Thursday, 18 April 2013

சூரியப் புயல் - நிறைவேறும் தீர்க்கத்தரிசனங்கள்



           
உலகின் கடைசி நாட்களில் சூரியன் கருப்பாகி இரு ண்டுபோய் ஒளிகொடாதிருக்கும் என பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. நிகழ்காலங்களில் நடை பெறும் வான ஆராய்ச்சி யானது அதையே தான்சொல்லிக்கொண்டிருக்கிறது. சூரியனில் உண்டாகி பெரிதாகிக் கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கிறார்கள். அதனால் உண்டாகும் காந்த புயலால் உலகின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்துக் கூற ஒருவரும்மில்லை.


யோவேல் 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.


ஏசாயா 13:10 வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.


மத்தேயு 24:29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,


மாற்கு 13:24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்.


அப்போஸ்தலர் 2:20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.


வெளி 6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.


வெளி 16:8 நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

விஞ்ஞானிகளின் எச்சரிக்கை

                                சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசாவிஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இது செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் தகவல்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்குதல் அச்சம் அதிகம் இருந்தது. உலகம் முழுவதும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் பயம் கலந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வுகளை உற்று கவனித்து வந்தனர்.

                       இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

               பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து,இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.

                              இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். பூமியின் வடமுனையில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன்றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜனவரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றியதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

                             சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013-ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ’மின் காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
                          
                          சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது. இதனால் செயற்கைக் கோள்கள், கப்பல்கள், விமானங்கள், வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத் தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்சினை ஏற்படும். பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும்

                                                    இந்த பாதிப்பை சரி செய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல்தாக்குவது போல் பூமியை தாக்கும் என்றுநாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் தெரிவிக்கிறார்.

நன்றி : hichristians

No comments:

Post a Comment