Friday 7 March 2014

0 தவறுக்கு தண்டணைகள் தாமதம் ஏன்?

punishment

என் மனைவி ஒரு நாள் எனது மகளை அதிகமாக அடித்துவிட்டாள்! நான் எதற்க்காக அடித்தாய் என்று காரணம் கேட்டபோது, அவள் சொன்ன காரணம்
மிக அற்பமாக இருந்ததால் எனது மனைவியை திட்டினேன்! அப்பொழுது அவள் "இவளுக்கு பல நாட்களாக, பல செயல்கள் செய்யும்போது எச்சரிக்கை பண்ணிக்கொண்டே இருக்கிறேன், அன்று அதை செய்தாள், இன்று இதை செய்தாள் என்று அடுக்கடுக்காக அடுக்கி, எல்லாவற்றிக்கும் சேர்த்து இன்று சொல்லி சொல்லி அடி கொடுத்தேன்" என்று காரணம் சொல்லி முடித்தாள்! எல்லா காரணத்தையும் கேட்டபோது அந்த அடி தகுதியானதே என்றே எண்ண தோன்றியது!

ஆம்!

இணையில்லா இரக்கமுள்ள நம் அன்பு தகப்பனாகிய ஆண்டவரும் அப்படித்தான். எத்தனயோதரம் எச்சரிக்கிறார், யாரையாவது அனுப்புகிறார் தவறு செய்யாதே என்று தக்க சமயத்தில் சொல்ல வைக்கிறார்திருந்திவிடு என்று தீர்க்கமாக எச்சரிக்கிறார், அவனை நோக்கி இருக்கும் தண்டனைக்காக பரிதபிக்கிறார்ஆனால் அந்த எச்சரிப்பை அநேகமுறை அசட்டை பண்ணுகிறோம்

துணிந்து தீமையை விதைக்கும் மனிதர்கள்!


எனது நண்பன் ஒருவனின் தகப்பனார் சராசரி வயதில் அரசினர் மருத்துவ மனையில் நோயால் இறந்துவிட்டார்! நண்பர் தகப்பனார் போய்விட்ட சோகத்தில் பிரமை பிடித்தவர்போல இருக்க மருத்துவ மனையில் உள்ள உழியர்கள் அவரிடம் எவ்வளவு பிடுங்கலாம் என்ற எண்ணத்தில் பிணத்தை வெளியில் கொண்டுசெல்ல அனுமதிக்காமல் அதிக டார்ச்சர்போகும் இடமெல்லாம் பணம்! பிணமானாலும் பணமில்லாமல் நகருவதில்லையார் செத்தால் எனக்கென்ன என் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்கவேண்டும் எனது தொப்பை நிரம்பவேண்டும்    என்பதே இன்று அநேகரின் தாரக மந்திரம்!.

இந்திய திருநாட்டில் எந்த அரசாங்க அலுவலகத்தில் கையூட்டு இல்லாமல் காரியம் நடக்கிறது என்று தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கொடு என்று கேட்டு இரக்கமில்லாமல் இயன்றவரை பிடுங்கும் பேய்கள் எங்கும் நிறைந்துள்ளன! ஒரு "ஜாதி சர்டிபிகேடே" வாங்கப்போனால் அதற்க்காக படும் அவஸ்தை படுகேவலம், தெரியாமல் நடந்த  ஒரு சிறு விபத்தென்றாலும் கண் மறையும்வரை கண்டபடி திட்டும் கயவர்கள்; தானே தவறுசெய்துவிட்டு அப்பாவியை அடிக்கும் அரக்கர்கள், அடுத்தவனை போட்டுக்கொடுத்து அதனால் ஆனந்தம்காணும் அறிவாளிகள், மேலும் போலீஸ் என்று போய்விட்டாலோ அங்கு பேராபத்துதான்! அதுவும் பெண்ணானவள் போலீஸ் போய்விட்டாலோ சொல்ல தேவையே இல்லை! பெண்ணுக்கு பொருளுக்கும் பாதுகாப்பாக இருக்கவேண்டியவர்கள் இருக்கும் இடத்தில், இரவுநேரத்தில் பெண்கள் போலீஸ்ஸ்டேசன் போகக்கூடாது என்று (அதாவது புளியமரத்தில் பேய் இருக்கிறது இரவு அங்கு போகக்கூடாது என்பதுபோல்) சொல்லவேண்டிய சோகநிலை!

தவறு என்று தெரிந்தே எத்தனை காரியங்களை துணிந்து செய்கிறோம். பொய் சொல்லாதே என்றால் போய்யா என்கிறோம், அடுத்தவர் பொருளை அவர்கள் அனுமதியில்லாமல் உபயோகிக்காதே என்றால் அது தவறில்லை என்கிறோம், வஞ்சம் வைக்காதே, பொறாமை படாதே, லஞ்சம் வாங்காதே என்றெல்லாம் சொன்னார் யாரும் கேட்பதில்லை. பிறர் மனம் நோகும்படி செயல் செய்யாதே என்றால் நான் வைராக்கியகாரன்  அது தவறில்லை இது தப்பில்லை, எதெது யார்யாருக்கு தவறென்று நம்மால்  தீர்மானிக்க முடியாது, அல்லது எனது பாவங்களுக்காக இயேசு மரித்துவிட்டார்  போன்று எதாவது ஒரு சாக்குசொல்லி பல தவறுகளை துணிந்து செய்கிறோம்

தவறு செய்தவனை தண்டிக்க வேண்டும்என்றால் இவர்களில் யாரை தண்டிப்பீர்கள்எப்படி தண்டிப்பீர்கள்மனிதனால் அது சாத்தியம் அல்ல!

இவர்களுடனே வாழ்ந்து பழகிப்போன நாம இந்த செயல்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறோம்! ஆனால் இறைவனின் விதி எவரையும் விட்டுவைக்காது!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். (கலாத்தியர் 6.7)

யாரும் பார்க்கவில்லை என்று துணிந்து செய்யும் (தெரிந்தோ தெரியாமலோ) பிறருக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் எல்லா செயலும் ஒரு சேவிங் அக்கவுண்ட் போல அவர் கணக்கில் சேர்கிறது. எத்தனை சொல்லியும் திருந்தாத ஒருவருக்கு எல்லாம் சேர்ந்து மொத்தமாக திருப்பி கிடைக்கும்! அன்று காப்பாற்ற யாரும் வரவில்லை என்று  கதறி அழுவதில் கண்டிப்பாக பயனில்லை!

உலகம் திருந்த வேண்டுமா முதலில் அவரவர் திருந்தவேண்டும்! பிறரை குற்றவாளி என்று தீர்ப்பதில் எந்த பயனும் இல்லை! அவரவர் விதைத்ததன் பலனைத்தான் அவரவர் அறுக்கின்றனர். அவர் எப்போது விதைத்தார் எப்போது அறுக்கிறார் என்பது இறைவனுக்கே தெரியும்!

எனவே நலமான வாழ்க்கை வாழ  இன்றும் என்றும் நல்லதையே விதையுங்கள்! முடிந்தால் உதவிசெய்யுங்கள் அல்லது அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமலாவது அடுத்தவர் மனதை புன்படுத்தாமலாவது  இருக்க விரும்புங்கள்!



சங்கிதம் -103 :10 ,11

 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும்,

நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும்

இருக்கிறார்.



 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப்

பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு

பெரிதாயிருக்கிறது.



பிரசங்கி - 8 :11

 துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால்,

மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே

துணிகரங்கொண்டிருக்கிறது.



இப்படிபட்ட வசனங்கள் இருகிறதை தவறாக புரிந்து கொண்டார்களோ

 என்னவோ தெரியவில்லை...!




II   பேதுரு - 3 :9.

 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது

வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும்

கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி,

நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.










நன்றி:lord.activeboard



0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.