Saturday 2 August 2014

0 வேதமும் அறிவியலும் - அணுக்களால் உருவான உலகம்

உலகம்


எபிரெயர்-11:3  விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும்  இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.


இந்த வசனத்தை வாசித்த 

விஞ்ஞானிகள் 

'இது ஒரு முட்டாள்தனமான வசனம்' என்றனர். காணப்படுகிறவைகள் கண்களுக்கு 

காணப்படாதவைகளால் உண்டானதா?' ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இப்படி 

வேதாகமத்தை விஞ்ஞானிகள் குறை சொல்லி வந்தனர்.

நாம் கண்ணால் பார்க்கக் கூடிய பந்து, பேனா. கதிரை, மேசை எல்லாம் கண்களால் 

காணப்படாதவைகளால் உண்டானதென்று எப்படி சொல்ல முடியும்? என்று 

இவ்வசனத்தை வாசிக்கும் எல்லாரும் கேள்வி எழுப்பினார்கள். கிறிஸ்தவா்களும் 

பதில் கூற முடியாமல் திணறினார்கள். 

ஆனால் வேதாகமம் சொன்னது உண்மை என விஞ்ஞானம் சில நூற்றாண்டுகளுக்கு 

முன்பு ஒத்துக்கொண்டது. 

இன்று விஞ்ஞானம் கூறுவது- 'கண்ணால் காணும் எல்லாவற்றையுமே கடைசியாக 

அணுஅளவு வரை பிரிக்கலாம் அணுவை கூட புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் 

என்று பிரிக்கலாம். இவை கண்களுக்குத் தெரியாது. 

எண்ணிக்கைக்கு அடங்காத அணுக்கள் சேர்க்கப்பட்டே பொருட்கள் உண்டாகியுள்ளன. 

இப்படியாக கண்களால் காண முடியாத அணுக்களால் தான் காணக்கூடிய எல்லாம் 

உருவாகியுள்ளன. 

இதே உண்மையை வேதம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னபோது நம்ப 

முடியாதென்ற விஞ்ஞானிகள் இப்போது நம்புகிறார்கள். 

இப்போது சொல்லுங்கள் வேதாகமம் சாதாரண மனிதனால் எழுதப்பட்டிருக்குமா? 2000 

ஆண்டுகளுக்கு முன் இருந்த எந்த அறிவாளியான மனிதனும் புலப்படும் 

யாவும் புலப்படாத பொருட்களால்தான் உருவாகியுள்ளன“ என்று சொல்ல 

முடிந்திருக்குமா?

வேதமே சத்தியம். காலம் வரும் போது வேதம் சொன்னதெல்லாம் உண்மை என 

எல்லோரும் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.







நன்றி:hichristians

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.