Sunday 29 June 2014

0 அப்போஸ்தலர் தோமா - பகுதி 3

இந்த பகுதியில் இறைவன் மனிதனாக பிறந்தார் என்பதை குறித்து பார்க்க போகிறோம்.

இந்த மண்ணிலே இறைவன் மனிதனாக பிறந்தார் என்பது இறைவேதத்தில் (பைபிள்) தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இறைவன் மிக புனிதமானவர் என்பதனால் கன்னியிடம் பிறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இறைவன் புனிதமானவர் என்று சொல்லிலே கூறுகிறோம் ஆனால் அதை உணரும் பொழுது மட்டுமே அதன் புனிதத்தின் உண்மை நிலையை அறிய இயலும்.

இறைவன் மண்ணிலே மனிதனாக பிறந்ததைத்தான் அறியாமல் சிலர் பல அவதாரங்களை குறிப்பிடுகின்றனர், ஆனால் உண்மையில் அவதாரம் என்பது இறைவன் ஒருமுறை மட்டுமே மண்ணிலே அவதரிப்பதாகும்.

இன்னும் பலர் சொல்லலாம் இயேசுவுக்கு முன் பலர் கன்னியிடம் பிறந்துள்ளனர் என்று, அதை குறித்து அடுத்து வரும் பதிப்புகளில் பார்ப்போம்.

இயேசுவின் பிறந்த நாள் யாருக்கும் தெரியாது என்றும் அவர் டிசம்பர் 25ல் பிறந்தார் என்பதும் தவறு என்றும் சொல்கின்றனர் இதை குறித்தும் அடுத்த பதிப்பில் பார்ப்போம்.

இயேசுவை குறித்து பல இறைவாக்கினர்கள் முன்னுரைத்துள்ளனர் அவை அனைத்தும் இயேசுவின் மூலம் நிறைவடைந்துள்ளது. அவற்றை இறைநூலில் தெளிவாக நாம் அறிந்து கொள்ளலாம்.

நான் இங்கு சில வசனங்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

முன்னறிவிப்பு மற்றும் நிறைவேறல்:

எசாயா 7
14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.



மத்தேயு 1
22-23 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்.

ஓசேயா 11
1 இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்.



மத்தேயு 2
13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் என்றார்.

14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

மலாக்கி 3
1 "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.



லூக்கா 2
25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.

26 ";ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது...

எரேமியா 31
15 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது; ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்; ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்; ஏனெனில், அவருடைய குழந்தைகள் அவரோடு இல்லை.



மத்தேயு 2
16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

மேலே குறிப்பிட பற்றவற்றில் மிக முக்கியமானது இயேசு எருசலேம் ஆழத்திற்குள் நுழைதல். இது என்ன என்று நினைக்காதீர்கள்..!! இயேசுவிற்கு பின் சாலமோனின் ஆலயம் கி.பி.70ல் இடித்து அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த ஆலயம் கட்டப்படவும் இல்லை. அந்த ஆலயம் எந்த பக்கம் இருந்தது என்றே குழம்பி போய் உள்ளனர். அதில் உள்ள சிறு சுற்று சுவர் மட்டுமே தனித்து நிற்கிறது. அதில் யூதர்கள் முட்டி மோதி மீட்பரை எதிர்நோக்கி இருக்கின்றனர். காரணம் அவர்களின் அறியாமையே. அவர்களும் பின்பு மீட்க்கபடுவார்கள் என்று இறைநூல் சொல்கிறது.

இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் தோமா அவர்களின் போதனையின் விளைவை பற்றி பார்ப்போம்.

Rig Veda - X:121:1
हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेकासीत 
 दाधार पर्थिवीं दयामुतेमां कस्मै देवायहविषा विधेम ||
In the beginning, God and his supreme spirit alone existed. From the supreme Spirit of the God proceeded Hiranya Garbha, alias Prajapathy, the first born of the God in the form of light. As soon as born, he became the savior of all the worlds.

மற்றொரு மொழிபெயர்ப்பையும் பதிக்கிறேன்..

1. IN the beginning rose Hiranyagarbha, born Only Lord of all created beings. He fixed and holdeth up this earth and heaven. What God shall we adore with our oblation?
-Translated by Ralph T.H. Griffith
=======================
கொலோசியர் 1
15 அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு.

யோவான் 3
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

உலகத்தை பாவத்தில் இருந்து மீட்கும் பொருட்டு இறைவன் மண்ணிலே மனிதனாக பிறந்தார். என்பது தெளிவாகிறது. அதாவது மண்ணிலே இறைவன் மனிதனாக அவதாரம் எடுக்கிறார். அதுவும் ஒரு முறை மட்டுமே. பல முறையும் அல்ல பல அவதாரங்களும் அல்ல.
=======================
Rig Veda - X:90:5
तस्माद विराळ अजायत विराजो अधि पूरुषः 
 जातोत्यरिच्यत पश्चाद भूमिमथो पुरः || 
From him Virāj was born; again Puruṣa from Virāj was born. As soon as he was born he spread eastward and westward o’er the earth
-Translated by Ralph T.H. Griffith 

tasmAt = from that
virAt = the universe
ajAyata = was born
virAjo = From universe
adhipurusha:= the first man
sa = being
jAta = born
ati aricyata = grew very large
pascAt = in front
bhUmim = of the earth
ata: = and

pura: = behind or cities.
======================
இயேசு இந்த மண்ணிலே மனிதனாக பிறந்து இந்த பூமியிலே இறையாட்சியை நிலை நிறுத்தி அவரை நாடியவர்களை தனது ஆட்சிக்குள் ஈர்த்துகொண்டார்.

இறையாட்சியை பற்றி படிக்க சில வசனங்கள் ..

Matthew 6:33 ; Matthew 12:28 ; Matthew 19:24 ; Matthew 21:31 ; Matthew 21:43 ; Mark 1:14 ; Mark 1:15 ; Mark 4:11 ; Mark 9:47 ; Luke 4:43 ; Luke 8:1 ; Luke 9:11
======================
Rig Veda - X:90:2
पुरुष एवेदं सर्वं यद भूतं यच्च भव्यम 
उताम्र्तत्वस्येशानो यदन्नेनातिरोहति ||  
This man, the first born of the God is all that was, all that is and all that has to be. And he comes to this world to give recompense to everybody as per his deeds.

மற்றொரு மொழிபெயர்ப்பையும் பதிக்கிறேன்..

2 This Puruṣa is all that yet hath been and all that is to be;
The Lord of Immortality which waxes greater still by food.

purusha = the Person
eva = alone
idam sarvam = is all of this
yad bhUtam = that which was (Past)
yac ca bhavyam = and that which is to be.(Future)
uta = Moreover
amRtatvasya = of immortality too
IshAna = Isa (Jesus), he alone Lord.
yad = That which
annena = as food

atirohati = shows itself, that too is
==========================
உரோமையர் 2
6 ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்.

கர்மா என்பது அவரவர் செயல்களுக்கு ஏற்ப மறு பிறவியில் கழுதையாகவோ அல்லது குதிரையாகவோ பிறப்பது அல்ல, மாறாக அவரவர் செயல்களுக்கு ஏற்ப கைம்மாறு(கூலி) கிடைக்கும். கர்மா என்றால் என்ன என்று பலர் பலவிதமாக விளக்கம் கொடுக்கலாம் ஆனால் நான் எழுத்து பூர்வமாக உள்ள நூல்களில் இருந்தே கொடுக்கிறேன்.
========================================
Rig Veda - X:90:7
तं यज्ञं बर्हिषि परौक्षन पुरुषं जातमग्रतः 
तेन देवा अयजन्त साध्या रषयश्च ये ||  
They balmed as victim on the grass Puruṣa born in earliest time.With him the Deities and all Sādhyas and Ṛṣis sacrificed.
-Translated by Ralph T.H. Griffith 

asya = For this sacrifice
sapta = seven were
paridaya: = the sheathing logs, the fences.
tri:sapta = Thrice-seven, that is twenty one
samida: = the samit-wood firebrands
krtA: = made,
yad yajnam = for the sacrifice for which
devA: = the gods
tanvAnA: = as performers of the sacrifice
abadhnan = bound
purusham = the purusha

paSum = as the beast of sacrifice, Cow.
===========================
யோவான் 1
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது;

2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.

3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.

4 அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.

5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.

7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.

8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது.ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.

11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்
===========================
Rig Veda - X:90:7
तं यज्ञं बर्हिषि परौक्षन पुरुषं जातमग्रतः 
तेन देवा अयजन्त साध्या रषयश्च ये ||  
This man, the first born of the God, was tied to a wooden sacrificial post and the gods and the Kings along the seers performed the sacrifice.
==============================================
மேலே கொடுக்கப்பட்டுள்ள  யோவான் 1 படிக்கவும். 

இயேசு தொடக்கத்தில் இருந்தார் காரணம் அவர் தான்  இறைவன்.
==============================================
Brihad Aranyaka Upanishad
Chapter – 3 :Brahmana 9:28:7
'Once born, he is not born (again); for who should create him again?' 'Brahman, who is knowledge and bliss, he is the principle, both to him who gives gifts, and also to him who stands firm, and knows.'
-Translated by Max Muller
=============================
இந்த வசனம் மிக முக்கியமானதாக கருதுகிறேன். இவற்றை இரண்டு விதமாக பிரித்து பார்ப்போம்.

1. கர்மாவினால் உண்டாகும் மறு பிறவி.
2. இறைவன் மனிதனாக பிறக்கும் அவதாரம்.


1. கர்மாவினால் உண்டாகும் மறு பிறவி : கர்மாவினால் உண்டாகும் மறுபிறவி கிடையாது என்று இந்த வசனத்தின் மூலம் தெளிவாக சொல்லலாம். ஒரு மனிதன் ஒரு முறை மட்டுமே பிறக்கிறான், அவன் பிறந்த பிறகு அவன் செய்யும் பாவத்திற்கு ஏற்ப இறுதி தீர்ப்பில் கைம்மாறு கிடைக்கும். பாவத்திற்கு மட்டும் அல்ல ஒருவன் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கைம்மாறு கிடைக்கிறது. 

ஒருவனின் செயல்களுக்கு ஏற்ப உண்டாகும் கர்மாவால் எவரும் மறு பிறவியில் எந்த ஒரு விலங்காகவும் பறவையாகவும் பிறக்க போவதில்லை. இதை சிலர் மறுக்கலாம். இதை மறுத்தால் 2வது உள்ளதை மறுக்க இயலாது.

2. இறைவன் மனிதனாக பிறக்கும் அவதாரம் : இறைவன் மண்ணிலே அவதரிப்பதை "அவதாரம்" என்று குறிப்பிடுகிறோம். இறைவன் எத்தனை முறை மண்ணிலே மனிதனாக அவதரிக்கிறார் அல்லது அவதரித்தார்...?? இதில் கொடுக்க பட்டுள்ள வசனத்தின் படி ஒரு முறை மட்டுமே பிறப்பார் என்று மறுபடி பிறக்க மாட்டார் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. பத்து அவதாரங்கள் 15 அவதாரங்கள் என்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை..!!

இதை மறுத்தால் முதலில் சொன்னதை ஏற்க்க வேண்டும்.

என்னை பொறுத்த வரையில் இந்த இரண்டுக்குமே இந்த வசனம் தெளிவாக பொருந்துகிறது.

இறைவன் மண்ணிலே மனிதனாக பிறப்பார் என்று தெளிவாகிறது அதே சமயம் அவர் ஒரு முறை மட்டுமே பிறப்பார் என்பதும் தெளிவாகிறது. இறைவன் மண்ணிலே மனிதனாக பிறப்பார் என்ற எதிர்பார்ப்பில்தான் அவதாரம் என்ற சொல்லே உருவானது என்றும் சொல்லலாம்.

இயேசுவே உண்மையான இறைவன் உலகை பாவத்தில் இருந்து மீட்க ஒருமுறை மட்டும் பிறந்தவர்.

பிறரோடு பகிர்ந்து நலம் பெறுங்கள்.




thanks - miraclefaith

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.