Monday, 20 May 2013

வேதாகம துனுக்குகள் - பகுதி - 3

தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்

1. மோசேயாத் 35:28-30
2. இயேசுமத் 17:2
3.ஸ்தேவான்அப் 6:25; 7:55,56



வேதாகமத்திலே 3 நபர்களுக்குஇயேசு என்னும் பெயர் இருக்கிறது.
1. நம்முடைய தேவன் இயேசுமத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசுஅப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசுகொலோ 4:11.



அப்பா பிதாவே என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறதுமாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.



லேவியராகமத்தில்தேவனாகிய கர்த்தர் என 21 தடவை வருகிறதுலேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.



லேவியராகமத்தில்கர்த்தஎ என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.



யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள்யோபு 1:2, 42:13.



எலியா என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியாஎஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியாஎஸ்றா 10:26.



ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.



ஜீவ விருட்சம் என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.



சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளதுசங் 15,70,93,100,125.



யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.



தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
What hath God wrought ? – Num 23:23.
தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.



இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும்நியா 4:4.



பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறதுலேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.

1 comment: