புதிய ஏற்பாட்டில்
மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர்,
ஆசிரியர்கள்.
சங்கீத புத்தகத்தில்
ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.
சங்கீத புத்தகத்தில்
ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.
சங்கீத புத்தகத்தில்
ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய
தீர்க்கதரிசனங்களும் உள்ளன.
“சேலா
“ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள்
வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள
கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும்
பயன் படுத்தப்படுகிறது.
2 இராஜாக்கள் 19-ம்
அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே
சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும்
கொண்டுள்ளது.
இயேசு கிறிஸ்துவின்
உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மில
பழமையான மற்றும் முதலாவதாக வரும்
உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.
பழைய ஏற்பாட்டில்
நீளமான அதிகாரம் சங்கீதம் 119 புதிய ஏற்பாட்டில் லூக்கா
1.
சாலமோன் கட்டிய
தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.
மாற் 14:51,52-ல்
துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின்
ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.
இயேசுவின் சீஷர்கள்
மரித்தது எப்படி?
அப். மத்தியா
: யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக தெரிந்து கொள்ளப்பட்ட
(அப் 1:26) இவர் கற்களால் எறியுண்டு
பிறகு சிரைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
அப்.யோவான்
: வயது முதிர்ந்து நல்லபடி மரித்த ஒரே
அப்போஸ்தலர் இவரே ஆகும்.
அப்.ததேயு
: பெரிட்டஸ் என்ற இடத்தில் இரத்தசாட்சியாய்
மரித்தார்.
அப். தோமா
: இந்தியாவிலுள்ள சென்னைப் பட்டணத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
அப்.சீமோன்
: இவரை குறித்ததான சரியான ஆதாரம் இன்னும்
கிடைக்கவில்லை இவரும் சிலுவையில் இரத்த
சாட்சியாய் மரித்தார் என்று கருதுகின்றனர்.
அப். பற்தொலொமேயுச்:
அர்மேனியாவில் உள்ள அல்லானும் என்றும்
பட்டணத்தில் சவுக்கால் அடிக்கப்பட்டு, பிறகு தலைகீழாக சிலுவையில்
அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
அப்.பிலிப்பு
: டோமிட்டியன் காலத்தில் ஹீரப்போலிஸ் என்ற பட்டணத்தில் பேதுருவை
போல தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
அப்.அந்திரேயா,
அக்காயா என்னப்படும் கிரேக்கப்பட்டணத்தில் ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டு
X வடிவிலான சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
செபதேயுவின் குமாரனாகிய
அப். யாக்கோபு பாலஸ்தீனாவில் ஏரோது அகிரிப்பா 1-ம்
மன்னானால் ஏறக்குறைய கி.பி. 44-வது
ஆண்டு சிரைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
அல்பேயுவின் குமாரனான
அப். யாக்கோபு தேவாலயத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு
பிறகு கற்களால் எறியுண்டு இரத்தசாட்தியாய் மரித்தார்.
அப்.சீமோன்
பேதுரு ரோம மாநகரில் சிலுவையில்
அறையப்பட்டு இரத்தசாட்சி மரித்தார் இயேசுவை போல மரிக்க
தனக்கு தகுதியில்லை,அதனால் என்னை தலைகீழாக
சிலுவையில் அறையுங்கள் வேண்டிக்கொண்டார். அப்படியே அறைந்தார்கள்.
அப்போஸ்தலனாகிய மத்தேயுவை
எத்தியோப்பியாவில் சிறையாக்கி, அங்கே தரையோடு சேர்ந்து
ஆணி அடித்தனர். அதன் பிறகு தலை
வெட்டபட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
0 comments:
Post a Comment