Monday, 27 May 2013

வேதாகம துனுக்குகள் - பகுதி - 5




இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர்ஆபிப் (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.


கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர் ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.


மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.


வேத பண்டிதர்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள் :-
1) திஸ்மாஸ்.
2) கெஸ்டாஸ் என்று கண்டு பிடித்துள்ளனர்.


 இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டுவந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள் :-
1) மெல்கொயர்பரிசு பொன்.
2) காஸ்பர்பரிசு வெள்ளை போளம்.
3) பால்தாஜர்தூபவர்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.


 வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).


பிதாவாகிய தேவனைஅப்பா என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிடஊஅட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).


கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்துஅல்பா கடைசி எழுத்துஒமேகா ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமு இதுவே).


சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.

       
           
சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளதுசங் 15,70,93,100,125.


நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.


யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.


சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.


தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.


சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

No comments:

Post a Comment