Tuesday 31 December 2013

0 என்னுடைய வாழ்க்கையின் நாட்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா? இல்லை என் கையிலிருக்கிறதா?


சங்கீதம் 103:15 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற் போயிற்று.
சங்கீதம் 144:4 மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள்
கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
புல்லை யார் வேண்டுமானாலும் அறுக்கலாம், ஒரு மாடு எப்பொழுது வேண்டுமானாலும் அதை சாப்பிட்டுவிடும் அல்லது மிதித்து விடும். இவையெல்லாம் மனிதனின் வாழ்நாட்கள் இந்தப்பூமியில் நிரந்தரமல்ல என்பதை வலியுறுத்துகிறது.

என்னுடைய வாழ்க்கையின் நாட்கள் இத்தனை வருடங்கள் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா? இல்லை என் கையிலிருக்கிறதா?

முதல் கேள்விக்கு பதில்: ஆம்.
இரண்டாம் கேள்விக்கு பதில்: ஆம்.
எப்படி இரண்டுக்கும் ஆமாம் என்று சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கவேண்டாம்.

என்னுடைய புரிந்து கொள்ளுதலின்படி கர்த்தர் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் ஒன்றை வைத்துள்ளார். அது மாறாத தேதி அல்ல, மாற்றப்படக் கூடியதேதி. (It is not a constant, It is a variable). அது தள்ளியும் போகலாம், முன்னாக மாற்றப்படவும் முடியும். தேதி தள்ளிப்போன ஒரு ஆள் எசேக்கியா, 15 வருடங்கள் கர்த்தர் கொடுத்தார். (I இராஜாக்கள் 20:6 உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்) தேதி முன்னாக வந்த ஆட்கள் அதிகமான பேர்.

வேதத்தை சற்றே ஆராய்ந்து பார்ப்போம்:
[1] ஆதியாகமம் 6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
எனவே சராசரியாக 120 வயதுதான் ( சிலர் 130 எல்லாம் தொட்டுள்ளார்கள்), உலகின் சாராசரி (average) வயது 120. இது தேவன் வெளிப்படையாக சொல்லிய வார்த்தைகள். இந்தச் சராசரி வயதைத் தாண்டமுடியாது என்பதில் சந்தேகம் இல்லை. (பூமியில் ஏதேனின் நிலமை திரும்பும்வரை).

[2] நீதிமொழிகள் 4:10 என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
[3] நீதிமொழிகள் 5:8, 9 உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
[4] நீதிமொழிகள் 9:11 என்னாலே (தேவனாலே) உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
[5] நீதிமொழிகள் 10:27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

இப்ப நீங்களே சொல்லுங்க, உங்கள் ஆயுசின் நாட்கள் எப்படி அதிகமாகும்? எப்படிக் குறையும்?

அப்படி என்றால்.. கீழே இருக்கின்ற வசனத்துக்கு என்ன அர்த்தம்?
[6]யோபு 14:5 அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக் கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.

அது எப்படி ஆண்டவர் எனக்கு "70" வயசுன்னு குறித்த பிறகும் நான் 60 வயசுல சாகமுடியும்?
[7] பிரசங்கி 7:17 மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?
[8]எண்ணாகமம் 22:33 கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.

காலத்துக்கு முன்னே ஏன் சாகனும் என்பதற்கான காரணம் [7]ல் கூறப்பட்டுள்ளது. காலத்துக்கு முன்னே ஒருவேளை பிலேயாம் மரித்திருப்பான், ஆனால் ஒரு கழுதையின் செயலால் அவன் கொல்லப்படவில்லை. காலத்துக்கு முன்னே அநேகர் மரித்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் ஆகான், சவுல் (அஞ்சனம் பார்க்கப்போய் [3]வது காரணம்), சிங்கம் கொன்ற கீழ்ப்படியாமல்போன தேவமனுஷன், மோசேயின் கட்டளையால் கல்லெறிந்து கொல்லப்பட்டவர்கள், தற்கொலைசெய்துகொள்பவர்கள் எல்லாரும் காலத்துக்கு முன்னே மரித்தவர்கள்.

இன்னும் சில சந்தர்ப்பங்கள் (கட்டாயப்படுத்தப்பட்டவை):
[9] மாற்கு 7:10 எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
[10] யாத்திராகமம் 21:14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டு போய்க் கொலைசெய்யவேண்டும்.
[11] லேவியராகமம் 20:27 அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
[12] யாத்திராகமம் 22:19 மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
[13] லேவியராகமம் 24:16 கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
[14] எண்ணாகமம் 35:16 ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

இவைகளைச் செய்தவர்கள் காலத்துக்கு முன்னே நீக்கப்படவேண்டும் என்று புரிகின்றது. இதைத்தானே அரசாங்கம் (சட்டம்) செய்தது, செய்கின்றது? செய்யவேண்டும்.

இன்னொரு எடுத்துக்காட்டு:
வெண்டைக்காயை பிஞ்சிலேயே பறிப்பார்கள். பழங்களை கனிந்தவுடன் பறிப்பார்கள். எனவே தோட்டக்காரருக்கு பறிக்க அந்த உரிமையுண்டு. அப்படியே நம்முடைய தோட்டக்காரராகிய இயேசுவும் சில சமயங்களில் சீக்கிரம் எடுப்பார், ஏனெனில் அதற்குமேல் இருந்தால் அது கெட்டுவிடும்.


ஆம்! கர்த்தர் குறித்த தேதியில் இறந்துவிடுவோம். நாம் எப்படி ஜீவிக்கின்றோம் என்னும் ஒரு சமன்பாடும் (equation) இதை குறுகச்செய்துவிடுகின்றது, இந்தச் சமன்பாட்டில் எத்தனை அளவுருக்கள்! (parameters in this equation).



 நன்றி:tamilbibleqanda

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.