Sunday, 19 October 2014
Monday, 6 October 2014
2 வஞ்சிக்கப்படாதிருங்கள்..... கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம்
Monday, October 06, 2014
be careful, chrislam, கடைசிகாலம், கிறிஸ்லாம், வஞ்சிக்கப்படாதிருங்கள், ஜாக்கிரதை
2 comments
வஞ்சிக்கப்படாதிருங்கள்..
கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம்
Christianity + Islam + Judaism = Chrislam
கடைசிக் காலத்தில் சாத்தான் தன்னுடைய புதுயுக மதத்தை ஸ்தாபிக்கவும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு விரோதமாக இன்னொரு சுவிசேஷத்தையும், வேறே இயேசுவையும், வேறே ஆவியையும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இப்படியான கள்ள மதத்திற்கு தமிழ் கிறிஸ்தவ உலகில் பிரதிநிதியாக இருந்து செயல்படப்போகும் கள்ளத்தீர்க்கதரிசியும், கள்ளப்போதகனும், கள்ள உபதேசியும் யார் என்பது தான் உங்கள் முன்னால் வரும் கேள்வி...
சமாதானத்தின் போர்வையில் , உலக மதங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை கடைசிக்காலத்தில்
பிசாசு உண்டாக்குவான் என்பது நாம் அறிந்ததே. யூதர்களும், கிறிஸ்தவர்களும் , இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று போதிக்கும் வஞ்சிக்கும் கிறிஸ்தவ ஊழியக்காரர்களில் முக்கியமானவர் ரிக் வாரன்(Rick Warren).
Purpose Driven Life என்ற பாப்புலரான புத்தகத்தை எழுதியவர். இவர் அமெரிக்காவின் கலிஃஃபோர்னியாவின் சேடில்பேக் சபை என்ற சபையின் நிறுவனர் மற்றும் போதகர். P.E.A.C.E என்ற திட்டம் தீட்டி உலகத்தை அமைதிப் பாதையில்(?) கொண்டு செல்வதே இவர் விருப்பம். யார் யாரெல்லாம் இணைந்து செயல்படுவோம் என்று சொல்கிறார்களோ, அவ்ர்களுடன் சேர்ந்து கொள்வார்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பதவியேற்ற விழாவில் குரானில் சொல்லப்பட்ட இயேசுவின் நாமமான [b]ஈசா[/b] வின் பெயரை சொல்லி ஜெபித்தவர். குரானின் இயேசுவும், நம் வேதத்தின் நாயகரான இயேசு கிறிஸ்துவும் முற்றிலும் வேறானவர்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 21 நாள் தானியேல் உணவு முறை என்ற திட்டத்தை சபை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, புதுயுக (New Age) கொள்கையாளர்களை அழைத்து, சில உணவு பழக்க வ்ழக்கங்களை சபையாருக்குக் கற்றுக் கொடுத்தவர். கிறிஸ்துவுக்கும், பேலியாளுக்கும் சம்பந்தமில்லை என்ற வ்சனத்தை மறந்து அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள தயங்காதவர்.கடைசிக் காலத்தில் கள்ள கிறிஸ்துக்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி அனேகரை வஞ்சிப்பார்கள் என்று வேதம் சொல்வது நம் கண் முன் நடந்து கொண்டிருக்கிறதைத்தான் பார்க்கிறோம். இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரான டோனி பிளேரும் (Tony Blair) உலக மதங்களை இணைத்து உலக சமாதானம் உண்டாக பாடுபடும் அந்தி கிறிஸ்துவின் ஆவியை உடையவர். இவர் Anglican (புராடஸ்டண்ட்) மதத்திலிருந்து, கத்தோலிக்கராக மதம் மாறிக் கொண்டவர்.(மரியாளை, தேவ தூதர்களை வணங்கும், போப்பை கனப்படுத்தும் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்களே அல்ல). ரிக் வாரனும், டோனி பிளேரும் இணைந்து செயல்பட முயற்சிக்கிறார்கள். http://firstjohnfourfive.wordpress.com/2011/03/10/rick-warren-tony-blair-the-new-world-order/ இப்படிப்பட்ட வஞ்சகத்தில் நாம் சிக்கிக் கொள்ளாதபடி, ஆண்டவர் நம்மை, நம் இந்திய நாட்டின் சபைகளைக் காப்பாராக.[/color]
இப்படியான கள்ள மதத்திற்கு தமிழ் கிறிஸ்தவ உலகில் பிரதிநிதியாக இருந்து செயல்படப்போகும் கள்ளத்தீர்க்கதரிசியும், கள்ளப்போதகனும், கள்ள உபதேசியும் யார் என்பது தான் உங்கள் முன்னால் வரும் கேள்வி...
Thanks : Paul Prabhakar, Banglore. https://www.facebook.com/Paul.Prabha