வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுகொள்வான்.
சோம்பேறி குளிருகிரதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது. நீதிமொழிகள் 20 : 3,4
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய். நீதிமொழிகள் 20 : 13வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்;
பின்போ அவனுடைய வாய் பருக்கைக்கற்களால் நிரப்பப்படும். நீதிமொழிகள் 20 : 17
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன உதடுகளினால் அளப்புகிறவனோடே கலவதே. பின்போ அவனுடைய வாய் பருக்கைக்கற்களால் நிரப்பப்படும். நீதிமொழிகள் 20 : 17
தன் தகப்பனையும் தன தாயையும் தூஷிக்கிரவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.
ஆரம்பத்திலே துரிதமாய்க் கிடைத்த சுதந்திரம் முடிவிலே ஆசிர்வாதம் பெறாது.தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20 : 19 -22
மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்கிறார் நீதிமொழிகள் 21 : 2 பொய்ய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைச் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும். நீதிமொழிகள் 21 : 6
ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துகொள்கிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டன். நீதிமொழிகள் 21 : 13மேற்கண்ட இந்த திருவசனங்கள் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது. தவறாக ஒருவரும் பயன்படுத்தகூடாது.
This Words Lead to Good Life for the Christianity. Those who are Follow till end of the life surely they will achive Heavenly life. - H.Sathiyaseelan.
ReplyDelete