ஏசாயா
41:13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்
பிடித்து: பயப்படாதே,
நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
ஏசாயா
50:9 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்;
என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள்
எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப்பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
சங்கீதம்
146:5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக்
கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல்
நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
2 தீமோத்தேயு
4:17 கர்த்தரோ எனக்குத் துணையாகநின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும்,
புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின்
வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.
சங்கீதம்
115:11 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும்
அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
சங்கீதம்
70:5 நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய்
வாரும்: நீரே என் துணையும்
என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
சங்கீதம்
63:7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே
களிகூருகிறேன்.
சங்கீதம்
33:20 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது;
அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
1 நாளாகமம்
12:18 ………உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும்
சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை
நிற்கிறார்.
2 நாளாகமம்
14:11 …. கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்;
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய
நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு
எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்;
மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்;.
No comments:
Post a Comment