அன்பானவர்களே
ஆதியில் பாம்புகள் கால்களுடன் வாழ்ந்தன என்பதையும் கடவுளின் சாபத்தாலேயே
பாம்புகள் கால்கள் இன்றி போயின என்பதையும் வேதாகமத்தில் இருந்து அறியலாம்.
வேதாகமத்தை விமர்சனம் செய்பவர்கள் இக்கூற்றை கிண்டலாக விமர்சனம் செய்வது வழமை. முக்கியமாக இஸ்லாமிய அறிஞரான pj அவர்கள் எழுதிய “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தில் இதைக்குறித்து எழுதி வேதாகமத்தை விமர்சித்துள்ளார்.
அவர்
அப்புத்தகத்தில் எழுதுகையில் “ஏவாளை கெடுத்ததினால் தான் பாம்புகள் ஊர்ந்து
செல்கின்றன என்றால் ஏவாளை கெடுப்பதற்கு முன்னால் கால்களால் அவை நடந்து
சென்றனவா?” என்று புத்திசாலித்தனமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். இன்று அவரது கேள்விக்கான பதில் கொடுக்கும் காலம் வந்துள்ளது.
“மாலை மலர்” எனும் செய்தித் தளத்தில் வந்துள்ள செய்தியையும் அதன் தொடுப்பையும் தருகிறேன் வாசியுங்கள்.
/////கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்புகள்
ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. இதற்கு முன்பு
கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.
பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். சுமார் 19 “இஞ்ச்” நீளமுள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
இவை சுமார் 9 1/2 கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில்
கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு
கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில்
கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.அந்த எலும்புகள் “ 1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.
இந்த
வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும்,
பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பல
கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள்
காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக
மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.////
ஒன்றை
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வேதாகமம் என்றும் பொய்ப்பதில்லை. இன்று
பொய் என்று கூறப்படும் காரியங்கள் யாவுமே ஒருநாள் உண்மை என்று தேவனால்
நீரூபிக்கப்படும். வேதாகமம் கூறிய பல விஞ்ஞான கருத்துகள் இப்படித்தான்
முதலில் மறுக்கப்பட்டு பின்பு ஏற்றுக் கொள்ளப்படுவது வழமையானது.
paralogapathi
No comments:
Post a Comment