நீயோ,
தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி,
நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும்
சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 தீமோத்தேயு
6:11
இந்த
நாட்களில் இரண்டு முக்கியமான காரியத்தை
விட்டு ஓடும் படி தேவன்
நம்மை எச்சரிக்கிறார். முதலாவதாக
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்
அப்போஸ்தலனாகிய
பவுல் கொரிந்தியரூக்கு எழுதிய நிருபத்தில் இவ்விதமாக
கூறுகிறார் 1 கொரிந்தியர் 6:18 ஐ படிக்கும் போது வேசித்தனத்திற்கு
விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப்
பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப்
பாவஞ்செய்கிறான்.
யோசேப்பை
பாருங்கள், ஆதியாகமம்
39 தாம் அதிகாரம் 12 ம் வசனத்தை படிக்கும்
போது அப்பொழுது
அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப்
பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ
தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு
வெளியே ஓடிப்போனான்.
ஆம்
அன்பானவர்களே யோசேப்பு, பாவம் செய்ய தூண்டும்
இடத்தை விட்டு ஓடிப் போனான்
என்று வாசிக்கிறோம். ஆம் அப்படி அவன்
ஓடி போனதால் அந்த நாட்டிற்கே
அதிபதியாய் ஆனான் என பார்க்கிறோம்.
கர்த்தர் நம்மை ஆசிர்வதிக்க வேண்டுமானால்
நாமும் இப்படி பட்ட காரியத்திற்கு
விலகி ஓடும் படி தேவன்
நம்மை எச்சரிக்கிறார்.
இரண்டாவதாக
விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்
1 கொரிந்தியர்
10:14 ஐ படிக்கும் போது
ஆகையால்
எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். ஆம்
இன்று உலகம் விக்ரகத்துக்கு பின்னாக
ஓடிக்கொண்டு இருக்கிறது தேவன் எச்சரிக்கிறார் விக்கிரகாராதனைக்கு
விலகி ஓடுங்கள் என்று. அப்போஸ்தலனாகிய
யோவான் 1 யோவான் – 5:21 ல் நம்மை பார்த்து
கூறுகிறார். பிள்ளைகளே,
நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.
வெளிப்படுத்தின
விசேஷம் 21 ம் அதிகாரம் 8 ம்
வசனத்தில்
……..விக்கிரகாராதனைக்காரரும்…………. அனைவரும்
இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்
என
பார்க்கிறோம்.அக்கினிக்கு
இரை ஆகாதபடி விக்கிரகங்களுக்கு விலகி
ஓட தேவன் நம்மை எச்சரிக்கிறார்.ஆம்
அன்பானவர்களே பவுல் தீமோத்தேயுக்கு கூறியது
போல இன்று தேவன் நம்மை
பார்த்து கூறுகிறார். நம்மை வழிவிலக செய்யும்
பாவமான காரியங்களை விட்டுவிட்டு, நீதியையும் தேவபக்தியையும், மற்ற காரியங்களையும் அடையும்படி
தேவன் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே
பொறுமையோடே ஓடக்கடவோம். கர்த்தர் தாமே நம் அனைவரயும்
ஆசிர்வதிப்பாராக ஆமென் ……..
courtesy:agwjja(Gnana Wilson)
0 comments:
Post a Comment