யாத்
14:14 கர்த்தர்
உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
உபா 20:4 உங்களுக்காக
உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப்
போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர்
என்று சொல்லவேண்டும்.
யோசு 23:3 உங்கள்
தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல
ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள்
கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர்
தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.
யோசு
23:10 உங்களில்
ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர்
உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக
யுத்தம்பண்ணுகிறார்.
யாத் 15:3 கர்த்தரே
யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
1சாமு
17:47 கர்த்தர்
பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த
ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம்
கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள்
கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
சங் 144:1 என்
கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும்
படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு
ஸ்தோத்திரம்.
சங் 18:39 யுத்தத்திற்கு
நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி,
என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
சங்
27:3 எனக்கு
விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என்
இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும்,
இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.
நீதி 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
0 comments:
Post a Comment