வேதாகம் - காலங்கள் & நிகழ்வுகள்
ஆண்டு (கி.மு)
|
நிகழ்வு -- காலம்
|
பழைய ஏற்பாட்டு நூல்
|
கி.மு. 2000 - 1750 (ஏறக்குறைய)
|
(ஏறக்குறைய) 1900; ஆபிரகாம் கானான் நாட்டுக்கு வருதல். ஈசாக்கு, யாக்கோபு (இஸ்ரயேல்), பன்னிரு குலத்தலைவர்கள். யோசேப்பு எகிப்து மன்னரின் ஆலோசகர் ஆகுதல்.
|
தொடக்கநூல், அதிகாரங்கள் 12-50
("யாவே" மரபுகள்) |
கி.மு.1700 - 1250
(ஏறக்குறைய) |
யாக்கோபின் வழிமரபினர் எகிப்தில் அடிமைகளாகுதல்
|
|
கி.மு. (ஏ) 1250
|
விடுதலைப் பயண நிகழ்வு; எகிப்திலிருந்து இஸ்ரயேலரை மோசே அழைத்துச் செல்லல்.
பாலைநிலப் பயணம். மோசே சீனாய் மலையில் திருச்சட்டம் பெறல்.
|
விடுதலைப் பயணம் நூல்
("யாவே" மரபுகள்); |
கி.மு. 1200 - 1020
|
நீதித்தலைவர்கள் காலம்
|
|
கி.மு. 1020 - 922
|
பொற்காலம்; சவுல் (ஏ) 1020-1000; தாவீது (ஏ)
1000-962; சாலமோன் (ஏ) 962-922). ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு.
|
"எலோகிம்" மரபு உருவாதல்
|
கி.மு. 922 -721
|
நாடு பிளவுபடல்; வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா பல அரசர்களால் ஆளப்படல்.
|
2 அரசர்கள், 2 குறிப்பேடு, எரேமியா 39-44; 52. (ஐந்நூலில் "எலோகிம்", "இணைச்சட்டம்" பண்புடைய பகுதிகள்), ஆமோஸ், ஒசேயா, ஏசாயா(1), மீக்கா
|
கி.மு. 722
|
வடக்கு அரசில் சமாரியா வீழ்ச்சியடைதல்
நாடு கடத்தப்படும் முன் வாழ்ந்த இறைவாக்கினர்கள் |
"யாவே" மரபும் "எலோகிம்" மரபும் இணைதல். "இணைச்சட்டம்" மரபு தோன்றுதல்.
செப்பணியா, நாகூம், அபக்கூக்கு, ஏரோமியா |
கி.மு. 587
|
பாபிலோனியாவுக்கு யூதர்கள் நாடுகடத்தப்படல்
|
"குருக்கள்" மரபு உருவாதல்
திருப்பாடல்கள் 137. (ஐந்நூலில் "குருக்கள்" பண்புடைய பகுதிகள்)
இணைச்சட்டம், யோசுவா, நீதித் தலைவர்கள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள்.
எசேக்கியேல், எசாயா(2), புலம்பல்
|
கி.மு. 539
|
பாரசீக மன்னர் சைரசு யூதர்கள் தாய்நாடு திரும்ப அனுமதி அளித்தல்.
|
|
கி.மு. 537
|
எருசலேமில் புதிய கோவிலுக்கு அடித்தளம் இடுதல்
|
மேலே தரப்பட்ட நான்கு மரபுகளும் இணைதல்.
எசாயா(3), ஆகாய், செக்கரியா, யோபு, மலாக்கி, ஒபதியா
|
கி.மு. 539 - 333
|
பாலஸ்தீன நாட்டில் பாரசீக ஆட்சிக் காலம்.
|
|
கி.மு. 458 - 390
கி.மு. 445 - 420 |
எஸ்ரா நெகேமியா ஆகியோர் கொணர்ந்த சீர்திருத்தம்
|
யோவேல், யோனா, நீதிமொழிகள்
திருப்பாடல்கள். 1,2 குறிப்பேடுகள்
எஸ்ரா, நெகேமியா நூல்கள்
|
கி.மு. 333 - 63
கி.மு. 333 - 300
கி.மு. 300 - 200
கி.மு. 200 -175
|
பாலஸ்தீன நாட்டில் கிரேக்க ஆட்சி.
பெரிய அலக்சாந்தர் காலம்
தாலமியர் ஆட்சி
செலூக்கர் ஆட்சி
|
சபை உரையாளர், தோபித்து
சீராக், எஸ்தர், தானியேல், யூதித்து, பாரூயஅp;க்கு |
கி.மு. 175 -135
|
கிரேக்க ஆட்சிக்கு எதிராக மக்கபேயர் கிளர்ச்சி
|
சாலமோனின் ஞானம்
|
கி.மு. 134 - 63
|
அஸ்மோனியர் (மக்கபேயர்) பாலஸ்தீனாவை ஆட்சிபுரிதல்
|
1,2 மக்கபேயர்
|
கி.மு. 63
கி.மு. 63 - 4
|
உரோமைத் தளபதி பொம்பேயி எருசலேமைக் கைப்பற்றல்.
பாலஸ்தீனாவில் உரோமை ஆட்சி.
|
|
கி.மு. 37 - 4
|
உரோமையரால் நியமிக்கப்பட்ட பெரிய ஏரோது பாலஸ்தீனாவில் ஆட்சி.
|
பழைய ஏற்பாட்டின் தோற்றம்:
|
வாய்மொழி மரபு; கி.மு. 2000 - கி.பி. 90
|
எழுத்து அமைப்பு; கி.மு. 950 - கி.பி. 90
|
பதிப்பு வடிவம்; கி.மு. 586 - கி.பி. 90
|
(பழைய ஏற்பாட்டு நூல்கள் தோன்றிய வரலாறில் மேலும் விபரங்கள் அறியலாம்)
புதிய ஏற்பாடு
ஆண்டு
|
நிகழ்வு -- காலம்
|
புதிய ஏற்பாட்டு நூல்
|
கி.மு. 6-4
|
இயேசு பிறப்பு (பெரிய ஏரோது இறப்பதற்கு முன்)
|
|
கி.மு. 6 - கி.பி. 34
கி.மு. 4 - கி.பி. 6
கி.மு. 4 - கி.பி. 39
கி.மு. 4 - கி.பி. 34
|
பெரிய ஏரோதின் மகன்கள் ஆட்சி;
அர்க்கெலா
ஏரோது அந்திப்பா
பிலிப்பு
|
|
கி.பி. (ஏ) 27 -30
(ஏ) 27
(ஏ) 30
|
இயேசுவின் திருமுழுக்கு;
இயேசுவின் திருப்பணிக்காலம்;
திருப்பணித் தொடக்கமும் இயேசுவின் இறப்பும் உயிர்த்தெழுதலும்
|
|
கி.பி. (ஏ) 30 - 63
|
திருத்தூதர் பவுலின் பணிக்காலம்
|
ஐயத்திற்கு இடமின்றி பவுல் எழுதிய திருமுகங்கள் (உரோமையர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், பிலிப்பியர், 1 தெசலோனிக்கர், பிலமோன்)
|
கி.பி. 37 - 44
|
முதலாம் ஏரோது அகிரிப்பா
|
|
கி.பி. 66 - 70
|
உரோமை ஆட்சிக்கு எதிராக யூதர்களின் முதல் கிளர்ச்சி
|
|
கி.பி. 70
|
உரோமையர் எருசலேமை முற்றுகையிட்டு அழித்தல்
|
|
கி.பி. 70 - 100
|
புதிய ஏற்பாட்டின் பெரும்பான்மையான நூல்கள் எழுத்துவடிவம் பெற்ற காலம்
|
மாற்கு, மத்தேயு, லூக்கா, திருத்தூதர் பணிகள், எபேசியர், கொலோசியர், 2 தெசலோனிக்கர், 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு, தீத்து, எபிரேயர், யாக்போபு, 1 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா, திருவெளிப்பாடு.
|
கி.பி. 71 - 132
|
உரோமைப் பேரரசர் பலரின் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம்
|
2 பேதுரு
|
கி.பி. 132 - 135
|
யூதர்கள் உரோமையருக்கு எதிராக நடத்திய இரண்டாம் கிளர்ச்சி
|
0 comments:
Post a Comment