Monday 18 May 2015

0 பீம்

சேக்கல்

“பீம்” பைபிள் சரித்திரத்தின் மெய்மையை நிரூபிக்கிறது
“பீம்” என்ற வார்த்தை பைபிளில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. சவுல் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர் தங்களுடைய உலோக ஆயுதங்களைத் தீட்டுவதற்கு பெலிஸ்த கொல்லர்களிடம் போக வேண்டியிருந்தது. “தீட்டுவதற்கான கூலி, கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் எட்டு கிராம்
அளவுள்ள நாணயம் [பீம்ஆகும்” என்பதாகப் பைபிள் குறிப்பிடுகிறது.—⁠1 சாமுவேல் 13:21, பொது மொழிபெயர்ப்புஅடிக்குறிப்பு.

பீம் என்றால் என்ன? அது என்னவென்பது பொ.ச. 1907 வரை ஒரு புதிராக இருந்தது; அவ்வருடத்தில்தான் முதன்முதலாக பீம் எடைக்கல் பூர்வ பட்டணமாகிய கேசேரிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. “பீம்” என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பது ஆரம்ப கால பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கடினமாக இருந்தது. உதாரணமாக,தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு 1 சாமுவேல் 13:21-ஐ இவ்விதமாக மொழிபெயர்க்கிறது: “கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.”

பீம் என்பது சராசரியாக 7.82 கிராமுக்குச் சமமான எடை அல்லது எபிரெயர்களின் அடிப்படை அலகான ஒரு சேக்கலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்குச் சமமான எடை என இன்றைய அறிஞர்கள் அறிந்திருக்கின்றனர். இஸ்ரவேலரின் ஆயுதங்களை கூர்மையாக்குவதற்கு பீம் அளவு வெள்ளித் துண்டுகளையே பெலிஸ்தர் கூலியாக வசூலித்தனர். யூத ராஜ்யமும் அதன் தலைநகரான எருசலேமும் பொ.ச.மு. 607-⁠ல் வீழ்ச்சியடைந்த பிறகு சேக்கல் எடை புழக்கத்திலிருந்து மறைந்தது. எபிரெய வேதாகமத்தின் சரித்திர மெய்மைக்கு பீம் எவ்வாறு சான்றளிக்கிறது?

ஒன்று சாமுவேல் புத்தகம் உட்பட எபிரெய வேதாகம புத்தகங்கள் எல்லாம் கிரேக்க-ரோம காலப்பகுதியில்தான், அதாவது பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து முதல் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில்தான் எழுதப்பட்டதாக சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள். ஆகையால், “இந்தப் புத்தகங்கள் எல்லாம் . . . ‘சரித்திர ஆதாரமற்றவை,’ இவற்றிலிருந்து ‘பைபிள் குறிப்பிடும் இஸ்ரவேலைப்’ பற்றியோ, ‘பூர்வ இஸ்ரவேலை’ பற்றியோ உண்மையான சரித்திரப்பூர்வ தகவல்களைப் பெற முடியாது. ஏனெனில் இவை எல்லாம் யூத, கிறிஸ்தவ இலக்கிய கண்டுபிடிப்புகள் மட்டுமே” என்கிறார்கள்.

ஆனால், 1 சாமுவேல் 13:21-⁠ல் சொல்லப்பட்டுள்ள பீம் அளவை பற்றி, மத்திய கிழக்கு தொல்பொருள் மற்றும் மானிடவியல் பேராசிரியரான வில்லியம் ஜி. டேவர் இவ்வாறு கூறுகிறார்: “இந்த எடை அளவுகள் கிரேக்க-ரோம காலப்பகுதியில் வாழ்ந்த எழுத்தாளர்களின் ‘கற்பனையில் உருவாகியிருக்க’ முடியாது. ஏனெனில் அந்தக் காலப்பகுதிக்குள் இந்த எடைகள் எல்லாம் மறக்கப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருந்தன. உண்மையில், 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பீம் என்ற எபிரெய வார்த்தை பொறிக்கப்பட்ட எடைகள் அகழ்வாராய்ச்சியில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படும் வரை . . . பைபிள் வசனத்தின் இச்சிறு பகுதி . . . புரியாப் புதிராகவே இருந்தது. பைபிள் கதைகள் எல்லாம் கிரேக்க-ரோம காலப்பகுதியின் ‘இலக்கிய கண்டுபிடிப்புகளாக’ இருந்தால், இந்தக் குறிப்பிட்ட கதை எபிரெய பைபிளில் எவ்வாறு இடம்பெற்றது? பீம் பற்றிய வசனம் ‘ஒரு சிறு நுட்பவிவரம் மட்டுமே’ என ஒருவர் வாதிடலாம். அது உண்மைதான். ஆனால் சிறு நுட்பவிவரங்களின் தொகுப்புதான் ‘சரித்திரம் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே.’”

பீம் எடை அளவு, ஒரு சேக்கலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமம்




thanks:woljw.org/

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.