Sunday 29 June 2014

0 அப்போஸ்தலர் தோமா - பகுதி 1


இயேசுவின் 12 அப்போஸ்தளர்களில் (சீடர்கள்) ஒருவர்தான் தோமா என்பவர். தோமாவை பற்றிய "பைபிளில்" இருந்து ஆதார வசனங்களை கீழே பார்க்கவும்.

மத்தேயு 10 : 3 பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோப்பு, ததேயு,

மாற்கு 3 : 18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா,அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,

லூக்காஸ் 6 : 15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,

யோவான் 11 : 16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.

யோவான் 14 : 5 தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார்.

யோவான் 20 : 24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.

யோவான் 20 : 25 மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார்.

யோவான் 20 : 26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.

யோவான் 20 : 27 பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார்.

யோவான் 20 : 28 தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார்.

யோவான் 21 : 2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,

திருத்தூதர் பணிகள் 1 : 13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு,தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள்.



முதல் பகுதியில் அப்போஸ்தலர் தோமா இந்தியாவிற்கு வந்த வரலாறு, அப்போஸ்தலர் தோமா வருவதற்கு முன் இந்தியாவில் எப்படி இருந்தது மற்றும் எப்படி மாறியது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

இயேசுவின் வின்னேற்றத்திர்ற்கு பிறகு அவரின் சீடர்கள் அனைவரும் பல நகரங்களுக்கும் பல நாடுகளுக்கும் இயேசுவின் நற்ச்செய்தியை அறிவிக்க பிரிந்து சென்றனர்.

அப்போஸ்தலர் தோமா இந்தியாவிற்கு வந்தார்.



கிறிஸ்தவத்தை பொருத்தவரையில் யூத கோட்பாடுகளின் தொடர்ச்சியே கிறிஸ்தவ கோட்பாடுகள். ஆனால் வேதகாலத்தின் (ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வ) தொடர்ச்சியாக இப்பொழுதுள்ள ஹிந்து கோட்பாடுகள் அல்ல. வேதகாலத்திர்க்கும் இப்போதுள்ள ஹிந்து கோட்பாடுகளுக்கும் பல மாற்றங்கள் உள்ளன. இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தது என்று பிறகு பார்ப்போம்.

வேதகால கடவுள்கள் இப்போதில்லை, ஆனால் இப்பொழுது புதிதாக பிறந்த கடவுள்களை வேதகால கடவுள்களோடு தொடர்பு படுத்தி பார்க்கின்றனர். அதில் உண்மை அறவே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

வேதங்களும் புராணங்களும் எழுத ஆரம்பமான காலத்தில் தான் அப்போஸ்தலர் தோமா இந்தியாவிற்கு வந்துள்ளார் என்பது அந்த நூல்களிலேயே பிரதிபலிக்கிறது.



வேதகாலத்தில் இயற்க்கை வழிபாடு இருந்தது இப்பொழுதோ பல கடவுள்கள் புதிய பெயர்களோடு வந்துள்ளனர். பழைய இயற்க்கை கடவுள்கள் மாயமாகியுள்ளனர்.

அப்போஸ்தலர் தோமாவினால் ஏற்ப்பட்ட தாக்கங்களை வருகின்ற பகுதிகளில் காணலாம்.



இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் தோமா முதலில் இந்தியாவின் வடபகுதியில் ஆண்ட அரசனை சந்தித்திருப்பதாக கி.பி.2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "தோமாவின் பணிகள்" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கி.பி.20 லிருந்து கி.பி 50 வரையிலேயே இந்த ராஜ்ஜியம் இருந்தது. இது இந்தோ-பார்த்தியன் ராஜ்ஜியம் ஆகும். இதன் அரசனாக "கோண்டோபோரோஸ்" இருந்துள்ளார். இவரின் தலைநகரமாக "தக்ஷில்லா" இருந்துள்ளது. இந்த நகரம் இப்பொழுது பாக்கிஸ்தானில் உள்ளது.



"குஷன்" ராஜ்ஜியத்தால் கி.பி.50ல் முடிவுக்கு வந்தது. "கோண்டோபோரோஸ்" என்ற அரசன் தோமாவால் கிறிஸ்தவத்திற்கு மாற்றபட்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. தோமாவின் பணிகள் என்ற நூலில் அதிகாரம் 17ல் இந்த நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை பல காலகட்டத்திற்கு இந்த நூலை யாரும் ஏற்கவில்லை மற்றும் "கோண்டோபோரோஸ்" என்ற ராஜ்ஜியம் இருந்ததாகவும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் 1872ம் ஆண்டு காபுல் பற்றும் பஞ்சாப் (பாக்கிஸ்தான்) பகுதிகளில் "கோண்டோபோரோஸ்" இருந்ததற்கான ஆதாரமாக சில கல்வெட்டுகளும் நாணயங்களும் கிடைத்தன. அதற்க்கு பின்னர் தான் இந்த நூலில் உள்ள "கோண்டோபோரோஸ்" உண்மை என்பது தெரிந்து.



இப்பொழுது வரலாற்று ஆசிரியர்கள் இரண்டு "கோண்டோபோரோஸ்" அரசர்களில் யார் என்பது தெளிவு படவில்லை காரணம் அந்த காலகட்டத்தில் பல அரசர்கள் "கோண்டோபோரோஸ்" என்ற பெயருடன் இருந்துள்ளனர் அவர்களில்  c.AD 20 – 50 Gondophares Parthian vassal who declared independence மற்றும் AD85 Sases / Gondophares-Sases என்பவர்கள் ஆவார்கள்.



கி.பி 40 களில் அப்போஸ்தலர் தோமா , "கோண்டோபோரோஸ்"சை சந்தித்திருக்கக்கூடும். பின்னர் பின்னர் கேரளாவிற்கு கி.பி.52 ல் வந்திருக்கிறார்.



கி.பி.52 ல் கேரள மாநிலத்தில் உள்ள "மலபார்" கடற்கரையில் உள்ள "கிரங்கனூர்" அல்லது "கொடுங்கல்லூர்" என்ற இடத்தில் வந்திறங்கியிருக்கிறார் . அப்போஸ்தலர் தோமாவின் அற்ப்புத போதனையால் பலர் கிறிஸ்தவத்திற்கு மாறியுள்ளனர்.
அவருக்குப்பின் பல ஆலயங்களும் கட்டப்பட்டுள்ளது.

அப்போஸ்தலர் தோமா இந்தியாவின் பல இடங்களுக்கும் மற்றும் சீனாவின் சில இடங்களுக்கும் சென்றுள்ளார். கி.பி.59 ல் சென்னையில் உள்ள மைலாப்பூருக்கு சென்றுள்ளார்.

பின்னர் கி.பி 72ல் இரத்த சாட்சியாக இறந்துள்ளார்.

அப்போஸ்தலர் தோமாவின் மரித்த நினைவு நாளாக இந்திய அரசாங்கத்தால் 1973 ஜூலை 3ல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.



அப்போஸ்தலர் தோமாவின் நினைவாக 1964ல் இந்திய அரசாங்கத்தால் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.



தொமாவாவிர்க்கு பின்னர் பல ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன.

1. கிரங்கனூர்  (கொடுங்கலூர்).



2. கிலோன் (கொல்லம்).



3. நிரணம் (நில்கிண்டா)



4. நிலக்கல் (காயல்)



5. கொக்கமங்கலம் (பள்ளிபுரம்)



6. பரூர் (கொட்டகாவு)



7. பாலூர் (பழையூர்)




அப்போஸ்தலர் தோமாவால் ஏற்ப்பட்ட தாக்கத்தை வருகின்ற அடுத்த பகுதிகளில் ஆதாரத்தோடு நாம் அறிந்துகொள்வோம்.


தோமாவின் சிறப்பான போதனையாலும் இறைவனின் துணையாலும் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஒளியையும் சந்த்தியத்தையும் கண்டடைந்தனர்.

எவ்வளவு மக்கள் கிறிஸ்த்துவை ஏற்றுகொண்டார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் சுவாமி. விவேகானந்தர் சொல்கிறார்...

The purest Christians in the world were established in India by the Apostle Thomas about twenty-five years after the death of Jesus. This was while the Anglo-Saxons were still savages, painting their bodies and living in caves. The Christians in India once numbered about three millions, but now there are about one million.

(Inspired Talks - Volume 7
THURSDAY, July 11, 1895.
RECORDED BY MISS S. E. WALDO, A DISCIPLE)




Thanks - miraclefaith.com

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.