Monday, 27 May 2013

வேதாகம துனுக்குகள் - பகுதி - 4




 3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள்எபி 13:8
b. அந்திக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள்மத் 24:24; மாற் 13:22.





வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம்யாத் 15:20-22
b. தெபொராள்நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத்லூக் 1:42-45.
e. மரியாள்லூக் 1:45-55.


சீகன் பால்கு ஐயர் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் தன் ஊழியங்களை செய்து, ஒரு சபையை கட்டியுள்ளார். அத்திருச்சபையில் இன்றும் ஆராதனை நடக்கிறது.


தமிழ் புதிய ஏற்பாடு கி.பி 1714 –ம் ஆண்டு தரங்கம்பாடியில் சீகன் பால்கு ஐயர் என்பவரால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


ஹென்றி பாவர் என்பவர் தலைமையில் மூழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது இன்று வரை அநேக தமிழ் கிறிஸ்தவர்களின் கரங்களில் தவழுவதும் இந்த மொழிப்பெயர்ப்பே.


வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.


இயேசு கிறிஸ்துவின் உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மில பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.


சாஸ்திரிகள் கீழக்கிலே கண்ட நட்சத்திரத்தை குறித்து மத்தேயு 2 –ம் ஆதிகாரத்தில் காண்கிறோம். இதே காலகட்டத்தில் வாழ்ந்த சீன(China) வான சாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.


யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19.
2. 2 இரா 2:8.
3. 2 இரா 2:13,14.


வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.


ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்டஇதெக்கேல் என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.


மோசே குழந்தையாக எஇடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.


யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.


தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்விநீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

No comments:

Post a Comment