அப்போஸ்தலர் தோமாவின் போதனையை மையமாக வைத்து எழுதப்பட்டவற்றின் இது ஐந்தாம் பகுதியாகும்.
இயேசு உலகின் பாவங்களுக்காக மரணித்தார். இறைவன் உலகின் மீது அன்புகொண்டு ஒரே மகனை இந்த உலகிற்காக கையளித்தார். அதுவும் உலகில் கொடூர மரண வேதனையான சிலுவையிலேயே மரணித்தார்.
இந்த பகுதியில் இறைவன் மனிதனாக பிறந்தார் என்பதை குறித்து பார்க்க போகிறோம்.
இந்த மண்ணிலே இறைவன் மனிதனாக பிறந்தார் என்பது இறைவேதத்தில் (பைபிள்) தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இறைவன் மிக புனிதமானவர் என்பதனால் கன்னியிடம் பிறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இறைவன் புனிதமானவர் என்று சொல்லிலே கூறுகிறோம் ஆனால் அதை உணரும் பொழுது மட்டுமே அதன் புனிதத்தின் உண்மை நிலையை அறிய இயலும்.
இந்த பகுதியில் "பைபிளில்" சொல்லப்பட்டுள்ளது போல் இறைவன் ஒருவரே அவர் ஆவியானவராக இருக்கிறார் என்றுதான் அப்போஸ்தலர் தோமாவும் போதித்திருப்பார்.
இயேசுவின் 12 அப்போஸ்தளர்களில் (சீடர்கள்) ஒருவர்தான் தோமா என்பவர். தோமாவை பற்றிய "பைபிளில்" இருந்து ஆதார வசனங்களை கீழே பார்க்கவும்.