உலகில் வடக்கு பாகமாகிய
வடதுருவத்தில் சூரிய வெப்பம் மிக குறைவாக இருப்பதாலும், அநேக மாதங்கள் சூரியனை கானக்கூடாதபடி
இரவு காலம்
நீடித்திருப்பதாலும், அந்நிலப்பரப்பு உறைபனியால் மூடப்பட்டிருக்கும். அங்கு
எஸ்கிமோ என்னும் ஓர் இனத்தார் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வீடு உறைபனிக்கட்டிகளை
கொன்டே கட்டப்பட்டிருக்கும். பிரயானம் செய்ய நாய்களால் இழுத்து செல்லப்படும் ஸ்லெட்ஜ்
என்னும் வண்டியை உபயோகிப்பர்.
அங்குள்ள பனிக்
காடுகளில் ஓநாயும், கரடியும் அதிகம் காணப்படும். எஸ்கிமோக்களும், இம்மிருகங்களும் நீரில்
வாழும் மீன்களையும் ஸீல் என்னும் மிருகத்தையும் வேட்டையாடி உண்கின்றனர். உறைபனி மிகுதியாய்
மூடப்பட்டிருக்கும் இந்நாட்களில் ஓநாய்கள் கூட்டங்கூட்டமாய் வந்து எஸ்கிமோக்களையும்
அவர்களின் நாய்களையும் கொன்று தின்றுவிடும். ஆதலால் இந்த ஓநாய்களுக்கும் எஸ்கிமோக்ளுக்கும்
ஒயாத போராட்டமுண்டு.
ஓநாய்களை அழிக்க
அம்மக்கள் ஓர் உபாயத்தை கண்டுபிடித்தனர். கூரிய கத்தி ஒன்றினை எடுத்து அதில் ஸீல் மிருகத்தின்
இரத்தத்தை தடவி பனியில் நட்டு வைத்து விடுவார்கள். இரத்த வெறிபிடித்த ஓநாய்கள் மோப்பம்
பிடித்து வந்து கத்தியிலுள்ள இரத்தத்தை நக்கி எடுக்கும். அப்போது கத்தியின் கூர்மையானது
ஓநாயின் நாக்கினை பாளம் பாளமாக அறுத்துவிடும்.
அப்போதும் ஓநாய்கள்
இரத்தம் தன் வாயிலிருந்து வருவதை அறியாமல் கத்தியிலிருந்து வருவதாக நினைத்து கொண்டு
கத்தியை மீண்டும் மீண்டும் நக்கி தன் இரத்தததையே குடிக்கும். இதனால் ஓநாயின் உடலில்
அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்துபோகும். இவ்விதமாய்
ஓநாயின் அட்டகாசங்களை ஒழித்துவருகின்றனர்.
அவ்வண்ணமே பாவம்
செய்யும் ஒவ்வொரு மனிதனும் பல தீயபழக்கங்களில் ஈடுபட்டிருப்போரும் தாங்கள் எதோ இன்பம்
அனுபவிப்பதாய் எண்ணி அப்பாவ செயல்களை விட்டுவிட மனமின்றி அவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படிபட்டவர்களுடைய சரீரமும், மனதும் அதிகதிகமாய் பாதிக்கப்பட்டு இறுதியில் அந்த ஓநாய்களின்
முடிவை அடைகின்றனர்.
உதாரணமாய் போதை
மருந்து, விபசாரம், வேசித்தனம், நீலப்படங்களை பார்த்தல், குடி, புகை பிடித்தல், புகையிலை
போடுதல் என பலவகையான பாவங்களில் சிக்கி இவையெல்லாம் தனக்கு இன்பத்தை தருவதாக நினைத்து
அதில் ஈடுபட்டு பின்பு அதற்கு அடிமையாகி தனக்கும் பிரச்சனைகளை உண்டாக்கி கொண்டு தன்னை
சுற்றியுள்ளவர்களுக்கும் தன் குடும்பத்திற்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணி பாரமாய் மாறிவிடுகின்றனர்.
மேற்கண்ட பாவங்கள்
முதலில் நமக்கு இன்பத்தை தருவதாகவே இருக்கும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் அந்த ஓநாய்கள்
இரத்தம் கத்தியிலிருந்து வரவில்லை தன் வாயிலிருந்துதான் வருகின்றது என்பதை அறியாமல்
தன் இரத்தததை தானே குடித்து இறுதியில் மாண்டுபோனதை போல் நாமும் மேற்கண்ட பாவங்களில்
சிக்கி அடிமையாகி இருக்கின்றோம்.
இத்தகைய அடிமைதனத்திலிருந்து
உலகில் எவராலும் நம்மை மீட்கவே முடியாது. அப்படி மீட்க முடியும் என்றால் அது இயேசு
கிறிஸ்த்துவினால் மட்டுமே முடியும். 1 யோவான் 1:7 ல் கூறியுள்ளபபடி
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
ஆம் பிரியமானவர்களே
தீய பழக்கங்கள் நம்மை பரலோகம் கொண்டு செல்லாது. அதன் வழியோ நரகம்.
அன்பான சகோதரனே
சகோதரியே நீ பரலோகம் செல்லவேண்டுமா?
அப்படியானால் பரலோகம்
செல்ல தடையாக உள்ள காரியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எதாவது ஒன்று உன்னிடம்
இருந்தாலும் உன்னால் பரலோகம் செல்ல முடியாது.
பரலோகம்
செல்ல தடையாக உள்ள காரியங்கள்
Ø
விபசாரம்
Ø
வேசித்தனம்
Ø
அசுத்தம்
Ø
காமவிகாரம்
Ø
விக்கிரகாராதனை
Ø
பில்லிசூனியம்
Ø
பகைகள்
Ø
விரோதங்கள்
Ø
வைராக்கியங்கள்
Ø
கோபங்கள்
Ø
சண்டைகள்
Ø
பிரிவினைகள்
Ø
மார்க்கபேதங்கள்
Ø
பொறாமைகள்
Ø
கொலைகள்
Ø
வெறிகள்
Ø
களியாட்டுகள்
முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச்
செய்கிறவர்கள் தேவனுடைய
ராஜ்யத்தைச் சுதந்தாரிப்பதில்லை.
(கலாத்தியர் 5 : 19-21)
பாவத்தின்
சம்பளம் மரணம் மட்டுமல்ல நரகம்.
தீய பழக்கங்களிலிருந்து விடுபட நீ யாராக இருந்தாலும் எம்மதத்தவராக இருந்தாலும்,
எந்த நிலையில் இருந்தாலும் இயேசுவிடம் ஓடிவா. அவர் உண்ணை விடுதலையாக்குவார். பரிபூரன
சுகத்தை தருவார் “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை”
என்று (யோவான் 6:37) இயேசு கூறுகின்றார்.
கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
(அப்போஸ்தலர் 16:31) ஆமென்.
No comments:
Post a Comment