Monday 26 May 2014

2 சுயப்புணர்ச்சி – பாவமா?

சுயப்புணர்ச்சி
வேதாகமம் (மூலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்) சுயப்புணர்ச்சியைப் பற்றி குறிப்பிடுவதும் இல்லை சுயப்புணர்ச்சி பாவமா இல்லையா என்று கூறுவதும் இல்லை. சுயப்புணர்ச்சி குறித்த விஷயத்தில் அதிகமாக சுட்டிக்காட்டப்படும் வேதாகமப் பகுதி அதியாகம்ம் 38:9-10 ல் கூறப்படும் ஓனானின் கதை. தரையிலேதன் வித்தை விழவிடுவதுபாவம் என்று சிலர் இந்தப் பகுதியின் விளக்கமாக அர்த்தஞ்சொல்லுவர். ஆயினும் இந்தப் பகுதி குறிப்பாய்ச் சொல்லுவது இதல்ல.



 “வித்தை தரையில் விழவிட்டதற்காககர்த்தர் ஓனானைத் கண்டிக்கவில்லை, மாறாக, தன் சகோதரனுக்கு சந்த்தியை உண்டாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறியதற்கே கர்த்தர் அவ்வாறு செய்தார். இந்த பகுதி சுயப்புண்ர்ச்சியைப் பற்றியதில்லை மாறாக ஒரு குடும்ப கடமையை நிறைவேற்றுவதைப் பற்றியதே. சுயப்புணர்ச்சி பாவம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் இரண்டாவது பகுதி மத்தேயு 5:27-30. இச்சைச் சிந்தனைகளை கொண்டிருப்பதற்கு எதிராக இயேசு பேசிவிட்டு பின்புஉன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால் அதை தறித்து எறிந்துபோடுஎன்கிறார். இந்தப் பகுதிக்கும் சுயப்புணர்ச்சிக்கும் இடையில் இணை இருந்தாலும் இயேசு சுயப்புணர்ச்சியைத்தான் சுட்டிக்காட்டுகிறார் என்று கூறுவதற்கில்லை.


சுயப்புணர்ச்சி பாவம் என்று வேதாகமம் வெளிப்படையாக எங்கும் சொல்லவில்லையானாலும், சுயப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் செயல்கள் பாவமா என்பதைப் பற்றியும் ஒரு கேள்வியுமில்லை? இச்சையான சிந்தனை, பாலுணர்வுத் தூண்டல்கள் மற்றும் அல்லது நிர்வாண உடலுறவுக் படங்கள் போன்றவைகள்தான் அதிகமாக சுயப்புணர்ச்சிக்கு இட்டுச் செல்வன. இந்த பிரச்சினைகளையே சரி செய்ய வேண்டியிருக்கிறது. இச்சையினால் வரும் பாவங்களையும், ஒழுக்கந்தவறிய சிந்தனைகளையும், ஆடை நிர்வாண உடலுறவுக் காட்சிகள் ஆகியவற்றை கைவிடமுடியுமானால் சுயப்புணர்ச்சி ஒர் பிரச்சினையே இல்லை. மனிதர்கள் பலரும் சுயப்புணர்ச்சி சம்பந்தப்பட்ட குற்ற உணர்வுடனே போராடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில், சுயப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் விஷயங்களே அதிகமாக மனந்திரும்ப வேண்டியவைகளாக இருக்கின்றன.



சுயப்புணர்ச்சி பிரச்சினை பற்றி நோக்க சில வேதாகமக் கோட்பாடுகள் உண்டு. “வேசித்தனமும் மற்றெந்த அசுத்தமும் ஆகிய பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவும்கூடாதுஎன்று எபேசியர் 5:3 அறிவிக்கிறது. இந்த கடினமான சோதனைக்கு சுயப்புணர்ச்சி எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. “ஆகையால் புசித்தாலும், குடித்தாலும், என்னத்தைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் (1 கொரிந்தியர்10:31) என்று வேதாகமம் கூறுகிறது. எந்த காரியத்தில் கர்த்தருக்கு மகிமை கொடுக்கமுடியாதோ அதைச் செய்யக்கூடாது. ஆகவே ஒரு காரியம் தேவனுக்குப் பிரியமானது என்று முழுமையாக ஒப்புக்கொள்ள ஒரு மனிதருக்கு முடியாத பட்சத்தில் அந்தக் காரியம் பாவமே: “விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே (ரோமர் 14:23). மேலும் நாம் நினைவில் கொள்ளவேண்டியது நம் உடல் கர்த்தரால் மீட்கப்பட்டதும் அவருக்குச் சொந்தமானதுமாகும்


உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (1 கொரிந்தியர் 6:19-20). இந்த பெரிய உண்மை நாம் நம்முடைய உடலை வைத்து என்ன செய்கிறோம் என்பதின் மேல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவேண்டும். இந்தக் கோட்பாடுகளை வைத்துப் பார்க்கும்பொழுது, சுயப்புணர்ச்சி பாவம் என்ற முடிவு வேதாகமப்படி சரிதான். தெளிவாகவே, சுயப்புணர்ச்சி கர்த்தருக்கு மகிமையை கொண்டு வருவதில்லை; ஒழுக்கந்தவறுகிறது போன்ற தோற்றத்தை அது தவிர்ப்பதுமில்லை, நம் உடல் கர்த்தருக்குச் சொந்தமானது என்ற சோதனையையும் இது தாண்டுவதில்லை.





Thanks : gotquestions.org

2 comments:

  1. 9 அநியாயக்காரர் தேவனுயைட ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
    1 கொரிந்தியர் 6:9

    10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
    1 கொரிந்தியர் 6:10

    ReplyDelete
  2. சுயபுணர்ச்சி (இதற்கான நோக்கம் தான் முக்கியம்)

    ReplyDelete

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.