Saturday, 11 January 2014

0 சிம்சோன் கற்றுத் தரும் பாடங்கள்!

சிம்சோனின் பிறப்பு அற்புதமான பிறப்பு.

சிம்சோன் என்றால் sunshine (சூரிய பிரகாசம்) என்று அர்த்தம். ஆனால் அவன் வாழ்க்கை அப்படியில்லாமல் அமாவாசை ஆனது. ஏன்?


அவனிடத்தில் 1) decision 2) dedication 3) disciplined life and 4) destiny இல்லை.

இந்த செய்தி decisions பற்றியது.

என்ன தீர்மானங்கள்(decisions) அவனிடம் இல்லை? (அல்லது நம்மிடம் இருக்க வேண்டும்)

1. கர்ததரின் முகத்தையே தேடுவேன் - என்ற தீர்மானம் இல்லை.

அவர் முகத்தை தேடி எப்பொழுதும் ஜெபம் செய்ய வேண்டும். சங் 27:8


2. வெறுக்க வேண்டியதை வெறுத்து , நேசிக்க வேண்டியதை நேசிப்பேன்

நியா 14:1,2,3 கண்ணுக்கு பிரியமாயிருந்த பெலிஸ்திய பெண்ணை நேசித்தான்.
நியா 16;1 காசா வேசியிடம் சென்றான்.
நியா 16;4 தெலிலாள் என்னும் ஸ்திரீயை நேசித்தான்


3. தேவ சித்தம் மட்டுமே செய்வேன்

நியா 16;4 - பெலிஸ்திய பெண்ணை திருமணம் செய்வது தேவ சித்தம் தானா என்று கேட்க வில்லை.

ஒரு வாலிபன் திருமணத்திற்காக இப்படியாக ஜெபித்தானாம்.

ஆண்டவரே உம் சித்தப்படியே ஒரு பெண்ணைத் தாரும். அது எதிர் வீட்டு எலிசபெத்தாக இருக்கட்டும்

1 தெச 4:3 நாம் பரிசுத்தமாயிருப்பது தேவ சித்தம்.



4. என்னை தீட்டுப் படுத்த மாட்டேன்

தான் எடுத்துக் கொண்ட நசரேய விரதத்தை தீட்டுப் படுத்தினான்
எண் 6 1-8 வரை சொல்லப்பட்ட வசனத்தின் படி, நசரேய விரதம் எடுத்துக் கொண்டவர்கள், திராட்சை ரசத்தாலும், பிணத்தாலும் தீட்டுப் படக் கூடாது
ஆனால் நியா 14:8,9 இன் படி சிங்கத்தின் பிணத்தாலும், அதிலுள்ள தேனினாலும்(திராட்சை தோட்ட தேன்) தன்னை தீட்டுப் படுத்தினான்.

தானி 1:8 தானியேல் தீட்டுப் பட மாட்டேன் என்று தீர்மானம் செய்தான்.



5. நாவை கட்டுப் படுத்துவேன்.


நியா 16;6, 9 - சிம்சோன் பெற்றோரிடம் வாயை மூடிக் கொள்கிறான்.

பிற பெண்களிடம் வாயைத் டினோசர் போல் திறக்கிறான்!

நியா 14:16 சிம்சோனின் மனைவி 7 நாள் அழுதாள். அவன் ரகசியத்தை சொல்லி விட்டான்.

சொல்லக் கூடாதது - பெண்ணிடம் ரகசியம்- திருவிளையாடல் வசனம்!

நியா 16;15,16 - தெலிலாள் அலட்டிக் கொண்டே இருந்தாள். அவளிடமும் ரகசியத்தை சொன்னான்.

நாக்கு - நெருப்பு - தீப்பெட்டி- தீப்பந்தம் போன்றது. பார்த்து உபயோகிக்க வேண்டும்.

விடம் சொன்னது: நம்ம ஜான்சன் பிரதர் படிக்கட்டில் தடுமாறி விழுந்து விட்டார்
யிடம் சொன்னது ; ஜான்சன் பிரதர் விழுந்து போனார்
யிடம் சொன்னது: ஜான்சன் பிரதர் பாவத்தில் விழுந்து போனார்
விடம் சொன்னது: ஜான்சன் பிரதர் பாவத்தில் விழுந்ததால் கர்த்தர் அவரை அடித்தார்.

இப்படியெல்லாம் நாக்கு இஷ்டத்திற்கு பேசும்.



6.ஆவியானவரை துக்கப்படுத்த மாட்டேன்

நியா 16:20 கர்த்தர் அவனை விட்டு விலகினார்.



7. என்னைக் குறித்த தேவ நோக்கத்திற்காக வாழ்வேன்.

நியா 13:5 பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரவேலை ரட்சிப்பதே அவனைக் குறித்த தேவ நோக்கம். ஆனால் தற்கொலையில் அவன் வாழ்வு முடிந்தது.



நல்ல தீர்மானங்களை எடுப்போம். அதன் படி வாழ்வோம். அப்பொழுது நீதியின் சூரியனாம் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிப்போம். நம் வாழ்க்கை அதிகம் அதிகம் பிரகாசிக்கும் சூரியன் போல் இருக்கும்.

Read more:

-yauwanajanam

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.