Sunday 29 June 2014

0 அப்போஸ்தலர் தோமா - பகுதி 2



இந்த பகுதியில் "பைபிளில்" சொல்லப்பட்டுள்ளது போல் இறைவன் ஒருவரே அவர் ஆவியானவராக இருக்கிறார் என்றுதான் அப்போஸ்தலர் தோமாவும் போதித்திருப்பார்.

இறைவன் ஒருவரே மற்றும் அவர் ஆவியானவராக இருக்கிறார் என்ற ஆதார வசனங்களை பார்ப்போம்.

இறைவன் ஒருவரே அவர் மண்ணிலே மனிதனாக இயேசுவாக பிறந்தார் என்றும் நம்மமுடைய பாவத்திற்காக மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது அடிப்படை நற்செய்தியாகும். இதைத்தான் அப்போஸ்த்தலர் தோமாவும் போதித்திருக்கிறார்.

விடுதலை பயணம் 20
2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;...........

3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே  நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.



யாக்கோபு 2
19 கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன.

யோவான் 1
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது;

எசாயா 44
6 இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும், படைகளின் ஆண்டவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; தொடக்கமும் நானே; முடிவும் நானே; என்னையன்றி வேறு கடவுள் இல்லை.

யோவான் 10
30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.




யோவான் 4
24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார்.

இப்படியாக பல வசனங்களை அடிப்படையாக தொகுத்து கொண்டே செல்லலாம். மேலும் இதுபோன்ற வசனங்களை நீங்கள் அறியவேண்டும் என்றால் கீழே உள்ள வசனங்களை படிக்கவும்.

யோவான் 1:14 ; மாற்கு 12:29 ; திருவெளிப்பாடு 1:8 ; யோவான் 14:10 ;
எபேசியர் 4 :5 ; மத்தேயு 3:16-17 ; செக்கரியா 14:9 ; ஓசியா 13:4 ; எசாயா 42:8 ; இணைச்சட்டம் 6:4.

இன்னும் பல வசனங்கள் இருப்பினும், நீங்களும் வேதத்தை (பைபிள்) படித்து அறிந்துகொள்ளுங்கள்.

சரி, இதனால என்ன என்று கேட்காதீர்கள்..!!

தோமாவின் இந்த போதனைதான் கீழே உள்ள பிரதிபலிப்பாக இருக்கலாம் என்று கருதுகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் படித்து பகிருங்கள் மற்றும் அறிந்துகொள்ளுங்கள். இல்லை என்றால் இதை விட்டுவிடுங்கள். நான் பாதிக்கும் எந்த கருத்துக்களையும் பிறர் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நான் விரும்புவதில்லை. உங்களுக்கு சரி என்று தெரிந்தால் ஏற்றுகொள்ளுங்கள், ஏனென்றால் அது உங்கள் விருப்பமும் உங்கள் உரிமையும்கூட. ஆனால் ஆராய்ந்து பார்த்து சிந்தியுங்கள்.

கீழே கொடுக்க உள்ள வசனங்களின் தமிழாக்கம் கிடைக்காத காரணத்தினால், ஆங்கிலத்தில் பதிக்க்றேன். புரிந்துகொள்ளுங்கள்.

Kena Upanishad (Chapter 1): verse 1-8
That one which cannot be defined or explained by speech but because of which speech is being explained (because of which speech is flowing) is Brahman. Understand that alone to be Brahman. All other things that are being defined as “Brahman” and worshipped are not. 

Chhandogya Upanishad Chapter – 8 :Khanda 8:4
Prajapati saw them going and said: "They are both going away without having known and without having realized the Self. And whoever of these, whether gods or demons, follow this doctrine shall perish." Virochana, satisfied in heart, went to the demons and preached this doctrine (Upanishad) to them: "The self (i.e. body) alone is to be worshipped here on earth, the self (i.e. body) alone is to be served. It is only by worshipping the self here and by serving the self that one gains both worlds this and the next."

Rig Veda - X:121:1
हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः 
पतिरेकासीत | स दाधार पर्थिवीं दयामुतेमां कस्मै देवायहविषा विधेम ||

In the beginning, God and his supreme spirit alone existed.From the supreme Spirit of the God proceeded Hiranya Garbha, alias Prajapathy, the first born of the God in the form of light. As soon as born, he became the savior of all the worlds.



Gurugeet - 1:44
He is the one supreme Guru who destroys darkness because he is Light.

Gurugeet - 1:79
He is the one supreme Guru who destroys darkness because he is Light.

Brihad Aranyaka Upanishad Chapter – 4 :Brahmana 4:19
'By the mind alone it is to be perceived, there is in it no diversity. He who perceives therein any diversity, goes from death to death.
-Translated by Max muller

இந்த வசனங்களில் இறைவன் ஒருவராக இருக்கிறார் என்றும் அவர் ஆவியானவராக இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி சொல்லப்பட்டுள்ளது ஒன்று செய்வது ஒன்றுமாக முரண்படுகிறது. இங்கு இரண்டு கேள்விகள் எழுப்பபடுகிறது.

1. சொல்லப்பட்டுள்ளவை கடைபிடிக்கப்படவில்லை என்றால் இந்த வசனங்கள் எப்படி வந்தது..??

2. சொல்லப்பட்டவை சரி என்றால் கடைபிடிப்பது ஏன் தவறாக இருக்கிறது..??

இவற்றில் ஏதோ ஒன்று தவறுதான். அது எனது தவறு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எது தவறோ அதை விட்டுவிடுங்கள். எது சரி என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அவற்றை பின்பற்றுங்கள். கண் தெரியாத குருடனைப்போல் நாம் செல்ல வேண்டான்.

எசாயா 6 
9 அப்பொழுது அவர், "நீ இந்த மக்களை அணுகி, 'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்' என்று சொல்.



10 அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்;படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்" என்றார்.

திருப்பாடல்கள் 115
அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;

6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை.

7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.

அன்பான நண்பர்களே உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.



இயேசு துணை நிர்ப்பாராக .

இதை படிப்போருக்கு இயேசுவின் அன்பும் சமாதானமும் என்றும் இருப்பதாக.

மீண்டும் அடுத்த பகுதியில் சிந்திப்போம்.....





thanks- miraclefaith.com

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.