Wednesday 19 October 2011

2 தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜவுமாகிய சாலமோனின் நீதி மொழிகள்.


ஆறு காரியங்களை கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.

அவையாவன:மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களின் இரத்தம் சிந்தும் கை ,

துராலோசனையை பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடும் கால்,

அபத்தம் பேசும் பொய்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபன்னுதல்
இவைகளே. நீதிமொழிகள் 6 : 16 -19

நன்மை செயும்படி உனக்கு திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே.

உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி : நீ போய் திரும்பவா, நாளைக்கு தருவேன் என்று சொல்லாதே. நீதிமொழிகள் 3 : 27,28

ஒருவன் உனக்கு தீமை செய்யாதிருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே. நீதிமொழிகள் 3 : 30

நீதி ஜீவனுக்கு எதுவாகிறதுபோல், தீமையை பின்தொடருகிறவன் மரணத்திற்கு எதுவாகிறான். நீதிமொழிகள் 11 : 19

கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்கு தப்பான்; நீதிமான்களின் சந்ததியோ விடுவிக்கப்படும். நீதிமொழிகள் 11 : 21

மேற்கண்ட  இந்த திருவசனங்கள் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது. தவறாக ஒருவரும் பயன்படுத்தகூடாது.

2 comments:

  1. இவை ப‌த்தி எல்லாம் இப்போது யாரும் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை, எல்லாரும் வேறு திசை நோக்கி ஓடி கொண்டிருக்கிறோம். எல்லாம் சுய‌ந‌ல‌ம்.

    ReplyDelete
  2. வணக்கம், எனக்கு ஒர் சந்தேகம் அதை திர்த்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன். பைபிலில் நீதிமொழிகள் பகுதியில் ஒரு வசனம் படித்தேன், அந்த் வசனம் த்ற்போது நினைவில் இல்லை ஆனால் அது “ தவறுகளை பண்ணிவிட்டு விளையாட்டுக்கு செய்தேன், என்று சொல்பவன் முடன்” என்ற அர்த்ததில் வரும், எனக்கு அது எந்த அதிகாரம், எந்த வசனம் என்று சொல்லுங்களேன்...

    ReplyDelete

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.