எழுதவேண்டியதன் கட்டாயம்
அண்மை நாட்களில் நான் பல பொய்யான தீர்கதரிசிகளையும், அவர்கள் சொல்லும் வேதாகமத்திற்கு புறம்பான தீர்க்கதரிசனங்களையும் நேரிலும்,Tv / Radioலும் பார்க்கவும், கேட்கவும் நேர்ந்தது. இது எனக்குள் வெறுப்பையும், கசப்பையும், ஏற்படுத்தியது.
இவர்களுடைய தவறான போதனைகளையும், தீர்க்கதரிசனங்களையும் நம்பும் மனிதர்களை பார்த்தபோது மிகவும் கவலையும் ஆத்திரமும் வந்தது.அந்த சமயம் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன:
- மக்களுக்கு வேதாகமத்தைப்பற்றிய அறிவே இல்லையா?
- அல்லது ஜனங்கள் வேதமே வாசிப்பது இல்லையா?
- அல்லது பொய்க்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியதபடிக்கு அனேகருடைய கண்கள் மூடியிருக்கின்றதா?
பிற்பாடு நான் வேதாகமத்தையும் பல ஆவிக்குரிய மனிதர்கள் எழுதிய புஸ்தகங்களையும் வாசிக்கும் போது அதற்கான விடையும் கிடைத்தது.
இயேசு கிறிஸ்துவின் போதனையைவிட அனேகருக்கு பொய்பேசுகின்ற தீர்க்கதரிசிகளைத்தான் பிடிக்கும் என்பதனை புரிந்து கொண்டேன்.
இயேசு சொன்னார்:
யோவான் 8: 43 - 44 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

இன்று அனேகர் வேதாகமத்தை ஆராய்ந்து வாசிப்பதில்லை. வேதாகமம் தெரியாமல் ஒருவன் சொல்லும் தீர்க்கதரிசனம் வேதாகமத்துக்கு புறம்பானதா? இல்லையா? என்று எப்படி அறிந்து கொள்ள முடியும் ?????
வேதாகமத்தை வாசிக்க வேண்டும்
ஏசாயா 8: 20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
மக்களே ஆவியை சோதித்தறியுங்கள்
1 யோவான் 4: 1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
ஜனங்களை தேவன் முன்னெச்சரிக்கை செய்கின்றார்! தேவன் எச்சரிக்கை செய்தும் அறிவில்லாமல் அழிந்து போக வேண்டாம் !!!
மக்களே எச்சரிக்கையாயிருங்கள்!
மத்தேயு 7: 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
1 தீமோத்தேயு 4: 1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
2 பேதுரு 1: 1 - 2 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
அப்போஸ்தலர் 20: 29 - 30 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
தேவன் பொய் தீர்க்கதரிசிகளை எச்சரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கான நியாயத்தீர்ப்பையும் அறிவித்திருக்கின்றார். இந்த நியாயத்தீர்ப்பை அறிந்தென்னவோ அவர்கள் இன்னமும் அக்கிரமத்துக்கு மேல் அக்கிரமம் செய்கின்றார்கள்! <அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும்>
எச்சரிக்கை! பொய் தீர்க்கதரிசிகளுக்கு!
மத்தேயு 7: 22 - 23 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
உபாகமம் 18: 20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
வெளி 18, 19 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

எசேக்கியேல் 13
1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2. மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
3. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
4. இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
5. நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.
6. கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
7. நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
8. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9. அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகியஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
10. சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;

எரேமியா 23
9. தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.

16. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
11. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17. அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர்சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
21. அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
25. சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.
31. இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்குநான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26. எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.
26. எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
புத்தகத்தில் அடங்கியுள்ள சில விடயங்கள்
இயேசுவும் மரியாளும் கணவன் மனைவி, அவர்களுக்கு குழந்தை இருந்தது. இயேசுவின் வம்சாவழியினர் இப்போதும் பிரான்ஸ்-இல் வாழ்கின்றனர். இப்படி ...பல
டன் பிரவுன் டா வின் சி கோட் புத்தகத்தை எழுதுவதற்கு உதவிய பல புத்தகங்களில் சில:
The Holy Blood and the Holy Grail (1982), The Messianic legacy (1983), The Templer Revalation (1997), Goddes in the Gospel ( 1988) ,Mary Magdalane and the Holy Grail, Beyond god the Father (1973),The Methaethics of Radical Feminism (1978).

டா வின்சி கோட்: லியானார்டோ டா வின்சி வரைந்த இராப்போஜன படத்தில் இயேசுவிற்கு அருகே இருப்பது யோவான் இல்லை, மகதலேனா மரியாள் என்று.
பதில்:லியானார்டோ டா வின்சி வாழ்ந்த காலம்; கி.பி 1452 - 1519. லியானார்டோ டா வின்சிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தெரியாது. கிறிஸ்துவின் சீஷர்கள் எப்படி இருந்தார்கள், அவர்கள் எப்படிபட்ட உடை உடுத்திருந்தார்கள் என்றும் தெரியாது. யோவான் வயதிலே மிகவும் இளமையாக இருந்தபடியால் டாவின்சி Nயுhவானை வரையும்போது "தாடி, மீசை" இல்லாமல் வரைந்தார். லியானார்டோ டாவின்சியின் வழக்கம் அது, இளமையானவர்கள் என்று அடையாளம் காட்டுவதற்காக மீசை, தாடி இல்லாமல் நீண்ட தலைமுடியுடன,; மென்மையான முகமாக வரைவது ...

யோவானை மட்டுமல்ல, யோவன் ஸ்நானகனை கூட டாவின்சி மீசை, தாடி இல்லாமல் நீண்ட முடியுடன் தான் வரைந்திருக்கின்றார். ஆதாரம் இந்த படங்களை பாருங்கள்.
இராப்போஜனம்(படம்) | யோவான்(படம்) | யோவான் ஸ்நானகம்(படம்) |
அந்த படத்தில் இருப்பது மகதலேனா மரியாளகவே இருக்கட்டும், அப்படி என்றால் அந்தப்படத்தில் யோவான் எங்கே? மற்ற சீஷர்கள் இருக்கும் போது யோவான் எங்கே போய்விட்டார்?
டா வின்சி கோட்: இந்த பாறையின் மேல் என் வீட்டை கட்டுவேன் என்று இயேசு கிறிஸ்து பேதுருவை குறித்து அல்ல மகதலேனா மரியாளை குறித்தே சொன்னார்: (p. 248) இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையின் எதிர்காலம் மகதலேனா மரியாளின் கைகளில் தான் இருக்கின்றது என்று எண்ணினார்.(p. 248)
பதில்: இயேசு கிறிஸ்து பேதுருவுக்கு அந்த வசனத்தை சொல்லும் பொழுது " இந்த பாறை " என்று சொன்னார்.. அது பேதுருவை குறித்து அல்ல, மாறாக தம்மைக்குறித்தே அப்படி சொன்னார். (மத்தேயு 16: 18) அவரே சபைக்கு மூலைக்கல்லாக இருக்கின்றார். (எபேசியர் 2: 20) பேதுருவோ, மகதலேனா மரியாளோ அல்ல. 1பேதுரு 2: 7ல் பேதுருவே அதற்கு சாட்சி கொடுக்கின்றார்.
டா வின்சி கோட்: 80 க்கும் மேற்பட்ட சுவிசேஷங்கள் இருந்தன, இப்போது நான்கு சுவிசேஷங்கள் மட்டும் தான் இருக்கின்றது. (மத்மேயு மாற்கு, லூக்கா, யோவான்)
பதில்: உண்மையில் இது ஒரு மடமைத்தனமான கருத்து, கனோனால் தெரிவு செய்யப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) தவிர்த்து, இன்னும் வேறு 12 சுவிசேஷங்கள் தான் அந்த நேரத்தில் உலாவி வந்தது. ஆனால் அவைகள் சரியாக தெய்வீக வழிகாட்டுதலை அறிவிக்கவில்லை. அவைகளுடன் Gnosticசுவிசேஷமும் பிற்காலங்களில் வந்தது. ஆனால் அவைகள் எழுதப்பட்ட காலங்கள் மிகவும் பிந்தியதால் அவைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆதி சபை காலத்தில் கிறிஸ்தவர்களின் மத்திய இடங்களாக எருசலேம், கொரிந்து, அலெக்ஸாந்திரியா மற்றும் ரோமாபுரி காணப்பட்டது. இங்கே அவர்கள் இந்த நான்கு சுவிNசுஷத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.
கி.பி 95- 170க்கும் முன்பு வாழ்ந்த கிறிஸ்தவ தலைவர்கள் இந்த நான்கு சுவிNசுஷங்களையும் தான் பாவித்து வந்தார்கள்.
க்ளெமென்ட்(Clement): ரோமாபுரியிலிருந்த சபையில் கி.பி 95 அளவில் மூப்பராக இருந்தவர், இவர் கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நிருபங்களிலிருந்து வார்த்தைகளை எடுத்து எழுதினார்.
பப்பியாஸ்(Papias): இவர் ஒரு பிஷப். இவர் எழுதிய புத்தகம் நுஒpழளவைழைn ழக ழுசயஉடநள ழக வாந டுழசன . இவர் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஜஸ்ரின் மார்டிர் (Justin Martyr): இவர் கி.பி 140 வேதாகமத்தில் 4 சுவிசேஷங்களைப்பற்றியும் எழுதினார்.
பொலிகார்ப் (Polycarp): இவர் அப்போஸ்தலர் யோவானின் சீஷன். கி.பி 150ல் வாழ்ந்தவர். இவர் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷங்களை இயேசுவின் வசனங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இரேனியுஸ் (Ireneus): இவர் பொலிகார்ப்பின் சீடர். கி.பி 170ல் இவர் மேற்கோள் காட்டி புதியேற்பாட்டின் 23 புத்தகங்களை எழுதினார். இவர் தவறவிடப்பட்ட புத்தகங்கள் பிலேமோன், யாக்கோபு, 2 பேதுரு, 3 யோவான்.
பப்பிரஸ் 45: கி.பி 200ஐ சார்ந்தது. 4 சுவிசேஷங்களையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
The Muratorian Fragment: கி.பி 175ஐ சார்ந்தது. இதிலும் 23 சுவிசேஷங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
டா வின்சி கோட்: சவக்கடல் சுருள்கள் 1950ல் கண்டுபிடிக்கப்பட்டது.
பதில்:சவக்கடல் சுருள்கள் 1947ம் ஆண்டுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிற்பாடு ஆய்வாளர்கள் தொடர்ந்து அங்கே அகழ்வாராய்ச்சி செய்தார்கள்.
பதில்:சவக்கடல் சுருள்கள் 1947ம் ஆண்டுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிற்பாடு ஆய்வாளர்கள் தொடர்ந்து அங்கே அகழ்வாராய்ச்சி செய்தார்கள்.
டா வினசி கோட்: கி.பி 1099ல் பிரான்ஸ் அரசன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இரகசிய சங்கமான "Priory of Sion". அங்கே இயேசுவின் வம்சம் பற்றிய தகவல்களையும், மகதலேனாவைப்பற்றிய தகவல்களையும் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டது.
பதில்:கி.பி 1956ம் ஆண்டு தான் "Priory of Sion" பிரான்ஸ் நாட்டை சார்ந்த Pierre Plantatard என்பரவால் சவிஸில் உள்ள ஜெனிவாவுக்கு அருகே ஆரம்பிக்கப்பட்டது. சியோன் என்பது ஜெனிவாவில் உள்ள சிறு மலை. எருசலேமில் உள்ள சீயோனை குறிக்கவில்லை.

டாவின்சி கோட்: சாலமோன் தேவாலயத்தில் கட்டப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் வந்து இறங்கிய ஷெக்கினா என்பது யெகோவா தேவனுக்கு இணையான ஒரு பெண் சக்தி.
பதில்: இது உண்மையில் மடமைத்தனம், ஷெக்கினா என்பது யெகோவா தேவனுடைய மகிமை. வேதம் சொல்கின்றது, ஒரே ஒரு கடவுள் தான். வேறு கடவுள்கள் இல்லை என்று.
பதில்: இது உண்மையில் மடமைத்தனம், ஷெக்கினா என்பது யெகோவா தேவனுடைய மகிமை. வேதம் சொல்கின்றது, ஒரே ஒரு கடவுள் தான். வேறு கடவுள்கள் இல்லை என்று.
புத்தகத்திற்கும் வேதாகமத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
டன் பிரவுன் எழுதிய புத்தகத்தில் "ஆதாரம் அல்லது உண்மை" என்று அவரால் குறிப்பிடப்பட்ட அவர் எழுதிய தவறுகளினுள் ஒரு சில இங்கே.
டாவின்சி கோட் | வேதாகமம் |
இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதனாக, அல்லது மாபெரும் தீர்க்கதரிசியாகத்தான் ஆதி அப்போஸ்தலர்கள் காலத்தில் கிறிஸ்தவர்கள் நம்பினார்கள்.கி.பி 325ல் நைசீயாவில் நடந்த மாநாட்டில் தான் தான் இயேசு கடவுளின் தன்மை உடையவரென்;று பிரகடனப்படுத்தினார்கள். | இயேசு கிறிஸ்து 7 தடவைகள் புதியேற்பாட்டில் தேவன் அல்லது கடவுள் (வாநழள) என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றார். கர்த்தர்(மலசழள) என்று அநேகம் தடவவைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றார். எந்தவொரு சரித்திர ஆசிரியரும் புதியேற்பாட்டின் காலத்திற்குப்பிறகுதான் நைசீயா சபை காலப்பகுதி என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.
|
டாவின்சி கோட் | சரித்திரம் |
இன்று நாம் வைத்திருக்கும் வேதாகமம் கொன்ஸ்டன்டைன் மன்னனால் ஒன்றாக சேர்க்கப்படுமுன் சீர்பார்க்கப்பட்டது. (p. 231) | வேதாகமம் கொன்ஸ்டன்டைன் மன்னன் காலத்;தில் ஒழுங்கமைக்கப்படவில்லை. (கி.பி 337 கொன்ஸ்டன்டைன் மரணம்) பழையேற்பாடு இயேசு காலத்திலேயே இருந்தது. புதியேற்பாடு கி.பி 90- 100 களிலேயே ஒன்றாக வந்துவிட்டது. |
டாவின்சி கோட் | சரித்திரம் |
ஏதாவது சுவிசேஷத்தில்; இயேசு கிறிஸ்துவை உலகவாழ்க்கையில் பற்றுள்ளவராக (மனுஷீக தன்மையுடையவராக) சித்தரிக்கப்பட்டிருந்தால் அவ்விடயங்கள் வேதாகமத்திலிருந்து நீக்கிவிடப்பட்டது (p. 244) | புதியேற்பாடு இயேசுகிறிஸ்துவின் மனுஷீக தன்மையை எங்களுக்கு எடுத்துக்காட்டுகின்றது. (அவர் தாகமாக இருந்தார், பசியாய் இருந்தார், களைப்பாக இருந்தார், கண்ணீர் வடித்தார்... அவர் மரித்ததர், அன்பாக இருந்தார்) |
டாவின்சி கோட் | சரித்திரம் |
சவக்கடல் (கும்ரான்) சுருள்கள் மற்றும் நாக் ஹம்மடி சுருள்களும் தான் கிறிஸ்தவர்களின் ஆதி குறிப்புகள் (பதிவுகள்) | சவக்கடல் சுருள்கள் கி.மு 250 - கி.பி 100 களில் எழுதப்பட்டுள்ளது என்று அதன் காலம் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுருள்களில் கிறிஸ்துவின் போதனைகளோ, அல்லது சுவிசேஷமோ இல்லை.
நாக் ஹம்மடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுவிசேஷங்கள் அனைத்தும் கி.பி 150 - 300 ஆண்டுகளை சார்ந்தவை. புதியேற்பாடு முழுவதும் இவைகளுக்கு முற்பட்ட காலத்திலேயே எழுதப்படவிட்டது.
புழெளவiஉ: என்பது கி.பி 1- 2ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு சமயப்பிரிவு. இவர்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுடன் வேற்று மத போதனைகளையும் கைக்கொண்டார்கள், இவர்கள் எழுதிய புத்தங்கள் தான் நாக் ஹம்மடியில் கண்டுபிடிக்கப்பட்ட Gnostic Gospel
|
டாவின்சி கோட் | சரித்திரம் |
கொன்ஸ்டன்டைன் மன்னனால் புதிய வேதாகமம் ஒன்றை உருவாக்கும்படி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் வேதாகமத்திலிருந்து இயேசுவின் மனுஷீக தன்மைகளை நீக்கி கடவுளின் தன்மையுடையவராக சித்தரித்தார்கள். ஆதியில் எழுதப்பட்ட சுவிசேஷங்கள் மக்களிடத்திலிருந்து பறிக்கப்பட்டு தீயில் எரிக்கப்பட்டது.
(p. 234)
| முதலாவது: கொன்ஸ்டன்டைன் மன்னனால் புதிய வேதாகமம் உருவாக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட வேதாகம பகுதிகளிலிருந்து 50 பிரதிகள் உருவாக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இரண்டாவது: யாராவது வேதாகமத்தை மாற்றி அலங்கரித்து எழுதியதாக சரித்திரம் இல்லை.
மூன்றாவது: எந்தவொரு சுவிசேஷமும் கொன்ஸ்டன்டைன் மன்னனால் எரிக்கப்படவில்லை. மாறாக ஆரியுஸ் என்பவர் எழுதிய ஆக்கங்கள் தான் எரிக்கப்பட்டது, அவைகள் சுவிசேஷம் அல்ல.
நான்காவது: மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் இவைகளுக்கு முன்பு எந்தவொரு சுவிசேஷமும் எழுதப்படவில்லை.
இறுதியாக: வேதாகமம் இயேசுகிறிஸ்துவின் மனுஷீக தன்மைகளை எங்களுக்கு எடுத்துக்காட்டுகின்றது. அவர் 100% மனிதனாகவும் 100% கடவுளாகவும் இருந்தார் என்பதை தெளிவாக விளக்குகின்றது..
|
டாவின்சி கோட் | சரித்திரம் |
லியானார்டோ டா வின்சி வரைந்த மொன-லிசா ஓவியம் ஒரு பெண் தெய்வம். மொனலிசா என்கின்ற பெயர் இரண்டு எகிப்திய கடவுள்களுடைய பெயர்களிலிருந்து உருவாகியது. அமோன்: (ஆண் தெய்வம்) இசிஸ்: (பெண் தெய்வம்) எகிப்திய புரதான காலத்து எழுத்துக்களில் லிசா என்று இசிஸ் அழைக்கப்பட்டிருக்கிறது. மொனாலிசா எனும் பெயருடைய அர்த்தம் என்னவென்றால்: "எழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட" தெய்வீகமான ஆண், பெண் பெயர்கள். | லியனார்டோ டா வின்சி தன்னுடைய படங்களுக்கு எந்தவொரு தலையங்கமும் கொடுக்கவில்லை. ஜோர்ஜியோ வசாரி (georgio vasari "1550") எனும் எழுத்தாளர் தான் தன்னுடைய புத்தகத்தில் மொன லிசா என்று படத்திற்கு பெயர் சூட்டினார். ஆரம்பத்தில் Monna Lisa என்று தான் இருந்தது. பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால்MonaLisa என்று அழைக்கப்பட்டது. அதனுடைய அர்த்தம்: சீமாட்டி லிசா (Madame Lisa) |
டாவின்சி கோட் | சரித்திரம் |
மிகவும் சங்கடமான விடயம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவும் மகதலேனா மரியாளும் திருமணம் செய்ததாக டன் பிரவுன் கூறுவது.
(p. 244)
| எந்தவொரு gnostic சுவிசேஷமும்; இயேசு கிறிஸ்து மகதலேனா மரியாளை திருமணம் செய்ததாக சொல்லவில்லை. டன் பிரவுன,; தன்னுடைய கதைப்புத்தகத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்ட வசனம். பிலிப்பு சுவிசேஷத்தில் உள்ள companion எனும் வார்த்தை..
|
டாவின்சி கோட் | சரித்திரம் |
YHWH எனும் பரிசுத்தமான கடவுளுடைய பெயர்JEHOVA எனும் சொல்லில் இருந்து உருவாகியது.
(p. 309)
| YHWH எனும் பெயர் Jehovah எனும் பெயரிலிருந்து தோன்றவில்லை. அதற்கு மாறாக Jehovah எனும் சொல் தான் YHWH எனும் சொல்லில் இருந்து தோன்றியது.
Jehovah எனும் பெயர் கி.பி 1278ல்; ஸ்பானிய துறவி ரேய்மொன்ட் மான்டினி என்பவர் எபிரேயு வேதாகமத்திலிருந்து லத்தீன் மொழியில் சில பகுதிகளை மொழி பெயர்த்ததர். அவர்தான் YHWH எனும் பொயரைIéhouah என்று மொழிபெயர்த்தார். கி.பி 1518ல் Petrus Galatinus என்பவர் தன்னுடைய புஸ்தகத்திலே Jehovaஎன்று எழுதினார். கி.பி 1530 அளவில் வில்லியம் ரென்டேல் என்பவர் மோசேயின்; 5 ஆகமங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்பொழுது Jehova என்று மொழிபெயர்த்ததர்.
|
டன் பிரவுன் எழுதியவைகள் எவ்வளவு பொய்கள் நிறைந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், வேதம் சொல்லுகின்றது " பிசாசு பொய்களின் தந்தை என்று. டன் பிரவுன் எத்தனை பொய்களை இணைத்து எழுதினாலும் வேதம் உண்மை. அது சத்தியம். வேதம் சொல்லுகின்றது, சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று.
நன்றி : http://voiceofway.yolasite.com/
0 comments:
Post a Comment