Saturday 11 February 2012

8 இசையை கற்றுக்கொள்ளுங்கள்..........

   இசைபிரியர்களுக்கு............



           
       இசை என்பது ஜாதி, மதம், இனம், நாடு, மொழி என அனைத்தையும் கடந்து அனைவரையும் கவரக்கூடிய ஒரு கலை ஆகும். இசைக்கு மயங்காத மனிதர்களே இல்லை. மனிதன் பிறந்ததிலிருந்து சாகும்வரை அவனுடைய வாழ்வில் கலந்துவிட்ட ஒரு விஷயம் இசையாகும். இசை இல்லாமல் மனிதன் இல்லை. மனிதவாழ்வில் இசை இரண்டற கலந்துவிட்ட ஓர் அங்கமாக இருக்கின்றது.





           இப்படிப்பட்ட இசையை பலர் கற்க விரும்புகின்றனர். ஆனால் சரியான ஆசிரியர் ஒருசிலருக்கு தான் கிடைக்கிறார்கள். பலருக்கு அந்த பாக்கியம் அமைவதில்லை. இசையை எளிமையாக அனைவரும் கற்று பயனடயவேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கமாகும். இத்தொடர் வாசகர்களின் வரவேற்பை பொறுத்தே எதிர்காலத்தில் தொடரும்.


           இசையை நாம் செய்தித்தாள் படிப்பதுபோல் படிக்கவும் கடிதம் எழுதுவதுபோல் எழுதவும் முடியும். அதாவது இசையை எழுத படிக்க முடியும். அது எப்படி என்பது வரும் தொடர்களில் தெளிவாக விளக்கப்படும். இதில் உங்களின் முழுஈடுபாடும் முழு முயற்சியும் நிச்சயம் இருந்தால் நீங்களும் இசையை எழுத படிக்க தெரிந்து கொள்ளாலம்.





           இதற்கு உங்களுக்கு தேவை என்னவென்றால் நீங்கள் எந்த வாத்திய கருவியை கற்க விரும்புகிறீர்களோ அது உங்களிடம் இருக்கவேண்டும். உங்களிடம் முழு ஈடுபாடும் முழு முயற்சியும் இருக்கவேண்டும்.


           இசையை ஓரளவு கற்றவர்கள் விரும்பினால் நீங்கள் எந்த பாடலுக்கு Notes & Chords வேண்டும் என்று விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் விருப்ப பாடலுக்கு அனுப்பிவைக்கின்றேன்.


     அடுத்த தொடரிலிருந்து இத்தொடர் ஆரம்பமாகும். உங்களின் ஆர்வத்தையும் பின்னூட்டத்தையும் பொறுத்தே இம்முயற்சி தொடரும்.





8 comments:

  1. தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ராஜா உம் மாளிகையில் இரா பகலாய் அமர்ந்திருப்பேன் என்ற பாடலும் புதிய கிறிஸ்தவ பாடல்களின் Notes & Chords வேண்டும் எனது E-mail
    sarujan1@live.com

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் பினுட்டத்திற்கும் நன்றி நண்பரே. நீங்கள் கேட்ட பாடல் என்னிடம் இல்லை.எனவே நீங்கள் அந்த பாடலை எனக்கு அனுப்புங்கள். உங்களுக்கான Notes & Chords அனுப்புகின்றேன். என்னுடைய அடுத்தப் பதிவில் கிறிஸ்தவ பாடல்களின் Notes & Chords ஆகியவரற்றை பதிவிடபோகிறேன்.அதுவரை சிறிது பொறுத்திருங்கள்.நன்றி.

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல முயற்சி பாராட்டுக்கள், நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  6. நல்ல தொடர் தொடருங்கள் ........''

    நன்றி நண்பா ....

    ReplyDelete
  7. நன்றி அன்பரே நான் காத்திருக்கிறேன் .

    ReplyDelete
  8. Please continue this mission and post the songs on your site.

    ReplyDelete

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.