உபாகமம்
29:9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு
வாய்க்கும்படிக்கு,
இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
யோசுவா
1:8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி,
இரவும் பகலும் அதைத் தியானித்துக்
கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை
வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
சங்கீதம்
1:3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன்
காலத்தில் தன் கனியைத் தந்து,
இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
பிரசங்கி
11:6 காலையிலே உன் விதையை விதை;
மாலையிலே உன் கையை நெகிழவிடாதே;
அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ
என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ
என்றும் நீ அறியாயே.
ஏசாயா
48:15 நான், நானே அதைச் சொன்னேன்;
நான் அவனை அழைத்தேன்; நான்
அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்.
ஏசாயா
53:10 கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப்
பாடுகளுக்குட்படுத்தினார்;
அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக
ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக்
கண்டு, நீடித்தநாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது
அவர் கையினால் வாய்க்கும்.
ஏசாயா
54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்;
உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ
குற்றப்படுத்துவாய்; இது கா;த்தருடைய
ஊழியக்காராpன் சுதந்தரமும், என்னாலுண்டான
அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர்
சொல்லுகிறார்.
1 இராஜாக்கள்
22:12 சகல தீர்க்கதாpசிகளும் அதற்கு இசைவாகத்
தீர்க்கதாpசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள
ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர்; அதை ராஜாவின்கையில்
ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
2 நாளாகமம்
26:5 தேவனுடைய தாpசனங்களில் புத்திமானாயிருந்த
சகரியாவின் நாட்களிலே தேவனைத்
தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத்
தேடின நாட்களில் தேவன் அவன் காhpயங்களை வாய்க்கச்செய்தார்.
0 comments:
Post a Comment