அவரது சாட்சி
நான் வாலிபனான போது உண்மைதெய்வத்தைக் காண
வேண்டும். அவரது இனிய குரலை
கேட்க வேண்டும், அவரின் பலத்தால் ஒரு
புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும். என்ற
பேரவா என் உள்ளத்தில் பொங்கி
எழுந்தது. “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை” இது வள்ளலார் கூற்று.
இறைவன் ஒளிமயமானவன், கருணை வடிவானவன்,
“ஒன்றே குலம் ஒருவனே
தேவன்” இது திருமூலா் வாக்கு.
ஒன்றே தெய்வம் என்றால், பல
தேவா்கள் வணக்கத்திற்கு இங்கு இடமில்லை! கருணை
வடிவான வாழ்க்கையும், ஒளி நிரம்பிய தோற்றமும்
கொண்டவர் தெய்வம்,
சங்கீதம்-104.2
ல் கூறப்பட்ட வேத வசனத்தின் படியும்,
நானே இவ்வுலகிற்கு ஒளியாய் இருக்கிறேன் என்கிற
வசனத்தின் படியும் ஜெக ஜேதியாய்,
பிரகாசத்துடன், ஜீவ ஒளியான இயேசுவே,
என்னை மாற்றினார். அந்த உன்னத அனுபவத்தை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இரா.மணி ஜயா்
என்ற நாமம் கொண்ட பிராமண
குல வாலிபனான எனக்கு தூய்மையும், கருணையும்,
அன்பும், தியாகமும் நிறைந்த இயேசு கிறிஸ்துவின்
வாழ்க்கை ஒரு சவாலாக அமைந்தது.
என் உள்ளத்த தொட்டது. என்
இதயத்தில் இடம் பிடித்தது. இயேசு
கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக
ஏற்றக் கொண்டேன். என் உள்ளத்தில் பேரின்பமும்
அமைதியும் பொங்கித் ததும்ப ஆரம்பித்தது. மெய்யான
இந்த தெய்வத்தை நான் கண்டு கொண்டதன்
விளைவு, வீட்டில் எதிர்ப்பு! உறவினர் மத்தியில் கசப்பு!
நண்பரிடம் நகைப்பு! பலரின் பகைப்பு, கேலிப்பேச்சுக்கும்
உள்ளான ஒரு அவல நிலை!
என்றாலும்
என் ஆறுதலின் தேவன் என்னைக் கைவிடவில்லை!
அவா் அன்பை பொழிந்தார்! அற்புதங்களையும்
அடையாளங்களையும் செய்தார்! என் கண் எதிரே
தரிசனமானார்! அவா் இனிய குரலை
நான் கேட்கும்படி செய்தார்! அவா் அரவணைப்பில் நான்
மகிழ்ந்தேன்! அவா் அன்பின் பிரவாகத்தில்
நான் மூழ்கித் தத்தளித்தேன்! பாரிசுத்த ஆவியானவா் என்னை நிரப்பினார்! என்
சோர்வுகளை நீக்கி என்னை பலப்படுத்தினார்!
இருளை அதமாக்கும் வல்லமையையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்யும் சத்துவத்தையும் தேவன் எனக்குத் தந்தார்.
இருளில்
மூழ்கிக் கிடந்த எனக்கு எப்படி
இந்த வெளிச்சத்தின் பாதை தெரிய வந்தது
என்பதே இப்புத்தகத்தின் வாயிலாக நான் கூறும்
அனுபவ சாட்சியாகும்.
தெய்வத்திற்கென
அா்ப்பணம் செய்யப்பட்ட பிராமணச் சிறுவனாகிய நான் என் மத
கலாச்சாரங்களை சிறிதும் தவறாமல், சரியாக கடைப்பிடித்தேன். ஆலயத்
திருப்பணிகள், உற்சவங்கள் நடத்தும்போது எப்படியும் ஓா் நாள் இவ்வுருவச்சிலைகள்
உயிரடைந்து என்னோடு பேசும்! என்
குறைகளைத் தீா்க்கும்! என்றுதான் எண்ணினேன். மூன்று நாட்கள் தொடர்ந்து
புசியாமலும், குடியாமலும் கூட விரதம் இருப்பேன்.
சபரிமலை போன்ற
சில புண்ணிய ஸ்தலங்கட்கு பாத
யாத்திரை செய்தும் பலன் ஒன்றும் காணவில்லை!
எந்த தெய்வமும் என்னிடம் பேசவில்லை! நேரில் தோன்றி தரிசனம்
ஆகவும் இல்லை! என் பாவங்களை
கழுவி நல்லதோர் மனச் சமாதானத்தை தரவுமில்லை!
சில கோவில்களில் மாலை நேரம் பூஜை
நடத்தும் பூசாரியாகவும் பணியாற்றினேன். கைகட்டி, வாய்பொத்தி நிற்கும் பக்தனாக மட்டுமல்ல மந்திரங்களையும்,
சுலேகங்களையும் சொல்லும் புரேகிதனாகவும், தெய்வத்தின் கருவறை வரை செல்லும்
அந்தணனாகவும் பணியாற்றியுள்ளேளன்.
இப்படியெல்லாம்
நான் பிராத்தனை செய்தும் என் பாவம் தீா்ந்தபடில்லை!
அப்பாவங்களினின்று வெற்றியும் இல்லை! மெய்யான சமாதானம்
கிட்டவுமில்லை! ஒரு வேளை இன்னும்
சற்று அதிகமாகக் காரியங்களை
நடப்பித்தால் ஆண்டவன் அருள் கிட்டலாமோ
என்ற ஜயத்தோடு, இந்து முன்னணிக் கழகத்தோடு
சோ்ந்து, வைராக்கியத்தோடு செயல்பட ஆரம்பித்தேன் யோகாசனப்
பயிற்சிகள் தவறாது செய்து, என்
சிந்தனையையும், செயலையும் பாவ வழியினின்று திருப்பிவிட
முயற்சித்தேன்! அங்கு தோல்வி! அதிலும்
ஏமாற்றம்!
மௌனவிரதம்,
தியான நிலை, எத்தனை எத்தனையோ
பயிற்சிகள்! எதுவும் என் பாவத்தினின்று
விடுதலை எனக்குத் தரவில்லை! சோர்ந்து, தளா்ந்து, தோல்வியுற்று, தத்தளித்து தவிக்கும் இந்நிலையில் தான் என் நல்ல
நண்பன் ஒருவன் என்னை இயேசுவினிடத்தில்
வழி நடத்தினான்! அவா் அன்பைப் பற்றி
கூறினான்! அவா் மனதுருக்கத்தை எடுத்துரைத்தான்!
அவா் தாழ்மை என்னை
கவா்ந்தது! அவா் செய்த அற்புதங்கள்
என்னை மெய்சிலிர்க்க வைத்தன! என் உள்ளம்
கவா்ந்த நல்லவரை தேட வேதாகமத்தை
திறக்கலானேன்! படிக்கப் படிக்க அதில் கூறப்பட்டுள்ள
சில நியமனங்கள் இதுவரை நான் கொண்டிருந்த
என் நம்பிக்கையை அசைக்க ஆரம்பித்தது. குறிப்பாக,
விக்கிரக ஆராதனையைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் என் இளமை முதல்
என் பெற்றோரும், உறவினரும் கொண்டுள்ள கருத்து மாறுபாடானது என்பதை
விளங்கிக் கொண்டேன்!
சங்
115.5 இல் கூறியுள்ளபடி “அவைகளுக்கு வாய் இருந்தும் பேசாது” அவ்விக்கிரகங்களால் என்னைப் பார்க்கவும் முடியவில்லை!
என்னோடு பேசவும் இயலவில்லை! மேற்கண்ட
வசனங்களை நான் வாசித்த போது,
இவ்வளவு காலமும், இந்த விக்கிரகங்கள் நம்மோடு
ஓா் நாள் பேசும் என்று
எண்ணினோமே, நம்மை எல்லா தீங்கினின்றும்
காக்கும் என்று நம்பினோமே, அனைத்தும்
பொய்யானதே என எண்ணி,
என் உள்ளம் தேம்பி அழுதது.
இடைவிடாமல்
விக்கிரகங்களுக்கு பூஜை செய்து வரும்
என் நண்பா்களிடமும் கேடடுப் பார்த்தேன்! எவரும்
கூறவில்லை இந்த விக்கிரகங்கள் பேசியதாக!
ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றம் அடைத
நான், ஒரு வேளை இந்த
வேதாகமம் கூறுவது மெய்யாய் இருக்குமோ
என்ற எண்ணத்தோடு மேலும் சற்று ஆழமாக
வாசிக்கத் தொடங்கினேன்!
அப்பொழுது
ஒரு கிறிஸ்தவ நண்பன் இம் மனுக்குலத்தின்
இரட்சகா் இயேசு கிறிஸ்து ஒருவரே!
“இயேசுக் கிறிஸ்துலாலே அன்றி வேறெருவராலும் இரட்சிப்பு
இல்லை. நாம் இரட்சிக்கப் படும்படிக்கு
வானத்தின் கீழெங்கும், மனுஷா்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு
நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்.4.12)
என்று என்னிடம் கூறினான். அப்பொழுது கூட இயேசுக்கிறிஸ்துவாகிய கடவுள் இவ்வுலகை
இரட்சிக்க வந்த அவதார புருஷா்களில்
ஒருவா் என்றுதான் நான் நினைத்தேன்! ஆனால்
கிறிஸ்தவ நண்பன் மீண்டும் மீண்டும்
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவனாய் இருந்தும். ஒருவன் இயேசுக் கிறிஸ்துவை
தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்
கொள்ளாவிடில் அவன் மோட்ச இராஜ்யத்தில்
பிரவேசிக்க முடியாது என்று கூறினான். இவற்றையெல்லாம்
அறிந்த பின்பு கூட என்
வழக்கமான விக்கிரக ஆராதனை முறைகளை தவறாமல்
செய்து வந்தேன்.
ஒரு நாள் என் நண்பன்
வேதாகமத்தில் உள்ள தீா்க்கதரிசன வார்த்தைகளை
பழைய ஏற்பாட்டினின்று வாசித்து காட்டி, அவை புதிய
ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் வாழவில்
எவ்விதம் நிறைவேறிற்று! என்பதையும் விளக்கிக் காடடினான்.
டேப் ரிக்கார்டா் (பதிவு பெட்டி) எத்தனை
முறை போட்டாலும், மீண்டும் மீண்டும் அதையே பாடுவது போல.
பொருளரியாமல், இந்து சுலோகங்களையும், மந்திரங்களையும்
விடாமல் உச்சரித்தும், ஓதியும் வந்தேன். அவற்றின்
பொருள் என்னவென்று அறிந்து கொள்ளாமலேயே! சொன்னதைச்
சொல்லும் கிளிப்பிள்ளைபோல, என் முன்னோர், என்
பெற்றோர், என் குரு, என்ன
சொல்லிக் கொடுத்தார்களோ, அவற்றையே மீண்டும் மீண்டும் பொருளரியாமல் மந்திரங்களாக உச்சரித்தேன்.
இந்து மதத்தின் முதன்மை வேதமான “ரிக்” வேதத்தில் இம் மனுக் குலத்தை
மீட்க வந்த இரட்சகா் இயேசு
பெருமான் ஒருவரே என்று கூறியிருப்பதை
கேட்டறிந்தேன். இந்து மதத்தை அடிப்படையாக
கொண்ட வேதங்களும், பிராமணா் நம்பிக்கை வைத்திருக்கும் இதிகாசங்கள் அனைத்துமே ஏகமனதாக கூறுவது மனிதா்களின்
பாவங்களை மன்னிப்பதும், அவா்களை இரட்சித்து மோட்சத்தில்
சோ்ப்பதும், இயேசு கிறிஸ்து என்ற
தெய்வத்தால் மட்டுமே கூடும் என்பதே.
ரிக் வேதம் இதனை உள்ளங்கை
நெல்லிக்கனி போல திட்டமும் தெளிவுமாக
வரையறுத்து கூறுகிறது.
இதுகாறும்
என்னை மறைத்திருந்த அஞ்ஞானம் என்னும் மாயத்திரை விலகி,
உண்மையான தெய்வம் இயேசுவே என்பதை
முழுமையாக அறிந்து கொண்டேன். அன்றே
அவா் பாதத்தில் என் இதயத்தை அா்ப்பணித்தேன்.
சில சமஸ்கிருத சுலோகங்களையும் அவற்றின் தமிழாக்கத்தையும் கீழே தருகிறேன். நீங்களும்
வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. மூல மந்திரம்
ஓம் பிரம்மபுத்திராய நமக!
விளக்கம்
– பிதாவின் (பிரம்மா) குமாரனாகிய (புத்திராய்) இயேசுவே உம்மை வணங்குகிறேன்.
(நமக) (யேவான் 3.16)
2. இயேசுவின் பிறப்பு
ஓம் கன்னிசுத்தாய நமக!
விளக்கம்-
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே, உம்மை வணங்குகிறேன். (இயேசு கன்னி
மரியாளின் வயிற்றில் பிறந்தவா். (மத்தேயு 1.23)
3. இயேசுவின் சிலுவைப்பாடுகள்
ஓம் பஞ்சகாய நமக!
விளக்கம்-
ஜந்து காயங்கள் (பஞ்ச காய) உடையவரே
உம்மை வணங்குகிறேன். ஏசாயா 53.5
ஓம் விருச்சூல அருந்தாய நமக!
விளக்கம்-
சிலுவை மரத்தில் தொங்கினவரே உம்மை வணங்குகிறேன்.
4. இயேசு ஒருவரே மரணத்தைவென்றவா்.
ஓம் ம்ருதம் ஜெயாயட நமக!
விளக்கம்-
மரணத்தை வென்றவரே உம்மை வணங்குகிறேன். (ஏசாயா
25.8)
5. மாறாத தன்மைகொண்ட தெய்வம்
இயேசு ஒருவரே என்பதற்கு ஆதாரம்.
ஓம் நமச்சிவாய நமக!
விளக்கம்
– அன்புள்ளவரே உம்மை வணங்குகிரேன். சிவம்
என்றால் அன்பு என்று பொருள்படும்.
ஓம் சதா சிவாய நமக!
விளக்கம்
– எப்பொழுதும் அன்புள்ளவனே உம்மை வணங்குகிறேன். “சதா” என்றால் எப்பொழுதும் (Forever) என்று பொருள்படும்
வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்த்து நேற்றும்
இன்றும் என்றும் மறாதவராயிருக்கிறார். (எபி 13.8)
இயேசுவே
மெய் தெய்வம் என்ற உன்மையை
நான் கூறும் மந்திரங்களே திட்டவட்டமாக
அறிவிக்கின்றன என்று நான் புரிந்து
கொண்ட போது ஒரு வித
நடுக்கமும், பயமும் என்னை ஆட்கொண்டது.
நான் கற்ற மந்திரங்கள் கூறும்
அத்தனை அம்சங்களும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில்
மட்டுமே காணப்படுவதால் கிறிஸ்து ஒருவரே உண்மையும், உயிருள்ளவருமாகிய
தெய்வம். அவரால் மட்டுமே என்
பவாங்களை தீா்த்து என்னை இரட்சிக்க முடியும்
என்ற உயா்ந்த உண்மையை என்
உள்ளம் மனப்பூா்வமாக ஒத்துக் கொண்டது.
மற்றொரு முக்கியமான அம்சம்,
இயேசுவின் பக்கம் என் வாழ்க்கையை
இழுத்தது அவரது பரிசத்தமான, வெற்றிகரமான
வாழ்க்கையே! ஆம் அவராலேயன்றி ஒருவரும்
அவரைப் போல் பரிசுத்தமாக, தாழ்மையாக,
அன்பாக உண்மையாக, வெளிப்படையாக, வரையரைக்குட்பட்ட ஒரு வாழ்க்கை வாழவே
முடியாது.
மனிதன்
பரிசுத்தமாய் வாழ்வது கடினமானது. என்ற
என் எண்ணத்தை மாற்றி, அவரை பின்பற்றி
அவரைப் போல் பரிசுத்தத்தின் மேல்
பரிசுத்தம் அடைந்து அந்த உன்னத
தெய்வீக நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற
பேரார்வம் என்னுள் எழுந்தது.
இயேசுவின் வாழ்க்கையை, நான் வணங்கிய தெய்வங்களின்
வாழ்ககையோடு ஒப்பிட்டு பார்த்த போது, இயேசுவே
குறைவற்ற பரிசுத்தா் என்ற உண்மை நிலை
புலனாயிற்று.
இயேசுவை
எனக்கு அறிமுகப்படுத்திய நண்பரின் வாழ்கையோடு என்னோடு உழைத்த இந்த
முன்னணி தொண்டா்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்தேன். எவ்வளவு வேறுபாடு! அந்த
கிறிஸ்த்தவ நண்பரது வாழ்க்கையும் என்னை
வியப்புக்குள் ஆழ்த்தியது. வாலிப பருவத்திலேயே இத்தகைய
பரிசுத்தத்தோடு வாழ முடியுமானால் அத்தகைய
வாழ்க்கை தான் எனக்கு தேவை
என்ற முடிவுக்கு வந்தேன். என் கிறிஸ்தவ நண்பன்
கூறியபடியே இயேசுவே என்னை மன்னியும்!
என் உள்ளத்தில் வாரும்! என்று ஜெபித்தேன்.
அற்புதம் நிகழ்ந்தது! ஆச்சரியம் ஏற்பட்டது! இயேசு என் உள்ளத்தை
தம் அன்பினால் நிரப்பினார். மற்றவரிடம் எனக்கு பகைமை, வெறுப்பு,
பொறாமை, இச்சை போன்ற இதயத்தில்
மறைந்து மண்டிக் கிடந்த அசுத்தங்கள்
படிப்படியாக என்னை விட்டு நீங்குவதை
உணா்ந்தேன்.
என் கிறிஸ்தவ நண்பா்
கூறியபடியே பரிசுத்த வேதாகமத்தை வாசித்தேன். என் பிரச்சினைகளை இயேசுவின்
பாதத்தில் வைத்து ஜெபித்தேன். அப்பொழுது
இயேசு எனக்கு பல வெற்றிகளைத்
தந்தார்.
வேத கட்டளையின்படியே தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றுக்
கொண்டேன். ஒரு நாள் நான்
ஜெபித்துக் கொண்டிருக்கும் போது இயேசு கிறிஸ்து
என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். பலவித குழப்பங்களும, போராட்டங்களும்
நிறைந்த என் உள்ளத்தில் உலகம்
தரக்கூடாத சமாதானம் உதயமாயிற்று. மாய்மாலம், அசுத்த சிந்தை போன்ற
எல்லா தீங்கினின்றும் தேவன் எனக்கு வெற்றியை
தந்தார்
இவ்விதமாய் நான்
என் வீட்டார் அறியாவண்ணம் மறைமுகமாய் ஆனால் உறுதியாய் இயேசுவைப்
பற்றிக் கொண்டு ஒரு
ஆவிக்கரிய சபையிலே ஜக்கியம் வைத்துக்
கொண்டேன். இச்சபையின் போதனைகள் என் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு,
காரணமாக அமைந்தன. பரிசுத்த ஆவியானவா் அந்நிய பாஷை அடையாளங்களுடன்
என்னை நிரப்பினார். அது ஒரு இனம்
புரியாத அனுபவமாய் என் உள்ளத்தை நிறைத்தது.
இதன் விளைவு எப்பொழுதும்
புன்முறுவல் பூத்த முகம், எதற்கும்
கோபமோ எரிச்சலோ இல்லாத ஒரு சாந்தம்,
எதற்கும் கலங்காத ஒரு உள்ள
உறுதி, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு இன்பமான
அமைதி நிறைந்த பேரின்பம் எப்பொழுதும்
என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. இந்த
பேரின்பத்தைத் தேடித்தானே இவ்வளவு காலமும் அலைந்தேன்.
இவ்வளவு பூஜை, மந்திரங்கள் உச்சரித்தேன்.
நான் தேடியது கிட்டியது. மகிழ்ச்சி
வெள்ளத்தில் என் தேவனை ஸ்தோத்தரித்தேன்.
ஆனால் என் உறவினா்களுக்கு என்
மாற்றம் பேரிடியாய் மாறியது. எனவே என்னை மீண்டும்
இந்து மார்க்கத்திற்கு வந்து விடும்படி வற்புறுத்தினா்.
மரணத்திலிருந்து
தப்பினேன்.
1992 ஆம்
ஆண்டு என் வாழ்க்கையின் ஒரு
திருப்புமுனையாக அமைந்தது, நான் இயேசுவை பின்பற்றுவது
என் இனத்தாருக்கு தெரிய வந்தது. ஒரு
கூட்டத்தார் எனக்கு விரோதமாய் எழும்பினா்.
ஒரு நாள் அவா்கள் என்
சரீரம் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி விட்டு இயேசுவை
மறுதலிக்கும்படி வற்புறுத்தினார்கள் அவ்வாறு செய்யா விட்டால்
என்னை உயிரோடு எரித்து விடுவதாக
கூறினார்கள்.
ஏசாயா 53:7 இல், அவா் (இயேசு)
தம்முடைய வாயை திறவாதிருந்தார். என்று
வாசிக்கிறோம். இயேசுவைப் போலவே நானும் மறு
உத்தரவு கூறாமல் மவுனமாய், எனக்குள்
ஆவியானவா் ஏவினபடியே, இன்று மரித்தாலும் இயேசுவுக்காய்
மரிப்பேன் என்ற தீா்மானத்தை எடுத்துக்
கொண்டேன்.
அந்த வேளையில் நான் ஒரு தரிசனத்தை
கண்டேன். தானியேல் 3:25 இல் கூறியிருப்பது போல்
அக்கினி சூளையில் இருந்த மூவரோடு தேவ
குமாரன் உலாவின வண்ணம் என்னோடு
இயேசு நிற்பதைக் கண்டேன். எத்தீங்கும் எனக்கு நேராதபடி இயேசு
என்னை பாதுகாத்தார். அப்பொழுது ஏசாயா 53:7 இல் கூறிய வசனங்கள்
என் நினைவிற்கு வந்தன. அவா் நெருக்கப்பட்டும்
ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை
அவா் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்
போலவும் தன்னை மயிர் கத்திரிக்கிறவனுக்கு
முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் அவா்
தம்முடைய வாயை திறவாதிருந்தார்.
இன்றோடு
என் வாழ நாள் முடிந்தது,
என்று நான் கலங்காதபடி தேவன்
தம் கிருபையால் என்னை அச்சூழ்நிலையில் திடப்படுத்தினார்.
இதற்கான ஒரு வெகுமதி பரலோகத்தில்
நமக்கு காத்திருக்கும் என தைரியமாக நான்
இருந்த நேரத்தில் பல தூஷண வார்த்தைகளால்
என்னை அச்சுறுத்தினர்.
நான் தனித்தவனாய் இருந்த வேளையில் ஒரு
தெய்வீக தரிசனம் என் கண்முன்
தோன்றியது. அச்சுறுத்திய என் நண்பா் கூட்டம்
என் கண்முன் மறைந்தது. அதற்கு
பதிலாக நான்கு போ் நெருப்புச்
சூழலில் மகிழ்ச்சியுடன் நடக்கும் ஒரு காட்சி. அதில்
நாலாமவா் இயேசுக் கிறிஸ்துவின் தோற்றமுடையவராய்
காணப்பட்டார். தனியேலின் புத்தகத்தில் உள்ள வரலாற்றினை நினைவு
கூா்ந்தேன். சிறிது நேரத்தில் அக்
காட்சி மறைந்தது. ஆனால் இயேசுகிறிஸ்து மட்டும்
தனித்தவராய் என் அருகல் நின்று
கொண்டிருந்தார். அவரது அன்பு பொழியும்
காந்த கண்கள், எனக்கு பலமும்,
மகிழ்ச்சியும், நம்பிக்கையும், ஜீவனும் கொடுத்தன. என்னைக்
கொழுத்த வந்த நண்பா் கூட்டத்தை
பார்த்தேன். அவா்கள் முகங்களில் கொடூரம்
இல்லை அவா்கள் தெய்வ தரிசனத்தை
காணாவிட்டாலும், என் பார்வையில் இருந்த
குளுமையை சந்தித்தனா். தெய்வம் என்னை தேற்றுவதை
உணா்ந்தனா். இவனுள் ஏதோ ஒரு
சக்தி இருக்கிறது என்பதை அறிந்தவா்கள் ஒன்றும்
பேசாமல் ஒருவா் பின் ஒருவராக
என்னை விட்டு அகன்றனா். வெகு
நேரம் கழித்து மண்ணெண்ணையில் நனைந்து
கிடப்பதை அறிந்து, அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
இந்நிகழ்ச்சிக்கு
பிறகு என் பெற்றோர் என்னை
ஆலயத்திற்கு செல்ல அனுமதித்தனா். ஆனாலும்
அவா்கள் என்னை மறுபடியும் இந்து
மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும் என்றும் வற்புறுத்தினா். இல்லையேல்
வீட்டை விட்டு வெளியேற்றப் போவதாக
பயமுறுத்தினா் கிறிஸ்துவின் அன்பிற்காய், என் வீட்டையும் என்
பெற்றோரையும் துறந்தேன்.
தேவன் எனக்கு அடைக்கலமும், ஆதரவும்
தந்தார். என் பெற்றோருக்காக தேவனிடம்
கண்ணீரோடு மன்றாடினேன். கா்த்தா் அவா்கள் உள்ளங்களை மாற்றினார்.
என்னை மீண்டும் வீட்டில் ஏற்றுக் கொண்டனா். என்
ஆலய வழிபாடுகளுக்கு முழு உரிமை அளித்தனா்.
தேவன் என் மூலம் நடப்பிக்கும்
அற்புதங்களை கண்டு ஆச்சரியப்பட்டனா்.
தேவன் ஒரு நாள், என்னை
ஏன் அவா் பக்கம் அழைத்தார்
என்பதை திட்டமும் தெளிவுமாக காட்டினார். அதற்கான வேத வசனத்தையும்
கொடுத்தார்.
மாற்கு-16:20
அவா்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.
கா்த்தா் அவா்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து
அவா்களால் நடந்த அடையாளங்களைினாலே வசனத்தை
உறுதிப் படுத்தினார்
அற்புதங்கள்
இதன்படி
என் சாட்சியை தனிப்பட்டவா்களுக்கும், குழுக்களுக்கும் எடுத்துக்கூற கூட்டம் கூட்டமாக ஆன்மாக்கள்
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதை நான்
கண்கூடாக கண்டேன். ஒரு நாள் தனித்தனியாக
நான் பல பேருக்கு ஜெபம்
செய்த வேளையில் அவா்களில் ஒருவா் பரிசுத்த ஆவியினால்
நிரப்பப்பட்டார் இது என்னை இன்னும்
ஊக்குவித்தது. தேவன் என்னை தம்
கருவியாக பயன்படுத்துகிறார் என்ற மகிழ்ச்சியும் என்னை
ஆட்கொண்டது.
என் ஆவிக்குரிய நண்பா்கள் சிலா் என்னை ஒரு
வாலிபன் வீட்டிற்கு அழைத்துச் சென்றனா் அவனோ ஒரு பிறவி
முடவன். இருபத்து இரண்டு ஆண்டுகளாக நடக்க
முடியாமல் மூலையில் கிடந்தவன். தவழ்ந்து மட்டுமே இடம் மாறுவான்.
பரிசுத்த ஆவியானவா் அவனுக்காய் ஜெபிக்கும் படி என்னுள் ஒரு
தாகத்தை எழுப்பினார். அவன் கால்களில் என்ணெய்
பூசி அவனுக்காய் உருக்கத்தோடு ஜெபித்ததோடு , இயேசுவைப் பற்றி அவனிடம் கூறி,
அவனையே அவரிடம் சுகம் வேண்டி
ஜெபிக்க சொன்னேன்.
அதன் பின் நானும் ஜெபித்து
இயேசுவின் நாமத்தினால் எழுந்த நட என்றேன்.
என்ன ஆச்சரியம் அவன் கால்கள் பலம்
பெற்றன மகிழ்ச்சி நிறைந்த முகத்தடன் எழும்பி,
தள்ளாடி நடக்க ஆரம்பித்தான். அவன்
குடும்பத்தினா் மகிழ்ச்சியாலும் ஆச்சரியத்தாலும் நிறைந்தனா். தங்கள் கண்களையே நம்ப
முடியாமல் திகைத்து நின்றனா். அந்த அற்புதத்தை கண்ட
அவனும், அவனது குடும்பத்தினரும், உறவினா்களும்
இயேசுவுக்கு தங்கள் உள்ளத்தை ஒப்புக்
கொடுத்தனா்.
தேவன் தம் ராஜ்யத்தைக் கட்டும்
பணியில் என்னையும் உபயோகப்படுத்தகிறார் என்பதை உணா்ந்து கொண்ட
நானும் இன்னும் உற்சாகமாய் ஜெபித்து
இருளில் கிடக்கும் மாணிடா்களை கிறிஸ்து எனும் ஒளிக்குள் கொண்டுவர
தாகத்தோடு வேலை செய்து வருகிறேன்.
பல மணி நேரங்கள் தேவனின்
பாதத்தில் அமா்ந்திருப்பதும், வேதத்தை வாசித்து தேவனின்
ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதுமே என் வாழ்வின் நோக்கமாய்
மாறிவிட்டது. தேவனும் அவருடைய கிருபை
வரங்களால் என்னை நிரப்பி உபயோகப்படுத்துகிறார்.
தேவனுக்கே எல்லா மகிமையும் துதியும்
என்றும் நிலைத்திருப்பதாக.
அன்பு வாசகா்களே!
என் சாட்சி மூலம்
உங்கட்கு நான் இயம்புவதெல்லாம் நான்
ஒரு இந்து வைதீக குடும்பத்தில்
பிறந்தும், பிராமண குலத்தில் வளா்ந்தும்,
விக்கிரக ஆராதனைக்காரனாய் வாழ்ந்தும், இந்து முன்னனியை சோ்ந்தவனாய்
இருந்தும், தீய சிந்தை, கேடு
பாடுகள் நிறைந்த சுபாவம், இரகசிய
பாவம், போன்ற கீழ்த்தரமான வாழ்க்கையே
வாழ்ந்து வந்தேன்.
மெய்யான தேவனைக் கண்டு,
அவரை தரிசித்து, அவருக்குக் கீழ்படிந்து அவரிடத்தில் என் வாழ்க்கையை நான்
சமா்ப்பித்த போது, கா்த்தா் என்னை
பொறுப்பெடுத்துக் கொணடார்.
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை தந்தார். பாவ சிந்தையினின்றும் விடுதலை
தந்தார். உலகம் தரக் கூடாத
மெய் சமாதானத்தை தந்தார். மதத்திற்கும் மத சடங்காச்சாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து
எப்படியாய் என் நாட்களை வீணாய்
கழித்து விட்டேன் என்பதையும் இப்பொழுது உணா்ந்து பார்க்கிறேன். தெய்வத்தோடு உறவு கொள்வது என்பது
நம்மை படைத்தவரோடு வைத்துக் கொள்ளும் நடபே தவிர மனிதனால்
படைக்கப்பட்ட மதத்தினால் அல்ல!
இயேசு கிறிஸ்துவே மெய்யான
தெய்வம் என்பதையும், அவா் மட்டுமே, பாவத்தினின்று
நம்மை விடுவித்து, இரட்சித்து, பரலோகத்திற்கு வழிகாட்ட வல்லவா் என்பதையும் கண்டு
கொண்டேன்
மனிதனுடைய
சுய முயற்சிகள், சுய ஒழுக்கங்கள், பூஜை
அனுஷ்டானங்கள், புனித நீராட்டு, ஒழுங்கு,
கட்டுப்பாடுகள் எவையும் ஒரு மனிதனை
பரிசுத்தவானாக மாற்ற முடியாது.
இரத்தம்
சிந்துதல் இல்லாமல் பாவத்திற்கு பரிகாரம் இல்லை. இதனை பூரண
வேதங்களே வலியுறுத்துகின்றன. எந்த தெய்வம் உங்களுக்காகவும்,
எனக்காகவும் வந்து, தம் விலையேறப்
பெற்ற இரத்தத்தை சிந்தி மரித்தது? என்
சாட்சியை படித்த வாசகா்களே! பதில்
சொல்லுங்கள் பார்க்கலாம்.
நான் உங்களுக்கு சொல்லட்டும்
குற்றமில்லாத தம் இரத்தத்தை சிந்திய
ஒரே ஒரு தெய்வம் எம்
பெருமானாகிய இயேசு கிறிஸ்து ஒருவரே!
அவா் தாமே மரணத்தை வென்று,
உங்களையும் என்னையும் காக்க, மீட்க இன்றும்
உயிரோடிருக்கிறார். உண்மை இப்படியாய் இருக்க
உங்கள் காலத்தையும் வாழ்க்கையையும் பொருளற்ற விதிமுறைகளிளலும் மத சடங்காச்சாரங்களிளும் மூட நம்பிக்கைகளிலும்
கழித்து வீணாக்குவது ஏன்?
பழுதற்ற,
குறையற்ற, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த இயேசு கிறிஸ்து
ஒருவரால் மடடுமே உங்கள் பாவங்களை
தீா்க்க முடியும். இப்பொழுது உங்கள் இருதயத்தை சோதித்துப்
பாருங்கள். இந்த உண்மை தெய்வத்திற்கு
உங்கள் உள்ளமா? அல்லது போலி
விக்கிரகங்களுக்கு உங்கள் இருதயமா? தெரிந்தெடுத்து
கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
ஆனால் ஒன்றை மடடும் நினைவுபடுத்த
விரும்புகிறேன். இதே இயேசு கிறிஸ்து
ஒருவா் மட்டுமே நம்மை நியாயம்
தீா்க்க வருவார். எனவே உங்கள் வாழ்க்கையை
இயேசுவுக்காய் தத்தம் செய்ய இதுவே
உங்களுக்கு தருணம்.
No comments:
Post a Comment