Sunday, 2 September 2012

0 நேபுகாத்நேச்சாரின் கனவு - பகுதி - 2

நேபுப்பொல்சார்
நேபுகாத் நேச்சார்   (கி. மு 605- 562)
நேபுகாத் நேச்சாரின் தந்தை நேபுப்பொல்சார் புதிய பாபிலோனிய சாம்ராச்சியத்தை ஸ்தாபித்தான். தந்தை அரசாளும் சமயத்திலேயே
நேபுகாத் நேச்சார் சிறந்த படைத்தளபதியாகவும், பட்டத்து இளவரசனாகவும் திகழ்ந்தான். "எகிப்தின் பார்வோன் நேகோவை" தோற்கடித்து அவனுடைய இராச்சியத்தை கைப்பற்றினான். நேபுகாத் நேச்சார் ஏறக்குறைய கி. மு 630 ஆண்டு பிறந்தார், கி. மு 562 ஆண்டு தனது 68 ஆவது வயதிலே மரித்தார்.

பாபிலோனில் அவனைப்போல இராஜா அவனுக்கு முன்பு இருந்ததுமில்லை பின்பு வந்ததுமில்லை. தனது தந்தையின் மரணத்திற்கு பின்னர் இராச்சிய பாரத்தை கி.மு 605 ஆண்டு ஏற்றுக்கொண்டான். நேபுகாத் நேச்சாரின் காலத்தில் பாபிலோன் உலகத்திலே பெரிய நகரமாக விளங்கியது. பாரிய விஸ்தீரணமான இடத்திலே பாபிலோனை கட்டினான்.

வேதாகமத்தில்: எரேமியா 27: 6
தேவனாகிய கர்த்தர் பாபிலோனிய மன்னனாகிய நேபுகாத் நேச்சாரை தனது ஊழியக்காரன் என்று ஆழைத்தார்.
இப்பொழுதும் நான் இந்தத் தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்.
அது மட்டுமல்ல, அவனுடைய காலத்திலிருந்து கிறிஸ்துவின் 2 வருகை மட்டுமுள்ள சம்பவங்களையும் சொப்பனத்திலே தேவனாகிய கர்த்தர் தீர்க்கதரிசனமாக தெரிவித்தார்.
  
இவனைக்குறித்து வேதத்தில் பல தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தெரிந்தவாறு, நேபுகாத் நேச்சார் யூதாவின் இராஜாவாகிய யோயாக்கீமை முறியடித்து அவனைக்கப்பம் கட்டும்படி செய்தான். அவன் தந்தை மரித்துப்போன செய்தியை கேள்விப்பட்ட போது, அவன் பாபிலோன் சென்று தன்னுடைய ஆளுகையை ஸ்திரப்படுத்தினான். மூன்று வருடங்களின் பின்பு யோயாக்கீம் கலகம் செய்ததினால் அவன் மீது படையெடுத்து, அவனைக்கொன்று போட்டு அவனுடைய மகனாகிய யோயாக்கீனை இராஜாவாக்கினான். இவனும், தன்னுடைய இராச்சியபாரத்தின் மூன்றாவது மாதம் கலகம் செய்தபடியால், அவனையும் அநேகம் யூதர்களையும் சிறைப்பிடித்துக்கொண்டு பாபிலோன் சென்றான். அவனுக்கு பதிலாக அவன் சிறிய தகப்பன் சிதேக்கியாவை அரசனாக்கினான். ஒன்பது வருடங்களின் பின் சிதேக்கியாவும் கலகம் செய்ததினால், நேபுகாத் நேச்சார் எருசலேமை இரண்டு வருடங்களாக முற்றுகை போட்டு, அதனைப்பிடித்து முற்றுமாக அழித்துப்போட்டான். சிதேக்கியாவின் குமாரர் அனைவரும், தேசத்தின் பிரபுக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். சிதேக்கியாவின் கண்களைப்பிடுங்கி குருடாக்கி அவனை மரிக்கும் வரையில் பாபிலோனிலேயே வைத்திருந்தான். சாலமோனினால் கட்டப்பட்ட எருசலேம் தேவாலயம் நேபுகாத் நேச்சரினால் அழிக்கப்பட்டது. ( நேபுகாத் நேச்சரின் படைத்தளபதியினால்) நேபுகாத் நேச்சார் தன்னுடைய இராச்சியத்தை அதிகமாய் விஸ்தரித்து பேர் பெற்றான். சில காலம் பைத்தியமாக காட்டிலே சஞ்சரித்தான். அவனுக்கு புத்தி திரும்பிய போது பரலோக தேவனைப்புகழ்ந்தான்.

இவனைப்பற்றி 2இராஜாக்கள், எரேமியா, 1நாளாகமம், எசேக்கியல், தானியேல் புஸ்தகங்களில் வாசிக்கலாம். இவனுடைய அரண்மனையில் தானியேல் ஊழியம் செய்தான்.

நன்றி:http://www.tamilchrist.ch/

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.