தேவன் ஆதியிலே உருக்கிய ஏதேன் தோட்டம் எங்கே என்று தேடும் போது இந்த தகவல்கள் கிடைத்தது. இது முற்றிலும் உன்மையா என்று தெரியாது. கிடைத்த தகவல்களை உங்ளோடு பகிர்ந்துகொள்கிறேன்.
"தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று." என்று வாசிப்பதில் நதிகளின் துவக்கம் ஏதேன் என்று தெளிவாக தெரிகிறது.
ஆதி 2:11-14. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
பொதுவாக பல ஓடைகள் ஒன்றுகூடி பின் நதியாக மாறும். இங்கே மாறாக ஏதேனிலிருந்து நான்கு நதிகள் ஆரம்பித்தன என்று பார்க்கிறோம். இதனால் சிலர் இந்த தோட்டம் என்பது ஐப்பிராத்து மற்றும் டிக்ரிஸ் நதிகள் சேரும் இடத்தில் இருக்கலாம் என்றும் சொன்னார்கள்.நதியின் இரண்டு முடிவுகளிலும் தேடி அலைந்தாயிற்று.
ஐப்பிராத்து என்ற ஒரே ஒரு நதிமட்டும் அதே பெயரால் அறியப்பட்டுள்ளது. இது துருக்கியின் மலைகளில் ஆரம்பிக்கின்றது, பின்பு டிக்ரிஸ் என்ற நதியுடன் ஈராக்/குவைத் எல்லைக்கருகில் இணைந்துவிடுகின்றது. அநேகர் டிக்ரிஸ் நதிதான் இதெக்கெல் என்று சொல்கின்றனர். இது நம்மை ஏதேன் தோட்டமானது துருக்கியில் இருந்திருக்கவேண்டும் என்று யூகிக்க வைக்கின்றது. ஏனெனில் ஐப்பிராத்து நதியானது துருக்கியில் ஆரம்பிக்கின்றது. இந்த டிக்ரிஸ் நதியும் துருக்கியின் மலைகளில்தான் ஆரம்பிக்கின்றது. இவ்விரண்டு நதிகளும் இந்த மலையில்தான் ஆரம்பிக்கின்றது என்றால் மற்ற இரண்டு நதிகளும் இங்குதான் ஆரம்பிக்கவேண்டும் என்று நமக்கு தெரியும். ஆனால் வேதாகமத்தில் மற்ற இரண்டு நதிகளாகிய பைசோன், கீகோன் பற்றி அதன்பின்பு சொல்லப்படவில்லை. ஆனால் தானியேல் புத்தகத்தில் இதெக்கெல் என்னும் ஆற்றைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. (தானி 10:4). செயற்கைக் கோள்கள் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து ஒரு நதி வற்றியிருப்பதைக் தொல்பொருள்துறையினர் கண்டுபிடித்தனர். இதுவே பொன்விளைந்த ஆவிலா தேசத்தில் ஓடிய பைசோன் நதி என்று கருதுகின்றனர். இந்த நதி சுமாராக கி.மு. 3500-2500 ல் வற்றியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. (http://www.creationism.org/caesar/eden.htm). சவுதி அரேபியாவை ஆவிலா தேசம் என்றும் யூகமாக சொல்கின்றனர்.
கீகோன் எத்தியோப்பியாவைச் சுற்றி ஓடும் என்றால் அது நைல் நதி இல்லை. எனவே வரைபடமானது இப்படியாக வரையப்பட்டு சாத்தியங்கள் அலசப்பட்டன.
நான்கு நதிகளும் பொதுவாக மகாச் நிலச்சரிவு என்ற அமைப்பிற்குள் உள்ளன. பூமியில் கண்டங்கள் இடம் பெயர்ந்தபோது இவைகளில் இரண்டு வற்றியும் மறைந்தும் போயிருக்கவேண்டும்.
முக்கியமாக ஏதேன் தோட்டத்தின் அளவு பைபிளில் சொல்லப்படவில்லை. எனவே ஆறுகளின் தோற்றம் தெற்கு லெபனோன் என்றும் குறிப்பாக எருசலேமுக்கு அருகே என்றும் சொல்லப்படுகின்றது. அதாவது தற்போதைய இஸ்ரவேல் தேசம். இஸ்ரவேல் தேசம் முழுவதும் ஏதேன் தோட்டமாக இருந்ததா என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாது. ஆனால் "தேவன் உருவாக்கிய ஏதேன் தோட்டம்" என்பது இப்போது இல்லை. நோவாவின் காலத்து ஜலப்பிரளயத்தில் இரு நதிகள் அழிந்து போனதுபோல் தோட்டமும் அழிந்து போயிருக்கவேண்டும். எசேக்கியேல் 31:18ல் சொல்லப்பட்டது போல ஏதேனின் விருட்சங்கள் பூமியின் தாழ்விடங்களுக்கு இறக்கப்பட்டன. (வெள்ளம், நிலச் சரிவு). ஏதேனின் நிலைமையை தேவன் 1000 வருட ஆளுகையில் பூமியிலெங்கும் மீண்டும் கொண்டுவருவார். நன்றி:http://tamilbibleqanda.blogspot.in.

மீண்டும் நன்றி
ReplyDelete