Thursday 13 September 2012

1 வேதத்தை படிப்பதால் என்ன பயன்??????

கிறிஸ்த்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,
கர்த்தருடைய வேதம் பரிசுத்தமானது, இந்த பரிசுத்த வேதத்தை படிப்பவர்களுக்கு என்ன நிகழும்,
என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதை கீழே கொடுத்துள்ளேன். அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை நீங்களும் பெறவேண்டுமா? வேதத்தை முழுமனதுடன் தினமும் படித்து கீழ்கண்ட ஆசீர்வாதங்களை பெற்று பயன்பெறுங்கள்.


1)   பாவங்கள் நீங்கி சந்தோஷமாயிருக்கிறார்கள்

2)   சாபங்கள் நீங்கி ஆசீர்வதிக்கப்பட்டு உயர்த்தப்படுகிறார்கள்

3)   கோபங்கள் நீங்கி சாந்தமாகி பூமியை சுதந்தரிக்கிறார்கள்

4)   வியாதிகள் நீங்கி சுகதேகியாயிருக்கிறார்கள்

5)   பெலவீனம் நீங்கி பெலனடைகிறார்கள்

6)   வறுமைகள் நீங்கி செழிப்படைகிறார்கள்

7)   தோல்விகள் நீங்கி மகா வெற்றியடைகிறார்கள்

8)   சண்டைகள் நீங்கி சமாதானமடைகிறார்கள்

9)   பெருமைகள் நீங்கி தாழ்மையும் உயர்வும் பெறுகிறார்கள்

10) கஷ்டங்கள் நீங்கி கர்த்தரோடு வாழ்கிறார்கள்

11) அவமானம் நீங்கி அன்புள்ளவர்களாயிருக்கிறார்கள்

12) கனவீனம் நீங்கி கனம் அடைகிறார்கள்

13) வேதனைகள் நீங்கி ஆவியின் கனி கொடுக்கிறார்கள்

14) சோதனைகள் நீங்கி சாதனைகள் செய்கிறார்கள்

15) சோர்வுகள் நீங்கி சுறு சுறுப்புடன் வேலை செய்கிறார்கள்

16) அசதிகள் நீங்கி அனலுள்ளவர்களாயிருக்கிறார்கள்

17) அக்கிரமங்கள் நீங்கி அக்னிஜுவாலையாகிறார்கள்

18) அசுத்த ஆவிகள் நீங்கி அசுத்த ஆவிகளை துரத்துகிறார்கள்

19) அவிசுவாசம் நீங்கி விசுவாசித்து எல்லாம் பெறுகிறார்கள்

20) அருவருப்புக்கள் நீங்கி அலங்காரமாயிருக்கிறார்கள்

21) கவலைகள் நீங்கி உலகத்தை ஜெயிக்கிறார்கள்

22) மீறுதல்கள் நீங்கி வேதத்தின்படி நடந்து காரிய சித்தியடைகிறார்கள்

23) கொந்தளிப்பு நீங்கி பிச்சை கொடுத்து விருத்தியடைகிறார்கள்

24) மப்பும் மந்தாரமும் நீங்கி எழுப்புதலடைகிறார்கள்

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

1 comments:

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.