யோவா
8:36 ஆகையால்
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே
விடுதலையாவீர்கள்.
யோவா
8:32 சத்தியத்தையும்
அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
2கொரி
3:17 கர்த்தரே
ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே
விடுதலையுமுண்டு.
ரோமர்
6:22 இப்பொழுது
நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
தானி
3:17 நாங்கள்
ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத்
தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும்,
ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
லூக்
13:12 இயேசு
அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து:
ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்
என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
எரே39:18 உன்னை
நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை;
நீ என்னை நம்பினபடியினால் உன்
பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று
கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
சங்
34:7 கர்த்தருடைய
தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை
விடுவிக்கிறார்.
சங்
50:15 ஆபத்துக்காலத்தில்
என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்,
நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
கொலோ
1:13 இருளின்
அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது
அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
0 comments:
Post a Comment