Wednesday, 18 December 2013

0 இயேசுவின் சீடர்களும் அவர்களின் மரணமும்....


1. அப்.மத்தேயு : எத்தியோவ்பியாவில் சிறையாக்கி, அங்கே தறையோடு சேர்த்து ஆணி அடித்தனர்; அதன்பிறகு தலைவெட்டப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.



2. அப்.சீமோன் பேதுரு : ரோம் மாநகரில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். இயேசுவை போல மரிக்க தனக்கு தகுதி இல்லை, அதனால் என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் என்று போர்சேவகரை வேண்டிக்கொண்டார். அப்படியே அறைந்தார்கள்.


3. அல்பேயுவின் குமாரன் அப்.யாக்கோபு : தேவாலயத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு, பிறகு கற்களால் எறியுண்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.


4. செபதேயுவின் குமாரன் அப்.யாக்கோபு : பாலஸ்தீனாவில் ஏரோது அகிரிப்பா 1 மன்னனால் ஏறக்குறைய கி.பி 44-வது ஆண்டு சிறைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.


5. அப்.அந்திரேயா : அக்காயா என்னப்படும் கிரேக்கப்பட்டணத்தில் ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டு x வடிவிலான சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.


6. அப்.பிலிப்பு : டோமிட்டியன் காலத்தில் ஹீரப்போலிஸ் என்ற பட்டணத்தில் பேதுருவை போல தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.


7. அப்.பற்தொலொமேயு : அர்மேனியாவில் உள்ள அல்லானும் என்னும் பட்டணத்தில் சவுக்கால் அடிக்கப்பட்டு, பிறகு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.


8. அப்.சீமோன் : இவரை குறித்ததான சரியான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை இவரும் சிலுவையில் இரத்தசாட்சியாய் மரித்தார் என்று கருதுகின்றனர்.


9. அப்.தோமா : இந்தியாவிலுள்ள சென்னைப்பட்டணத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.


10. அப்.ததேயு : பெரிட்டஸ் என்ற இடத்தில் இரத்தசாட்சியாய் மரித்தார்.
11. அப்.யோவான் : வயது முதிர்ந்து நல்லபடி மரித்த ஒரே அப்போஸ்தலர் இவரே ஆகும்.


12. அப்.மத்தியா : யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக தெரிந்து கொள்ளப்பட்ட (அப் 1:26) இவர் கற்களால் எறியுண்டு பிறகு சிறைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.


குறிப்பு : கிறிஸ்துவை காட்டிகொடுத்ததான யூதாஸ்காரியோத்து நான்று கொண்டு செத்தான் (மத் 27:5;).



நன்றி:articleswordofgod.in 
Written by Yesudas Solomon

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.