சங்
18:32  என்னைப்
பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்
தேவனே.
எசா
40:29  சோர்ந்துபோகிறவனுக்கு
அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச்
சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். 
சங்
18:39  யுத்தத்திற்கு
நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி,
என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
சங்
28:7  கர்த்தர்
என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்;
என் இருதயம் அவரை நம்பியிருந்தது;
நான் சகாயம் பெற்றேன்; ஆகையால்
என் இருதயம் களிகூருகிறது; என்
பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
சங்
29:11  கர்த்தர்
தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம்
அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்
46:1  தேவன்
நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
சங்
59:17  என்
பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு
உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
எசா
40:31  கர்த்தருக்குக்
காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள்
ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஆப
3:19  ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
எபி 11:34  அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய
சேனைகளை முறியடித்தார்கள்.









0 comments:
Post a Comment