Saturday 24 December 2011

0 வாழ்த்துக்கள்

கிறிஸ்த்துவுக்குள் பிரியமான நண்பர்களே,

அனைவருக்கும் இயேசு கிறிஸ்த்துவின் இணையில்லா நாமத்தினால் உங்களுக்கு என் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். 

பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று தேவதூதன்
சொன்னான். ஆம். உலகத்தில் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும்
நற்செய்தியென்றால் அது இதுதான். இயேசுவானவர் (தேவனே மனிதனாக) இவ்வுலகத்தில் பிறக்கவில்லை என்றால் உலகத்தின் கதி அதோகதிதான். பாவ மன்னிப்பு என்பதே இல்லாமல் நாம் அனைவரும் நரகத்திற்கு தான்  போயிருப்போம். மனிதகுலத்திற்கு மீட்பு என்பதே இல்லாமல் போயிருக்கும். இறைவன் நம்மேல் வைத்த மகா இரக்கத்திற்காய் மகா கிருபைக்காய் தமது ஒரே குமாரனை உலகத்திற்கு அனுப்பி நமக்கு மீட்பையும் மன்னிப்பையும் அருளியுள்ளார்.

ஆம். பிரியமானவர்களே இந்த நற்செய்தியை நாம் இயேசுவை அறியாதவர்களுக்கு அறிவிப்பது நம்முடைய தலையாய கடமை. உங்களுக்காக உங்கள் பாவங்களுக்காக பிறந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்தெழுந்தார் என்று பாவங்களிலேயே பிறந்து பாவத்திலேயே வாழ்ந்து மரித்து நரகத்திற்கு செல்லும் இந்த உலக மக்களுக்கு அறிவிக்கவேண்டும். ஆம். பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என வேதம் கூறுகிறது. பாவம் யார் செய்தாலும் நரகத்திற்குத்தான் செல்லவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. கிறிஸ்த்தவனாக இருந்தாலும் சரி. பாவம் செய்தால் நரகம் நிச்சயம்.

அப்படியானால் நம்முடைய ஆத்துமாவை நரகத்திற்கு தப்புவித்துகொண்டு பரலோகத்திற்கு செல்ல வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும். அதற்கு பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது என்பதை என்னுடைய முந்தய பதிவை (தேவனுடைய ராஜ்ஜியத்தை அடைய தடையாக உள்ள காரியங்கள்) பார்க்கவும். 

நண்பர்களே இது மதமாற்றம் அல்ல. நீங்கள் கிறிஸ்த்தவராக மாறுவதால் எங்களுக்கு எந்த பயனும், பிரயோசனமுமில்லை இல்லை. இருந்தாலும் ஏன் இதையே இந்த கிறிஸ்த்தவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அனைத்தும் உங்கள் நன்மைகே. பாவ வாழ்க்கையை விட்டு விட்டு மனம் திரும்புங்கள் திருந்துங்கள். உங்களின் பாவங்களுக்கு மன்னிப்பை இயேசு கிறிஸ்த்துவை தவிர யாராலும் அருள முடியாது.

இதோ சீக்கிரமாய் வருகிறேன், அவனவன் செய்கைக்கு தக்கதான பலன் என்னோடு வருகிறது. என்று  இயேசு கிறிஸ்த்து கூறியுளார். நமக்காக பிறந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்தெழுந்த தேவன் சீக்கிரமாய் வரப்போகிறார்.

இது கிருபையின் காலம். மனம் மாறுங்கள். பாவவாழ்க்கையை விட்டு மேலான வாழ்க்கையான பரலோக வாழ்க்கையை நாடுங்கள். மீண்டும் உங்களுக்கு என்னுடைய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். 

தேவன் தாமே உங்களையும் உங்கள் குடுபங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும். பரலோகம் செல்ல என்ன செய்யவேண்டும் என்பதற்கு

(பரிசுத்த வேதம் என்ன கூருகிறது என்பதை வேதத்திலிருந்து சிலவற்றை பதிவிட்டுள்ளேன். படித்து பயன் பெறுங்கள்.)            

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.