கடற்கரை மணலைப்போலவும் பெருகவே
பெருகப்பண்ணுவேன் ...
ஆதி
12:2 நான்
உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை
ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்;
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
ஆதி12:3 உன்னை
ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்;
பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
உபா28:6 நீ
வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
எசேக்
34:26 நான்
அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும்
ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான
மழை பெய்யும்.
மல்கி
3:10 என்
ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே
கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத்
திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்
பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார்.
சங்
128:5 கர்த்தர்
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ
ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
சங் 128:6 நீ
உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
1நாளா
17:27 இப்போதும்
உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு
முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர்
அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்
என்றான்.
சங் 28:9 தேவரீர்
உமது ஜனத்தை இரட்சித்து, உமது
சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
சங்
115:12 கர்த்தர்
நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல்
குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை
ஆசீர்வதிப்பார்.
எபே
1:3 நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய
தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே
ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை
ஆசீர்வதித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment