Sunday 3 August 2014

0 எந்த கடவுளும் வேண்டாம் என்று சொல்பவரா நீங்கள்????

கடவுள்

எந்த இடத்தில் ஒரு மேன்மையான காரியம் இருக்கிறதோ அங்கு கூட்டம் நிச்சயம் அதிகமாக இருக்கும். தேனிருக்கும் பூவை சுற்றிதான்  வண்டுகள் வட்டமிடும், இனிப்பு இருக்கும் இடத்துக்கு
எறும்புகள் வந்து குவியும். இலவசமாக பொருட்கள் கிடைக்கும் கடையில் கூட்டம் அலை மோதும்!

அதுபோல் கடவுளை பற்றிய கருத்துக்கள் மேன்மையானதும்  அது நம்மை நித்தியத்துக்கு கொண்டு சேர்ப்பதுமாக இருப்பதால்  அன்றிலிருந்து இன்றுவரை ஆன்மீக காரியங்களுக்கு அதிக மகத்துவம் இருந்து வருகிறது, மற்றும்  ஆன்மீக ஸ்தலங்களில் கூட்டம் அலை மோதுகிறது என்பதே உண்மைமனிதனுக்கு நித்திய மன அமைதியை தர முடிந்தவர் கடவுள் ஒருவரே

கடவுளின் மகத்துவத்தை மனிதன் அறிந்துவிடாதபடிக்கு போராடி அவனை நித்திய அழிவுக்கு நேராக இழுத்து செல்லும்  எதிர் சக்திகளும் உலகில் இருப்பதால் மனிதர்களுக்குள்  வேறுபாட்டையும் சண்டைகளையும்  உண்டாக்கும் ஒரு காரணியாக ஆன்மீகத்தை தீயசக்திகள் மாற்றி அதன்மேல் வெறுப்பை ஏற்ப்படுத்தும் ஒரு நிலைக்கு கொண்டுவந்துள்ளன! மேலும்  எந்த ஒரு மதத்திலும் மனித  அறிவுக்கு முழுமையான எட்டும்  கருத்துக்கள் இல்லாத காரணத்தாலும் பாவம்
செய்பவனை கடுமையாக  தண்டிப்பவராகவே பல மதங்களை கடவுளை காட்டுவதாலும்   பலர் கடவுளே வேண்டாம் நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல நான் ஒரு சுதந்திரன் என்று தங்களை கூறிக்கொள்ள விரும்புகிறார்கள்.

ஆனால் அவ்வாறு யாரும் விலகிவிட முடியாது!

காரணம்.

இந்த இந்திய நாட்டில் பிறக்கும் நாம் விரும்பினாலும் விருபாவிட்டாலும் ஆட்டமேடிக்காக இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆகவேண்டும்அல்லது அட்லீஸ்ட் தாய் தகப்பனின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆகவேண்டும். அதாவது நாம் பிறக்கும்போதே ஏதாவது ஒரு வரையறைக்குள் கட்டுப்பட்டே பிறக்கிறோம்.

அதுபோல்  சூரியனுக்கு கீழேயுள்ள இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் இறைவனின் சட்ட திட்டங்களுக்கு நியமனங்களுக்குள் தானாகவே வந்துவிடுகின்றனர்.

பகல் இரவு பருவ  கால மாற்றம்   போன்ற நியமணங்கள்  எப்படி எல்லோர் மேலும் தானாகவே விழுகிறதோ அதுபோல் கடவுளின் நியமனங்களும் ஒவ்வொரு மனிதன் மேலும் தானாகவே விழுகிறது. அவரின்  நியமனத்தில் இருந்து எந்த  மனிதனும்  எங்கும் விலகி ஓடவுவே  முடியாது! அது எனக்கு வேண்டாம் என்று நாம் கூறவும் முடியாது! ஏனெனோல் நமது சுவாசமே நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் ஏதோ ஒரு நியமனத்தின் அடிப்படையில்  நடக்கிறது.

உலகத்தில் எவ்வளவோ போடடிகள் பொறாமைகள் சண்டைகள் இருந்தாலும், மனிதனாக பிறந்த ஒருவர் தன் அறிவை பயன்படுத்தி எப்படியாவது போராடி தனது வாழ்வை வளமாக அமைத்து கொள்ள முயல்வதுபோலதன்னை உண்டாக்கிய கடவுள்  பற்றிய உண்மைகளை அறிவதிலும் அதிக  ஆர்வம் காட்டி  கடவுள் பற்றிய உண்மைகளையும் அறிந்துகொள்ள முயலவேண்டும்.

எரேமியா 29:13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

என்று கர்த்தர் உறுதியான  வாக்கு கொடுத்துள்ளார்ஏனோதானோ என்று இருக்காமல் முழுமனதோடும் முழு இருதயத்தோடும் கடவுளை தேட முயற்ச்சிக்க வேண்டும். உலகுக்கு தேவையான ஒரு வேலையை பெற நாம் எவ்வளவு முயற்ச்சிக்கிறோம்  அவ்வாறிருக்கையில் நித்தயத்துக்கும் நம்மை வழி நடத்தும் தேவனை தேட அதைவிட அதிக முயற்சி எடுத்து தேடுவது அவசியம் அல்லவா?  

லூக்கா 11:10  தேடுகிறவன் கண்டடைகிறான்;

என்று ஆண்டவராகிய இயேசுவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

எனவே உலகத்தில் வாழ்வதற்கு உணவை உடையை வேலையை தேடுவதைவிட ஒருபடி அதிக சிரத்தையுடன் தேவனை தேடுங்கள் நிச்சயம் அவரை கண்டடைவீர்கள்.

 I நாளாகமம் 28:9  ; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

மற்றபடி  எனக்கு எதுவும் வேண்டாம் என்று நீங்கள் விலகி எங்கும் செல்லவே முடியாது! தேவனை   விட்டு பிரிந்து அவரால் கைவிடப்பட்டவர்கள்  நித்திய அழிவையே சந்திக்க நேரிடும்.
 
 கலாத்தியர் 6:8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.


இன்று அநேகர் கடவுள் என்று யாரும் இல்லை என்ற நம்பிக்கையில் வாழ்வதோடு ஒருசிலர் முடிந்த அளவு இந்த உலகத்தில் இன்பத்தை அனுபவிக்கலாம் என்று கருதி "கடவுளே வேண்டாம்" என்று சொல்லி கண்ணை  மூடிக்கொள்கின்றனர். எவர் எப்படி இருந்தாலும், அவர் தேவனின் பார்வையில் இருந்தும் தேவனின் நியமணத்தில் இருந்து விலகிவிட முடியாது.

எரேமியா 23:24 யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்

தாயின் கர்ப்பத்தில் உன்னை வைத்தவரும் அவரே ஒரு தகப்பனை போல உன்னை சுமது வந்தவரும் அவரே! இன்றுவரை உன்னை காப்பவரும் அவரே!

நான் ஆண்டவரை அறியாத காலங்களில் ஒருமுறை மும்பையில் நான் செய்யாத தவறுக்காக என்னை அடிப்பதர்க்காக் ஒரு கூட்டமனுஷர்கள் என்னை அப்படியே தூக்கிண்டு தனியான இடத்துக்கு கொண்டுசொல்ல முயன்றனர் (மும்பையில் இப்படி தூக்கிக்கொண்டுபோய்  அடிப்பது சகஜம்) ஆனால் ரவி என்றொரு என்னோடு கொஞ்சம் பழக்கமுள்ள ஒரு மனுஷர் அவர்கள் என்னை தூக்கிபோன இடத்துக்கெல்லாம் பின்னால்வந்து என்மேல் அடிஎதுவும்விழாமல் பாதுகாத்தார். ஆண்டவர் அந்த மனுஷனை அனுப்பது இருந்தால் என்னுடய எத்தனை எலும்புகள் முறிந்திருக்கும் எனபதை இன்று நினைத்தலும் பயமாக இருக்கிறதுநான் ஆண்டவரை அறியாத போதுகூட அவர் என்னை அறிந்திருந்து என்னை பாதுகாத்த அந்த சம்பவத்தை  இன்று நினைத்தாலும் என் உள்ளம் எல்லாம் தேவனுக்கு  நன்றியால் பொங்குகிறது.

நான் அவரை அறியவில்லை ஆனால் அவரோ என்னை அறிந்திருந்தார்!    

யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்

அதுபோல் அன்பானவர்களே! நீங்கள் வேண்டுமானால் அவரை அறியாமல் இருக்கலாம்! ஆனால் அவர் உங்களை  அறிந்திருக்கிறார். நீங்கள் அவரை தடவியாவது கண்டுகொள்ள மாட்டீர்களா என்று எண்ணி ஒவ்வொரு நாளும் உங்களுக்காக ஏங்குகிறார். அவரை விட்டு விலகிபோனால் எங்குமே உங்களுக்கு வாழ்க்கை இல்லை என்பதை நான் வலியிறுத்தி கூற விரும்புகிறேன்!

இந்த உலகமும் அதன் கிரியைகளும் உங்களை படுகுழிக்குள் கொண்டுபோய் விட்டுவிடும்! பின்னர் நீங்கள் என்னதான் கதறினாலும் அங்கிருந்து மீள முடியாது!  

இன்றே  அவரை  அண்டிகொள்ளுங்கள்இயேசுவிடம் ஓடி வாருங்கள்!
   

சங்கீதம் 2:12  கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்   












நன்றி:lord.activeboard

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.