ஆயிரம் பதினாயிரமான தேவனுடைய இரதங்களுக்காக ஸ்தோத்திரம்
775. மேகங்களை இரதமாக்கி காற்றின் செட்டைகளின் மேல் செல்லுகிறவரே ஸ்தோத்திரம்
776. வானங்களை திரையைப் போல் விரித்திருப்பவரே ஸ்தோத்திரம்
777. நட்சத்திரங்களையெல்லாம் எண்ணி அவைகளைப் பேரிட்டு அழைக்கிறவரே ஸ்தோத்திரம்
778. உமது அறிவு அளவில்லாதது ஆண்டவரே ஸ்தோத்திரம்
779. உம்முடைய காருணியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்
780. உமது செளந்தரியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்
781. உம்முடைய இரக்கங்கள் மகா பெரியது ஸ்தோத்திரம்
782. உமது கிருபை பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்
783. பகற்காலத்தில் கிருபையைக் கட்டளையிடுவதற்காய் ஸ்தோத்திரம்
784. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, ஆகவே ஸ்தோத்திரம்
785. கிருபையையும் மகிமையை அருளுபவரே ஸ்தோத்திரம்
786. தேவனே உமது கிருபை எவ்வளவு அருமையானது ஸ்தோத்திரம்
787. தேவனே உமது கிருபை என்றுமுள்ளது ஸ்தோத்திரம்
788. நாங்கள் நிர்மூலமாகாமலிருப்பது உம் கிருபையே ஸ்தோத்திரம்
789. காலைதோறும் உம் கிருபைகள் பதியவைகளாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
790. கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டுகிறவரே ஸ்தோத்திரம்
791. தேவரீர் நீர் செய்த உபகாரங்களுக்காக ஸ்தோத்திரம்
792. கர்த்தாவே நீர் மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்
793. நீர் பராக்கிரமத்தை அணிந்து அதை கச்சையாக கட்டிக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்
794. ஒளியை வஸ்திரமாக தரித்துக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்
795. தம்முடைய தூதர்களை காற்றுகளாகச் செய்பவரே ஸ்தோத்திரம்
796. தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம்
797. பசியுள்ள ஆத்துமாவை நன்னையால் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்
798. தமது வசனத்தை அனுப்பி குணமாக்குகிறவரே ஸ்தோத்திரம்
799. கர்த்தாவே உமது வேதத்தில் உள்ள அதிசயங்களுக்காக ஸ்தோத்திரம்
800. சிறுமையிலும் எனக்கு ஆறுதலாயிருந்த உம் வசனத்திற்காக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 801 - 900801. உம் வசனத்தை நம்பச் செய்தீரே ஸ்தோத்திரம்
802. உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம்
803. உம்முடைய வசனத்தின்படி என்னை நன்றாய் நடத்தினீர் (நடத்துகிறீர், நடத்துவீர்) ஸ்தோத்திரம்
804. உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம்
805. உம்னுடைய வசனம் பேதைகளை உணர்வுள்ளதாக்குகிறதற்காக ஸ்தோத்திரம்
806. மிகவும் படமிடப்பட்ட உம் வார்த்தைகளுக்காய் ஸ்தோத்திரம்
807. உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
808. உம்முடைய வார்த்தை உத்தமமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
809. உம்முடைய செயல்கள் எல்லாம் சத்தியமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
810. நீர் பயங்கரமான காரியங்களை எங்களுக்கு செய்தீர் (செய்கிறீர், செய்வீர்) ஸ்தோத்திரம்
811. நீதியுள்ள உத்தரவு எங்களுக்கு அருளுகிறீர் ஸ்தோத்திரம்
812. உம்முடைய கோபம் ஒரு நிமிஷமே ஸ்தோத்திரம்
813. உம்முடைய தயவோ நீடிய வாழ்வு ஸ்தோத்திரம்
814. எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவரே ஸ்தோத்திரம்
815. என்றென்றைக்கும் கோபம் கொண்டிராதவரே ஸ்தோத்திரம்
உமது கிரியைகள் அதிசயமானவைகள், ஸ்தோத்தரிக்கிறோம் ஆண்டவரே!
816. எகிப்தியரின் தலைச்சன்களை சங்கரித்தீர் ஸ்தோத்திரம்
817. கடலை உலர்ந்த தரையாக மாற்றினீர் ஸ்தோத்திரம்
818. சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலையை உடைத்தீர் ஸ்தோத்திரம்
819. தேவரீர் முதலைகளின் தலையை நருக்கிப் போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்
820. ஊற்றையும் ஆற்றையும் பிளந்தீர் ஸ்தோத்திரம்
821. மகாநதிகளை வற்றிப் போகப் பண்ணினீர் ஸ்தோத்திரம்
822. ஆற்றை கால்நடையாய் கடக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்
823. பகலிலே மேகத்தினாலும் இரவிலே அக்கினி வெளிச்சத்தினாலும் ஜனத்தை வனாந்தரத்திலே நடத்தினீர் ஸ்தோத்திரம்
824. கன்மலையைப் பிளந்து தண்ணீரை குடிக்கக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்
825. மாராவின் தண்ணீரை மதுரமாக்கினீர் ஸ்தோத்திரம்
826. தூதர்களின் அப்பமாகிய மன்னாவைக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்
827. பார்வோனையும் அவன் சேனையையும் சிவந்த சமுத்திரத்திலே கவிழ்த்துப்போட்டீரே ஸ்தோத்திரம்
828. எரிகோவின் கோட்டையை வீழ்த்தினீர் ஸ்தோத்திரம்.
829. பெரிய ராஜாக்களையும் பிரபலமான ராஜாக்களையும் சங்கரித்தீர் ஸ்தோத்திரம்.
830. கழுதையின் வாயைத் திறந்தீர் ஸ்தோத்திரம்.
831. சூரியனை கிபியோன் மேலும் சந்திரனை ஆயலோன் மேலும் தரித்து நிற்கச் செய்தவரே ஸ்தோத்திரம்.
832. குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
833. நீருற்றுகளை வறண்ட ஸ்தலமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
834. குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
835. அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
836. கனமலையைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
837. கற்பாறையை நீரூற்றாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
838. வறண்ட நிலத்தை நீருற்றுகளாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
839. மலடியை சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்குபவரே ஸ்தோத்திரம்
840. நிர்மூலமானவைகளைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
841. பாழானதை பயிர் நிலமாக்குகிறவரே ஸ்தோத்திரம்
842. காணாமற்போனதை தேடுகிறவரே ஸ்தோத்திரம்
843. துரத்துண்டதை திரும்பச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
844. நசல் கொண்டதை திடப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்
845. எலும்ப முறிந்ததை காயங்கட்டுபவரே ஸ்தோத்திரம்
846. காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே ஸ்தோத்திரம்
847. பெரு வெள்ளத்துக்குப் பகலிடமே ஸ்தோத்திரம்
848. வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாக இருப்பவரே ஸ்தோத்திரம்
849. விடாய்த்த பூமிக்கு பெருங் கன்மலையின் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம்
850. குருடரின் கண்களைத் திறக்கிறவரே ஸ்தோத்திரம்
851. சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
852. சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
853. தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்
854. வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்
855. எல்லார் மேலும் தயையுள்ளவரே ஸ்தோத்திரம்
856. எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற வேளையில் ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
857. விதைக்கிறவனுக்கு விதையையும் பசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் அளிக்கிறவரே ஸ்தோத்திரம்
858. பசியாயிருக்கிறவனுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
859. தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
860. தமக்குப் பயந்தவர்களுடைய மனவிருப்பத்தின் படி செய்கிறவரே ஸ்தோத்திரம்
861. தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறவரே ஸ்தோத்திரம்
862. தம்மில் அன்பகூருகிறயாவரையும் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
863. கபடற்றவர்களை காக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
864. உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
865. தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரே ஸ்தோத்திரம்
866. தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவரே ஸ்தோத்திரம்
867. வெண்கலக் கதவுகளை உடைப்பவரே ஸ்தோத்திரம்
868. இருப்பத் தாழ்ப்பாள்களை முறிப்பவரே ஸ்தோத்திரம்
869. அந்தகாரத்தில் உள்ள பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் உள்ள பதையல்களையும் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
870. துரத்துண்ட இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பவரே ஸ்தோத்திரம்
871. பறந்து காக்கிற பட்சி போல் எருசலேமின் மேல் (எங்கள் மேல்) ஆதரவாயிருப்பவரே ஸ்தோத்திரம்
872. பர்வதங்கள் எருசலேமைக் சுற்றியிருக்குமாப் போல என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றி நீர் இருக்கிறதற்காக ஸ்தோத்திரம்
873. எருசலேமைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
874. கர்த்தாவே, நீர் வீட்டை கட்டுகிறவர் ஸ்தோத்திரம்
875. கர்த்தாவே, நீர் நகரத்தைக் காக்கிறவர் ஸ்தோத்திரம்
876. தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்பவது போல எங்கள் சிறையிருப்பைத் திருப்பகிறவரே ஸ்தோத்திரம்
877. துன்மார்க்கனி்ன் கயிறுகளை கர்த்தர் அறுத்தீரே ஸ்தோத்திரம்
878. துன்மார்க்கரின் வழியை கவிழ்த்துப் போடுகிறவரே ஸ்தோத்திரம்
879. துன்மார்க்கரை தரைமட்டும் தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம்
880. துன்மார்க்கரை சறுக்கலான இடங்களில் நிறுத்தி பாழான இடங்களில் வழப்பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
881. பாவிகளுக்கு விலகினவரே ஸ்தோத்திரம்
882. தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவரே ஸ்தோத்திரம்
883. மன்னிக்க தயை பெருத்தவரே ஸ்தோத்திரம்
884. பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம்
885. நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம்
886. ஒருவனை தாழ்த்தி ஒருவனை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
887. பெருமையுள்ளவனுக்கோ எதிர்த்து நிற்பவரே ஸ்தோத்திரம்
888. தாழ்மையுள்ளவனுக்கோ கிருபை அளிப்பவரே ஸ்தோத்திரம்
889. ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்
890. காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
891. ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
892. அறிவாளிகளுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம்
893. மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம்
894. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்ப உண்டு ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
895. உம்மிடத்தில் திரளான மீட்ப உண்டு, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
896. மெய்யாகவே ஜனங்களை சிநேகிக்கிறவரே ஸ்தோத்திரம்
897. ஜாதிகளை தண்டிக்கிறவரே ஸ்தோத்திரம்
898. சமுத்திரத்தின் மும்முரத்தையும், அலைகளின் இரைச்சலையும் அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
899. ஜனங்களின் அமளியை அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
900. ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை செய்கிறவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரங்கள் 901 - 1000901. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகள் மடியில் சரிகட்டுகிறவரே ஸ்தோத்திரம்
902. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவரே ஸ்தோத்திரம்
903. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம்
904. வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம்
905. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்தவல்லவரே ஸ்தோத்திரம்
906. உமது சமுகத்தின் இரட்சிப்பினிமித்தம் உம்மை ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்திரம்
907. எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம்
908. மரணபரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம்
909. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும். ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது.
அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர் ஸ்தோத்திரம்
910. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
911. வெளிச்சத்தை உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
912. ஆகாயவிரிவையும் சமுத்திரத்தையும் உப்பையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
913. பூக்கள், கனிகள், காய்கள், கிழங்குகள், கீரைகள் இவைகளை கொடுக்கும் மரம், கொடி, பல் பூண்டுகளுக்காய் ஸ்தோத்திரம்
914. சூரிய சந்திர நட்சத்திரங்களுக்காய் ஸ்தோத்திரம்
915. நீர்வாழும் மிருகங்கள், பறவைகள், மற்றும் மீன்களுக்காக ஸ்தோத்திரம்
916. பறவைகள், வீட்டு மிருங்கள், காட்டுமிருகங்கள், ஊரும் பிராணிகளுக்காக ஸ்தோத்திரம்
917. மண்ணினாலே மனிதனை உருவாக்கி, ஜீவசுவாசத்தைக் கொடுத்து, ஏற்றத்துணையையும் கொடுத்தீர் ஸ்தோத்திரம்
918. நீர் திட்டம் பண்ணின காலங்களுக்காக, மழைக்காக, பனிக்காக, வெயிலுக்காக, நீருற்றுகளுக்காக ஸ்தோத்திரம்
919. ஆறுகளுக்காக, ஓடைகளுக்காக, ஏரிகளுக்காக, குளங்களுக்காக நீர்வீழ்ச்சிகளுக்காக, நீரூற்றுகளுக்காக ஸ்தோத்திரம்
920. மலைகளுக்காக, குன்றுகளுக்காக, மேடுகளுக்காக, பள்ளதாக்குகளுக்காக, சமபூமிகளுக்காக, பாலைவனங்களுக்காக, பனிப்பிரதேசங்களுக்காக ஸ்தோத்திரம்
921. காடுகளுக்காக, குகைகளுக்காக, நிலத்தடி கனிமங்களுக்காக, எண்ணெய் ஊற்றுக்களுக்காக எரிவாயு ஊற்றுக்களுக்காக ஸ்தோத்திரம்
எங்கள் இரட்சகராகிய இயேசுவே, உமது அற்பதங்களுக்காக ஸ்தோத்திரம்
922. தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினீர் ஸ்தோத்திரம்
923. பிறவிக் குருடர், செவிடர் ஊமையானவர்களை காணவும் கேட்கவும், பேசவும் வைத்தீர் ஸ்தோத்திரம்
924. முடவர், சப்பாணிகள், கூனர், சூம்பின உறுப்படையோர், திமிர்வாதக்காரரை சுகமாக்கினீர் ஸ்தோத்திரம்
925. பிசாசின் வல்லமையில் பிடிபட்டிருந்தோரை விடுதலையாக்கினீர் ஸ்தோத்திரம்
926. குஷ்டரோகிகளை சுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம்
927. மரித்த லாசரு, யவீருவின் மகள் நாயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடெழுப்பினீர் ஸ்தோத்திரம்
928. காற்றையும் கடலையும் அமர்த்தினீர் ஸ்தோத்திரம்
929. கடலின் மேல் நடந்தீர் ஸ்தோத்திரம்
930. உமது வார்த்தைப்படி ஆழத்திலே வலை போட்ட போது திரளான மீன்களும், மற்றோரு முறை வலது பக்கத்திலே வலை போட்ட போது, 153 பெரிய மீன்களும் படிக்கச் செய்த அற்பதத்திற்காக ஸ்தோத்திரம்
931. வரிக்கான பணம் மீன் வாயில் கடைக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்
932. பெரும்பாடுள்ள ஸ்திரீயையும் பேதுருவின் மாமியையும், 38 வருடமாய் வியாதியாயிருந்த மனுஷனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்
933. 5 அப்பம் 2 மீன் கொண்டு 5000 பேருக்கும் மேலானவரை போஷித்து மீதியானதை 12 கூடைகளில் நிரப்பச் செய்தீர் ஸ்தோத்திரம்
934. 7 அப்பமும் சில சறு மீன்களும் கொண்டு 4000 பேருக்கும் மேலாக போஷித்தீர் ஸ்தோத்திரம்
935. மல்குஸின் வெட்டப்பட்ட காதை ஒட்ட வைத்தீர் ஸ்தோத்திரம்
936. உம்மைக் கொல்ல நினைத்த மக்களிடமிருந்து அற்பதமாய் நீர் மறைந்து போனீர் ஸ்தோத்திரம்
937. உம்மை பிடிக்க வந்த போர்ச்சேவகரின் கூட்டத்தை பின்னிட்டு விழச்செய்தீர் ஸ்தோத்திரம்
938. சந்திரரோகியையும் நீர் கோவை வியாதியுள்ளவனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்
939. அத்திமரம் உமது சாபத்தால் உடனே பட்டுப்போனது ஸ்தோத்திரம்
940. மனிதனின் பாவ இருதயத்தை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி அவனை பதிய சிருஷ்டியாக மாற்றும் மகத்தான இந்த உம் அற்பதத்திற்காக ஸ்தோத்திரம்
வேதத்தில் உள்ள உம் வாக்குத்தத்தங்களுக்காக ஸ்தோத்திரம்!
941. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்பவிப்பார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
942. தமது சிறகுகளால் உன்னை மூடுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
943. அவர் செட்டைகளின் கிழ் அடைக்கலம் பகுவாய், அவர் சத்தியம் உனக்கு பரிசையும் கேடகமுமாகும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
944. இரவில் உண்டாக்கும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்பக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாகும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
945. உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலது பறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
946. பெல்லாப்ப உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
947. உன் வழிகளிளெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காய்த் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
948. உன் பாதம் கல்லில் இடறாதபடி (தூதர்கள்) தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
949. சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
950. என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறவனை விடுவிப்பேன் என நாமாத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
951. என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்பவித்து கனப்படுத்துவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
952. நீடித்த நாட்களால், அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்கு காண்பிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
953. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தை கைவிடாமலும் இருப்பார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குள்ள ஆசீர்வாதங்கள் (954 - 958)
954. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
955. உனக்குப் பாக்கியமும் நன்மையும் உணடாயிருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
956. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சக் கொடியைப் போலிருப்பாள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
957. உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல இருப்பார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
958. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
959. உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
960. உன் சந்ததி மேல் என் ஆவியையும் உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
961. உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்வேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
962. உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள. உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
963. மலைகள் வலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று உம்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
964. என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என பலம் பூரணமாய் விழங்கும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
965. இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
966. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
967. நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
968. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப் படுத்துவாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
969. எனனை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
970. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
971. தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
972. தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
973. இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
974. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு கூட இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
975. நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
976. நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
977. என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
978. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாக கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
979. பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
980. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
981. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உனனைக் கைவிடுவதுமில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
982. நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
983. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீஙகள் சும்மாயிருப்பீர்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
984. இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காண மாட்டீர்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
985. யாக்கோபக்கு விரோதமான மந்திரவாதமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலுமில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
986. ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ, அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
987. இதோ, என் உள்ளங் கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
988. நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
989. நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் என்றீர் ஸ்தோத்திரம்
990. நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன் மேல் பரளுவதில்லை என்றீர் ஸ்தோத்திரம்
991. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய், அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
992. நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
993. கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
994. நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப் படுவதில்லை என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
995. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
996. நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
997. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
998. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் ஆயத்தம் பண்ணின பின்ப... நான் மறபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
999. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
1000. இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.