1.முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
2.சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களை எல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறது.
3.எல்லாம் மாயையும், மனதுக்கு சஞ்சலமாயிருந்தது; சூரியனுக்கு கீழே பலன் ஒன்றுமில்லை.
4.மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
5.மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.
6.தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
7.ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்திற்கு சவுரியவான் களின் சவுரியமும் போதாது; பிழைப்பிற்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐஸ்வரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்குப் வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச் செயலும் நேரிடவேண்டும்.
8.வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிளே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவை எல்லாவற்றின் நிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
9.நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திளிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.
10.தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
11.ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையனாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே இளவயதும் வாலிபமும் மாயையே. தயவு செய்து பாவங்களிலிருந்து விடுப்பட்டு தேவனுக்கு பயந்து நடங்கள். காலம் இன்னும் நிறைய இல்லை. இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று சொன்னவர் சீக்கிரம் வரப் போகிறார். நம் கண்கள் காணப்போகிறது. அதற்குள் உங்கள் ஆத்துமாவை நரகத்திற்கு தப்புவியுங்கள். இது கிருபையின் காலம்.
தேவன் தாமே உங்களை அசீர்வதிப்பாராக. ஆமென்.
மேற்கண்ட இந்த திருவசனங்கள் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது. தவறாக ஒருவரும் பயன்படுத்தகூடாது.
0 comments:
Post a Comment