Friday 10 January 2014

0 தவறான வேத உபதேசங்கள் எப்படி உருவாகின்றன??

தவறான வேத உபதேசங்கள் எப்படி உருவாகின்றன

1. வேத வசனங்களை தவறாக புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

2. தங்கள் சுயகருத்துக்கு ஏற்ப வசனங்களை தேடி அதையே உபதேசமாக்குதல்

3. வேதவசனங்களின் அடிப்படை போதனையை நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக போதித்தல்

4. சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகள் தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்

5. தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்

இக்கடைசி நாட்களில் கிறிஸ்தவ ஜனங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேணடிய கால கட்டத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னதுபோல, அநேகம் கள்ளபோதகர்கள் இப்பொழுது தூ் உபதேசம் செய்ய பல இணையதளங்களில் உலாவி வருகின்றனர். எச்சரிக்கையாயிருங்கள். வேதவசனத்தை நன்கு ஆராய்ந்து பாருங்கள். ஒழுங்காக, தவறாமல் நீங்கள் செல்லும் நல்ல ேவாலயத்திற்கு (பெந்தேகொஸ்தே ஆலயமாக இருந்தால் இன்னும் நல்லது) சென்று, நல்ல போதகரிடம் உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அறியுங்கள். வஞ்சிக்கப்படாதிருங்கள். இணைய தளங்களில் வரும் கிறிஸ்துவுக்கு விரோதமாக வரும் எந்த வித உபதேசத்தையும் உடனே நம்பி விடாதிருங்கள். ஈகரையில் இருக்கும் நமது கிறிஸ்தவ நண்பர்கள் தூ் உபதேசங்கள் வரும்போது கண்டும் காணாமல் ஒதுங்கி விடாதீர்கள். கூடுமானவரை விளக்கம் தெரிந்தவர்கள் பதிலளியுங்கள். தேவன் நம்மை இந்த கடைசி காலங்களில் வழி தப்பி நடப்போரை, அறியாமல் வஞ்சக உபதேசங்களில் சிக்கி ஏமாந்து போவோரை காப்பாற்ற இந்த ஈகரையில் நல்ல நண்பர்களாக வைத்திருக்கலாம். யார் கண்டது. நண்பர்களை காப்பாற்றி கரை சோ்ப்பது நமது கடமையல்லவா? காயீனைப்போல நான் என் சகோதரனுக்கு காவலாளியோ? என கேளாமல், சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை அறிவியுங்கள். இதோ இயேசு சீக்கிரமாய் மீண்டும் வரப் போகிறார். மாரநாதா. அல்லேலூயா!ஆமென்!. ஆண்டவரே சீக்கிரமாய் வாரும்! அல்லேலூயா!

சார்லஸ் mc

கல்வியாளர்

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.