தம்முடைய
தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன்
மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ
உன் தாய் என்றார்" (யோவான்
19 : 26-27)
இறுகிய;
மன இருக்கத்தின் நேரமாகவே அது இருந்திருக்கும். ஒரு
மகனை தம் சொந்த இனத்தவரே,
மதத்தவரே கொலை செய்யப்படுமளவு குற்றம்
சுமத்தி,
சிலுவையில் அறையும் பொழுது அருகிலிருக்கும்
தாய்க்கு ஓர் இறுகிய உடைந்து
போன சூழலே இருக்கும். தன்னை,
தன் இனத்தவரே "இவன் எங்கள் இனத்தைச்
சார்ந்தவன் இல்லை" என்பதாக ஊருக்குப் புறம்பே
அவமானமாகச் சாகடித்துக் கொண்டிருக்கும் காட்சியை, தன் தாயும் நேரில்
காண நேரும் சூழல், ஒரு
மகனுக்கு மன இறுக்கத்தையும், கையறு
நிலையையும் தான் கொண்டு வந்திருக்கும்.
இருவரும் இதயம் வெடித்து இறக்குமளவுக்கு
ஏதுவான சூழலே அது என்றாலும்
மிகையில்லை. தேவனுக்குள், பரமதந்தையின் ஐக்கியத்துக்குள் இருப்பவரே, இந்த மனித இயல்பையும்,
இறுக்கத்தையும், கையறு நிலையையும் மீறி,
இறைவன் சித்தப்படி எது நடப்பினும் அதற்கு
ஆம் என்றும் ஆமென் என்றும்
வாழ முடியும். இயேசு அப்படித்தான் வாழ்ந்தார்.
இன்று முதியோர் இல்லங்களில் இருக்கும் பெற்றோர் பெருகி விட்டனர்.தன்
ரத்தத்தை பாலாக்கி தன் குழந்தையை ஊட்டி
சீராட்டி வளர்த்த தாய் முதிர்
வயதானதும்,பிள்ளைகளுக்கு பாரமாகி விடுவதை நினைத்தால்
வேதனையாக இருக்கிறது.தாய் தன் கடமைகளை
செய்யாதிருந்தால் மகன்,மகள், இப்படியான
ஆசீர்வாதத்தோடு வளர்ந்திருப்பார்களா என நினைக்க தோன்றுகிறதல்லவா?
அனால், இத்தகைய பெற்றோர் தங்கள்
பிள்ளைகளை குறை கூறாமல் அவர்களுக்காக
பரிந்து பேசுவார்கள். இதுவே தாயின் அன்பு.
இயேசு கிறிஸ்து மரண தருவாயில் வேதனையின்
மத்தியில் சிலுவையில் தொங்கி கொண்டு இருக்கும்
போதும் தான் மூத்த மகனாய்
இருந்ததை உணர்ந்து தன் பிரிய சீசனாகிய
யோவானை பார்த்து, "இதோ உன் தாய்"
என்று சொல்லி, தாய்க்கு ஒரு
புகலிடத்தை ஏற்படுத்தினார். தன்னை நேசித்த யோவானை,
தன் தாயையும் நேசிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
உன் தாய் வயது சென்றவளாகும்
போது அவளை அசட்டை பண்ணாதே..(நீதி 23:22)
ஒரு தாயின் வல்லமையான ஊக்கமான
ஜெபம் எப்படியாய் ஒவ்வொரு குடும்பங்களையும் கட்டுவதை
நாம் காண்கிறோம். அந்த தாய் வயது
சென்றவளாகும் போது அவர்களை கவனிப்பது
நம் கடமையல்லவா? "உன் நாட்கள் நீடித்திருப்பதட்கு
உன் தகப்பனையும்,உன் தாயையும் கனம்
பண்ணுவாயாக (யாத் 20:12)
அப்பா என் பெற்றோரை நான்
அலைக்கழிக்க மாட்டேன் என்ற பொருத்தனையோடு சிலுவையில்
தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
நன்றி:இயேசு நேசிக்கிறார் (agwjja)
Gnana Wilson
0 comments:
Post a Comment