வேதாகம் -  காலங்கள் & நிகழ்வுகள்
 
 
 
| 
ஆண்டு (கி.மு)  | 
நிகழ்வு -- காலம்  | 
பழைய ஏற்பாட்டு நூல்  | 
| 
கி.மு. 2000 - 1750 (ஏறக்குறைய)  | 
(ஏறக்குறைய) 1900; ஆபிரகாம் கானான் நாட்டுக்கு வருதல். ஈசாக்கு, யாக்கோபு (இஸ்ரயேல்), பன்னிரு குலத்தலைவர்கள். யோசேப்பு எகிப்து மன்னரின் ஆலோசகர் ஆகுதல்.  | 
தொடக்கநூல், அதிகாரங்கள் 12-50  ("யாவே" மரபுகள்) | 
| 
கி.மு.1700 - 1250  (ஏறக்குறைய) | 
யாக்கோபின் வழிமரபினர் எகிப்தில் அடிமைகளாகுதல்  | |
| 
கி.மு. (ஏ) 1250  | 
விடுதலைப் பயண நிகழ்வு; எகிப்திலிருந்து இஸ்ரயேலரை மோசே அழைத்துச் செல்லல்.  
பாலைநிலப் பயணம். மோசே சீனாய் மலையில் திருச்சட்டம் பெறல்.  | 
விடுதலைப் பயணம் நூல்  ("யாவே" மரபுகள்); | 
| 
கி.மு. 1200 - 1020  | 
நீதித்தலைவர்கள் காலம்  | |
| 
கி.மு. 1020 - 922  | 
பொற்காலம்; சவுல் (ஏ) 1020-1000; தாவீது (ஏ)
  1000-962; சாலமோன் (ஏ) 962-922). ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு.  | 
"எலோகிம்" மரபு உருவாதல்  | 
| 
கி.மு. 922 -721  | 
நாடு பிளவுபடல்; வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா பல அரசர்களால் ஆளப்படல்.  | 
2 அரசர்கள், 2 குறிப்பேடு, எரேமியா 39-44; 52. (ஐந்நூலில் "எலோகிம்", "இணைச்சட்டம்" பண்புடைய பகுதிகள்), ஆமோஸ், ஒசேயா, ஏசாயா(1), மீக்கா  | 
| 
கி.மு. 722  | 
வடக்கு அரசில் சமாரியா வீழ்ச்சியடைதல்  நாடு கடத்தப்படும் முன் வாழ்ந்த இறைவாக்கினர்கள் | 
"யாவே" மரபும் "எலோகிம்" மரபும் இணைதல். "இணைச்சட்டம்" மரபு தோன்றுதல்.  செப்பணியா, நாகூம், அபக்கூக்கு, ஏரோமியா | 
| 
கி.மு. 587  | 
பாபிலோனியாவுக்கு யூதர்கள் நாடுகடத்தப்படல்  | 
"குருக்கள்" மரபு உருவாதல் 
திருப்பாடல்கள் 137. (ஐந்நூலில் "குருக்கள்" பண்புடைய பகுதிகள்)  
இணைச்சட்டம், யோசுவா, நீதித் தலைவர்கள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள். 
எசேக்கியேல், எசாயா(2), புலம்பல் | 
| 
கி.மு. 539  | 
பாரசீக மன்னர் சைரசு யூதர்கள் தாய்நாடு திரும்ப அனுமதி அளித்தல்.  | |
| 
கி.மு. 537 | 
எருசலேமில் புதிய கோவிலுக்கு அடித்தளம் இடுதல்  | 
மேலே தரப்பட்ட நான்கு மரபுகளும் இணைதல்.  
எசாயா(3), ஆகாய், செக்கரியா, யோபு, மலாக்கி, ஒபதியா | 
| 
கி.மு. 539 - 333  | 
பாலஸ்தீன நாட்டில் பாரசீக ஆட்சிக் காலம். | |
| 
கி.மு. 458 - 390 கி.மு. 445 - 420 | 
எஸ்ரா நெகேமியா ஆகியோர் கொணர்ந்த சீர்திருத்தம்  | 
யோவேல், யோனா, நீதிமொழிகள் திருப்பாடல்கள். 1,2 குறிப்பேடுகள் 
எஸ்ரா, நெகேமியா நூல்கள்  | 
| 
கி.மு. 333 - 63  
கி.மு. 333 - 300  
கி.மு. 300 - 200  
கி.மு. 200 -175  | 
பாலஸ்தீன நாட்டில் கிரேக்க ஆட்சி.  
பெரிய அலக்சாந்தர் காலம்  
தாலமியர் ஆட்சி  
செலூக்கர் ஆட்சி  | 
சபை உரையாளர், தோபித்து  சீராக், எஸ்தர், தானியேல், யூதித்து, பாரூயஅp;க்கு | 
| 
கி.மு. 175 -135  | 
கிரேக்க ஆட்சிக்கு எதிராக மக்கபேயர் கிளர்ச்சி  | 
சாலமோனின் ஞானம் | 
| 
கி.மு. 134 - 63  | 
அஸ்மோனியர் (மக்கபேயர்) பாலஸ்தீனாவை ஆட்சிபுரிதல்  | 
1,2 மக்கபேயர்  | 
| 
கி.மு. 63  
கி.மு. 63 - 4  | 
உரோமைத் தளபதி பொம்பேயி எருசலேமைக் கைப்பற்றல்.  
பாலஸ்தீனாவில் உரோமை ஆட்சி.  | |
| 
கி.மு. 37 - 4  | 
உரோமையரால் நியமிக்கப்பட்ட பெரிய ஏரோது பாலஸ்தீனாவில் ஆட்சி. | 
| 
பழைய ஏற்பாட்டின் தோற்றம்: | 
| 
வாய்மொழி மரபு; கி.மு. 2000 - கி.பி. 90 | 
| 
எழுத்து அமைப்பு; கி.மு. 950 - கி.பி. 90 | 
| 
பதிப்பு வடிவம்; கி.மு. 586 - கி.பி. 90  | 
(பழைய ஏற்பாட்டு நூல்கள் தோன்றிய வரலாறில் மேலும் விபரங்கள் அறியலாம்)
புதிய ஏற்பாடு 
| 
ஆண்டு  | 
நிகழ்வு -- காலம்  | 
புதிய ஏற்பாட்டு நூல்  | 
| 
கி.மு. 6-4  | 
இயேசு பிறப்பு (பெரிய ஏரோது இறப்பதற்கு முன்)  | |
| 
கி.மு. 6 - கி.பி. 34  
கி.மு. 4 - கி.பி. 6  
கி.மு. 4 - கி.பி. 39  
கி.மு. 4 - கி.பி. 34  | 
பெரிய ஏரோதின் மகன்கள் ஆட்சி;  
அர்க்கெலா  
ஏரோது அந்திப்பா  
பிலிப்பு  | |
| 
கி.பி. (ஏ) 27 -30  
(ஏ) 27  
(ஏ) 30  | 
இயேசுவின் திருமுழுக்கு; 
இயேசுவின் திருப்பணிக்காலம்; 
திருப்பணித் தொடக்கமும் இயேசுவின் இறப்பும் உயிர்த்தெழுதலும்  | |
| 
கி.பி. (ஏ) 30 - 63  | 
திருத்தூதர் பவுலின் பணிக்காலம்  | 
ஐயத்திற்கு இடமின்றி பவுல் எழுதிய திருமுகங்கள் (உரோமையர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், பிலிப்பியர், 1 தெசலோனிக்கர், பிலமோன்)  | 
| 
கி.பி. 37 - 44  | 
முதலாம் ஏரோது அகிரிப்பா  | |
| 
கி.பி. 66 - 70  | 
உரோமை ஆட்சிக்கு எதிராக யூதர்களின் முதல் கிளர்ச்சி  | |
| 
கி.பி. 70  | 
உரோமையர் எருசலேமை முற்றுகையிட்டு அழித்தல்  | |
| 
கி.பி. 70 - 100  | 
புதிய ஏற்பாட்டின் பெரும்பான்மையான நூல்கள் எழுத்துவடிவம் பெற்ற காலம்  | 
மாற்கு, மத்தேயு, லூக்கா, திருத்தூதர் பணிகள், எபேசியர், கொலோசியர், 2 தெசலோனிக்கர், 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு, தீத்து, எபிரேயர், யாக்போபு, 1 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா, திருவெளிப்பாடு.  | 
| 
கி.பி. 71 - 132  | 
உரோமைப் பேரரசர் பலரின் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம்  | 
2 பேதுரு  | 
| 
கி.பி. 132 - 135  | 
யூதர்கள் உரோமையருக்கு எதிராக நடத்திய இரண்டாம் கிளர்ச்சி  | 








0 comments:
Post a Comment