சங்
46:1 தேவன்
நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
சங்
90:1 ஆண்டவரே,
தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு
அடைக்கலமானவர்.
சங்
142:5 கர்த்தாவே,
உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும்,
ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
ஏசா
25:4 கொடூரமானவர்களின்
சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு
வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும்,
நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு
ஒதுங்கும் நிழலுமானீர்.
உபா
33:27 அநாதி
தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய
நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர்
உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று
கட்டளையிடுவார்.
சங்
62:7 என்
இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில்
இருக்கிறது; பெலனான என் கன்மலையும்
என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.
சங்
59:16 நானோ
உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய
கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
சங்
91:2 நான்
கர்த்தரை நோக்கி: நீர் என்
அடைக்கலம், என் கோட்டை, என்
தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று
சொல்லுவேன்.
சங்
91:9 எனக்கு
அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
சங்
91:10 ஆகையால்
பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை
உன் கூடாரத்தை அணுகாது.
நீதி14:26 கர்த்தருக்குப்
பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும்
அடைக்கலம் கிடைக்கும்.
0 comments:
Post a Comment