Wednesday 16 November 2011

0 நாவை அடக்க...............


1.நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும்,    தன் சரீரமுழுவத்தையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.

2.பாருங்கள் குதிரைகள் நமக்குக் கீழ்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுசரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.


3.கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாளும் கடும் காற்றுகளால் அடிப்பட்டாலும்,  அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.

4.அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளை பேசும். பாருங்கள் சிறிய நெருப்பு பெரிய  காட்டைக் கொளுத்திவிடுகிறது!

5.நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவனது முழுசரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயும் சக்கரத்தையும் கொளுத்திவிடுகிரதாயும் நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

6.சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிரானிகள், நீர்வாழும் ஜெந்த்துகள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.

7.நாவை அடக்க ஒருமனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

8.அதினாலே  நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலே சபிக்கிறோம்.

9.துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது.

10.என் சகோதரரே இப்படியிருக்கலாகது.

11.ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?

12.என் சகோதரரே. அத்திமரம் ஒளிவப்பழங்களையும், திராட்சச் செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.

13.உங்களில் விவேகியும் ஞானியுமாயிருக்கிரவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

14.உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாரட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய் பொய்சொல்லதிருங்கள்.

15.இப்படிப்பட்ட ஞானம பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல்,ஜென்மசுசுபாவத்துக்குரியதும் பேய்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

16.வைராக்கியம், விரோதமும் எங்கு உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செயகைகளுமுண்டு.

17.பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதாணமும், சாந்தமும் இணக்கமுமுள்ளத்தையும், இரக்கத்தலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாதத்தையும், மாயமற்றதாயுமிருக்கிறது.

18.நீதியான கனியானது சமாதானத்தை நடப்பிகிறவர்களாலே சமாதனதிலே விதைக்கப்படுகிறது. 
   
தயவு செய்து பாவங்களிலிருந்து விடுப்பட்டு தேவனுக்கு பயந்து நடங்கள். காலம் இன்னும் நிறைய இல்லை. இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று சொன்னவர் சீக்கிரம் வரப் போகிறார். நம் கண்கள் காணப்போகிறது. அதற்குள் உங்கள் ஆத்துமாவை நரகத்திற்கு தப்புவியுங்கள். இது கிருபையின் காலம்.
தேவன் தாமே உங்களை அசீர்வதிப்பாராக. ஆமென்.

மேற்கண்ட  இந்த திருவசனங்கள் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது. தவறாக ஒருவரும் பயன்படுத்தகூடாது.
 

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.