நேபுகாத்நேச்சார் அரசாண்ட இரண்டாவது வருடம்  அவன் ஒரு கனவு கண்டான். அவனுடைய கனவிலே ஒரு பயங்கரமான மனித
 சிலையை கண்டான்.  அந்த சிலையின்; தலை பசும்பொன், மார்பும் புயமும் வெள்ளி, வயிறும் தொடையும்  வெண்கலம், கால்கள் இரும்பு, பாதங்கள் களிமண்ணும் இரும்புமாக இருந்தது.  பாபிலோனிய மாந்தரீகர்களாலும், குறி சொல்பவர்களாலும் அதற்கு அர்த்தம் சொல்ல  முடியாமல் போயிற்று. தானியேல் அவனுக்கு அவன் கனவையும், அதன் விளக்கத்தையும்  சொன்னான் .நேபுகாத்நேச்சார் செப்பனத்தில் கண்ட சிலை  
தானியேல் 2:  1- 49  
 
 தலை பசும்பொன் : பாபிலோனிய சாம் இராச்சியம் (கி.மு 605- 539) 
தானியேல் 2: 36  சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப்  பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம்  ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே. 
மார்பும், புயமும் வெள்ளி: பெர்சிய சாம்ராச்சியம் (கி.மு 539- 331)
தானியேல் 2:39  உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறோரு ராஜ்யம் தோன்றும். கோரேசு  மன்னனுடைய காலம். இவன் மேதிய சக்கரவர்த்தியையும், சின்ன ஆசியாவிலுள்ள  மன்னர்களையும் ஜெயித்த தன் ராச்சியத்தை பலப்படுத்தினான். பாபிலோனும்,  அசீரியாவும் இவனுடைய ஆட்சிக்கு கீழ்ப்பட்டிருந்தது. கோரேஸ் மன்னனைப்பற்றி  ஏசாயா உரைத்த தீர்க்கதரிசனம் : ஏசாயா 44: 28- 45: 7 கோரேசைக் குறித்து:  அவன் என் மேய்ப்பன், அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்,  தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப்  பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். நேபுகாத்  நேச்சாரினால் அழிக்கப்பட்ட சாலமோனின் தேவாலயத்தை கட்டுவதற்கு இவன் உதவி  செய்தான். பாபிலோனிலிருந்து அநேக யூதர்களை விடுதலை செய்தான். தானியேல்,  செருபாபேல்,எஸ்றா, நெகேமியா இவன் காலத்தில் வாழ்ந்தனர். 
  
வயிறு, தொடைவெண்கலம்: கிரேக்க சாம்ராச்சியம் ( கி.மு 331- 168 )
தானியேல் 2:39  பின்பு பூமியெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று  எழும்பும். கிரேக்க படைத்தளபதி மகா அலெக்ஸாந்தரினால் ஸ்தாபிக்கப்பட்டது.  ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய ஆசியா, இந்தியா வரைக்கும் இவனுடைய இராணுவம்  வந்தது. அநேகருடைய கருத்துப்படி மகா அலெக்ஸாந்தர் தான் இதுவரைக்கும் இருந்த  படைத்தளபதிக்குள் சிறந்தவன். தன்னுடைய 33 ஆவது வயதில் நோய் காரணமாக  மரணத்தை தளுவிக்கொண்டான். இவனுடைய மரணத்திற்கு பின்னர் கிரேக்க  இராச்சியத்தை இவனுடைய 4 தளபதிகளும் பங்கிட்டு கொண்டனர். (தானியேல் கண்ட  தரிசனம் அதிகமாக இதை விளக்கி காட்டுகின்றது. தானியேல் 8ஆம் அதிகாரத்தில்  வரும் வெள்ளாட்டுக்கடா இவனையே குறிக்கின்றது). கிரேக்க ஆதிக்கத்தின்  பாதிப்பை நீங்கள் வேதாகமத்திலும் காணலாம். புதியேற்பாடு கிரேக்க  மொழியில்தான் முதன் முதலில் எழுதப்பட்டது. 
மகா அலெக்ஸாண்டர்

கால்கள் இரும்பு: ரோம சாம் ராச்சியம் (கி.மு 168- கி.பி 476)
தானியேல் 2:40   நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும். இரும்பு எல்லாவற்றையும்  எப்படி நொறுக்கிச் சின்ன பின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற  இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும். லத்தீன்  மொழியில் ரோம் என்றால் பலம் என்று பொருள்படும். உலோகங்களிலே இரும்பு  மிகவும் பெலம் வாய்ந்தது. ரோம சாம்ராச்சியம் அகஸ்துராஜனினால் கட்டப்பட்டது.  இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் சமயம், அகஸ்துராஜன் தான் அரசாண்டான் (லூக்கா 2: 1).  இவனுடைய பேரன் யூலியஸ் சீசார். மற்ற எல்லா சாம்ராச்சியங்களைப்பார்க்கிலும்  இது வித்தியாசமானது. ஏனென்றால் இதனுடைய பாதிப்பு களிமண், இரும்புமான  பாதங்களின் இராச்சியத்திலும் வருகின்றபடியால். 
ரோம சாம்ராச்சியம் மேற்கு, கிழக்காகவும் இரண்டாக பிளவுபட்டு. பின்பு பல நாடுகளாக பிரிந்தது.
  
ரோம சாம்ராச்சியம் மேற்கு, கிழக்காகவும் இரண்டாக பிளவுபட்டு. பின்பு பல நாடுகளாக பிரிந்தது.
களிமண், இரும்பு: ஐரோப்பா (கி. பி 476- இரண்டாவது வருகை மட்டும்)
தானியேல் 2:41  பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி  இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும். ஆகிலும்  களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில்  கொஞ்சம் அதிலே இருக்கும்.
கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது
தானியேல் 2:42 என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
தானியேல் 2:43 நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள். ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
  
கடைசியாக எழும்பும் இராச்சியம் இரும்பும் களிமண்ணும் எப்படி ஒன்று சேராதோ அப்படி அவர்களும் ஒன்று சேரமாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு இராச்சியமாக இருக்க முயற்சி செய்வார்கள். ஐரோப்பா பலவித கூட்டு நடவடிக்கைகளை எடுக்கின்றது. கல்யாணம், சண்டை, சமயம், பொருளாதாரம். இப்படி பல விதங்களில் தங்களுக்குள்ளே ஒற்றுமையை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
  
தானியேல் 2:43 நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள். ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
கடைசியாக எழும்பும் இராச்சியம் இரும்பும் களிமண்ணும் எப்படி ஒன்று சேராதோ அப்படி அவர்களும் ஒன்று சேரமாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு இராச்சியமாக இருக்க முயற்சி செய்வார்கள். ஐரோப்பா பலவித கூட்டு நடவடிக்கைகளை எடுக்கின்றது. கல்யாணம், சண்டை, சமயம், பொருளாதாரம். இப்படி பல விதங்களில் தங்களுக்குள்ளே ஒற்றுமையை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
ராச்சியங்களை நிர்மூலமாக்கி என்றென்றைக்கும் நிற்கும் கல்: 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையையும், அவருடைய ஆயிரம் வருட அரசாட்சியையும் குறிக்கின்றது.
நன்றி : http://www.tamilchrist.ch/  








0 comments:
Post a Comment